Sunday, 3 August 2025

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb)P


*சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்* 






*படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதே ஐபி கிளைம்ப் சேவையின் நோக்கம்*


அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதைத் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுப்படுத்தும் ஃபிப்செயின் டெக்னாலஜி, ஐபி கிளைம்ப் (IP Climb) எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. படைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ள இன்றைய காலகட்டத்தில் இதில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐபி கிளைம்ப் தொடங்கப்பட்டுள்ளது. 


திரைப்பட மற்றும் ஊடக அறிவுசார் சொத்துகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகை சட்ட உதவிகளையும் வழங்கும் ஐபி கிளைம்ப், படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


சென்னையில் நடைபெற்ற ஐபி கிளைம்ப் சேவையின் தொடக்க விழாவில் கிரியா லா சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் எம். எஸ். பரத், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி மற்றும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நடிகர் டி. சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். 


ஐபி கிளைம்ப் சேவை குறித்து பேசிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜி. கே. திருநாவுக்கரசு, "அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்போடு தொடங்கப்பட்டுள்ள ஐபி கிளைம்ப் படைப்புகளுக்கு முழு சட்டப் பாதுகாப்பை வழங்கி எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலன்களை உரிய முறையில் பாதுகாக்கும். இந்த புதிய சேவை திரையுலகின் வளர்ச்சிக்கு மேலும் வழி வகுக்கும்," என்றார். 


கிரியா லா சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் எம். எஸ். பரத் கூறுகையில், "2023-24 நிதியாண்டில், இந்தியாவின் பதிப்புரிமை அலுவலகம் அனைத்து வகை படைப்புகளையும் உள்ளடக்கிய 38,002 பதிவுச் சான்றிதழ்களை வழங்கியது. இவற்றில் திரைப்படங்களுக்கு 455 சான்றிதழ்களும் இசைப் படைப்புகளுக்கு 135 சான்றிதழ்களும் மட்டுமே வழங்கப்பட்டன. அதாவது, வெளியான படங்கள் மற்றும் பாடல்களில் 8 சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஐபி ஐபி கிளைம்ப் முன்னெடுப்பு காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம்," என்றார். 


மேலும் தகவல்களுக்கு ipdesk@producerbazaar.com எனும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள் அல்லது 93441 85478 என்ற எண்ணை அழையுங்கள்.


--



No comments:

Post a Comment