Saturday, 16 August 2025

வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா”

 *வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில்  ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!!* 



துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது.


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்  டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய  உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின்  முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி

இசை – ஜேக்ஸ் பீஜாய்

எடிட்டிங் – சாமன் சகோ

நிர்வாக தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி

கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்

தயாரிப்பு வடிவமைப்பு – பாங்லான்

கலை இயக்கம் – ஜிது செபாஸ்டியன்

மேக்கப் – ரோனெக்ஸ் சாவியர்

உடை வடிவமைப்பு  – மெல்வி J, அர்ச்சனா ராவ்

ஸ்டில்ஸ் – ரோஹித் கே.சுரேஷ், அமல் K.சதார்

சண்டைக் காட்சிகள் – யானிக் பென்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு  – ரினி திவாகர், வினோஷ் கையமல்

முதன்மை உதவி இயக்குநர் – சுஜித் சுரேஷ்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

No comments:

Post a Comment