*இந்தியாவின் இதயத்துடிப்பை கொண்டாடும் 'மிடில் கிளாஸ்' திரைப்படம்!*
பணக்காரர்களும் மிகப்பெரும் வசதி படைத்தவர்களும் வாழும் இந்த உலகில் அதிகம் பேசப்படாத இந்தியாவின் மிடில் கிளாஸ் ஹீரோக்களைப் பற்றி பேசவருகிறது புதிய திரைப்படம்.
மாதத்தவணை, தள்ளுபடி, 1BHK சுற்றி இருக்கும் கனவு என நகைச்சுவை, எமோஷன்ஸ் என பல விஷயங்களை கொண்டது மிடில் கிளாஸ் வாழ்க்கை. இந்தப் படம் வெறும் கதை மட்டுமல்லாது, ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்த்து, சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டு, வீட்டுக்கடனை விட அதிக சுமையாய் இருக்கும் மாதத்தவணை என மிடில் கிளாஸ் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி பேசுகிறது. பார்வையாளர்கள் பலரின் வாழ்வையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் படம் உருவாகியுள்ளது.
மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வளர்ந்து வரும் திறமையாளர்களைக் கண்டறிவதில் பெயர் பெற்ற மறைந்த தயாரிப்பாளர் டில்லி பாபுவால் நம்பிக்கைக்குரிய கதையாக இந்த படம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டது. அவருடைய நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக 'மிடில் கிளாஸ்' படக்குழு சிறந்த முறையில் பணியாற்றியுள்ளது.
*தொழில்நுட்பக்குழு விவரம்:*
எழுத்து, இயக்கம்: கிஷோர் முத்துராமலிங்கம்,
தயாரிப்பு: தேவ் மற்றும் கே.வி. துரை,
ஒளிப்பதிவு: சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்,
இசை: ப்ரணவ் முனிராஜ்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை இயக்குநர்: MSP மாதவன்,
சண்டைப் பயிற்சி: டான் அசோக்,
ஆடை வடிவமைப்பாளர்: ஜே. நந்தா,
ஒப்பனை: வினோத் சுகுமாறன்,
ஒலிக்கலவை: எம்.ஆர். ராஜகிருஷ்ணன்,
விஎஃப்எக்ஸ்: ரெசோல் எஃப்எக்ஸ்,
டிஐ: வர்ணா டிஜிட்டல் ஸ்டுடியோ,
மார்க்கெட்டிங் & புரோமோஷன் மேற்பார்வை: கேவி மோதி & DEC,
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி,
சட்ட ஆலோசனை: எம்.வி. பாஸ்கர்.
No comments:
Post a Comment