Friday, 12 September 2025

Bomb Movie Review

Bomb Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  bomb ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு.இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது vishal venkat  .  இந்த படத்துல arjun das, Shivathmika Rajashekar,  Kali Venkat, Nasar, Abhirami, Singampuli, Bala Saravan, Tsk னு பலர் நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருளாம். 

இது ஒரு சாதாரண கதையை இருந்தாலும் ரொம்ப unique அ இருந்தது னே சொல்லலாம். Kaalakammaipatti ன்ற ஊர் ல தான் இந்த படத்தோட கதை நடக்குது. ஏதோ ஒரு பிரச்சனை னால இந்த ஊர் ரெண்டா பிரியுது. ஒரு ஊருக்கு Kaalapatti நும் இன்னொரு ஊர்க்கு  Kammaipatti நும் பேர் வச்சுடுறாங்க. இந்த ரெண்டு ஊர் ல இருக்கற மக்கள் follow பண்ணற beliefs எல்லாமே வேற வேறயா தான் இருக்கும். இந்த ஊர் யா சேர்ந்தவர் தான் kathiravan அ நடிச்சிருக்க kaali venkat . ஊர் ல இருக்கறவங்க எல்லாருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இவரு ஒரு நாத்திகவாதி அ தான் இருக்காரு. ஏதோ ஒரு காரணத்துனால இவரு திடுருனு இறந்துடுறாரு. இவரோட body ல ஒரு சில changes ஏற்படுது இது கடவுள் பண்ணற அதிசயம் நும் ரெண்டு ஊர் மக்கள் யும் இவரோட body அ இந்த ஊர் ல தான் தகனம் பண்ணனும் னு சண்டை போடுறாங்க. kathiravan க்கு mani muthu னு ஒரு close friend இருப்பாரு. இந்த manimuthu தான் arjun das . இவருக்கு kathiravan இன்னும் உயிரோட தான் இருக்கான் ன்ற நம்பிக்கை இருக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் போயிடு இருக்கும் போது இன்னொரு பக்கம் ஒரு youtuber subscribers அதிகமா வரதுக்காக நெறய வேலைகள் பண்ணுறாரு. இன்னொரு பக்கம் ஒரு governement officer இந்த மாதிரி மூடநம்பிக்கை நெறஞ்ச ஊர் ல posting போட்டதுனால ரொம்ப கஷ்டப்படுவாரு. இன்னொரு பக்கம் இந்த ரெண்டு ஊர் தலைவர்களையும் அவங்களோட group தான் பெருசு தான் தீவிரமா சண்டை போடுறாங்க. இன்னொரு பக்கம் இந்த சண்டையை நமக்கு சாதகமா மாத்தணும் ஒரு அரசியல் வாதி பிளான் போடுறான். இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.  


இந்த படத்துல நெறய விஷயங்களை கொண்டு வந்திருக்காங்க. politics , satire , comedy , superstition னு எல்லாத்தயும் அழகா balance பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். கிராமத்துல மக்கள் எப்படி மூடநம்பிக்கையை நம்பி ஒரு தொலை நோக்கு பார்வை இல்லாம இருக்காங்க ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. என்னதான் kathiravan ஓட body க்கு ரெண்டு ஊர் யும் சண்டை போட்டாலும், manimuthu மட்டும் தான் தன்னோட friend உயிரோட இருக்கான் னு ரொம்ப தீர்கமா இருக்காரு. இவரை மட்டம்தட்டி , கேலி பண்ணி மக்கள் எல்லாரும் manimuthu அ போட்டு அடிப்பாங்க. இதெல்லாம் பாக்கும் போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். kaali venkat முக்காவாசி படத்துல dead body அ தான் நடிச்சிருப்பாரு. இருந்தாலும் climax scenes ல இவரோட performance அடிபோலி யா இருந்தது. 

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நெறய விஷயங்களை இந்த படத்துல கொண்டு வந்ததுனால படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் audience ஓட கவனத்தை ஈர்க்குற மாதிரி interesting அ கொண்டு வந்திருக்காங்க. கண்மூடி தனமான நம்பிக்கை னால மக்கள் திசை மாறிப்போகும் போது power ல இருக்கற ஆட்கள் எப்படி அவங்களுக்கு சாதகமா பயன்படுத்துறாங்க ன்றது தான் இந்த படத்தோட core theme னே சொல்லலாம். படத்தை பாக்கும் போது ஒரு பக்கம் emotional connection இன்னொரு பக்கம் comedy னு ரொம்ப அழகா கதையை கொண்டு வந்திருக்கங்க.   


இந்த படத்தோட actors ஓட performance  னு பாக்கும் போது arjun das  ஓட acting  அ பத்தி சொல்லியே ஆகணும். . இவரோட கம்பீரமான குரல் மூலமா மக்கள் கிட்ட தனி பேர் எடுத்துருக்காரு னே சொல்லலாம்.usual அ இவரு நடிக்கிற படங்கள் நாளே அதுல ஒரு தனித்துவம் இருக்கும் அதோட அந்த கதையும் நல்ல இருக்கும் ன்ற எதிர்பார்ப்பு மக்கள் கிட்ட அதிகமாவே உண்டு. இவரு நடிச்ச master, kaithi, aneethi ஒரு நல்ல உதாரணம் னே சொல்லலாம். hero  villain  னு ரெண்டு role  ளையும் செமயா நடிச்சாலும் இந்த படத்துல ஒரு comedy  role  அ எடுத்துருக்காரு னு தான் சொல்லணும். இந்த படத்துல இவரோட dialogue delivery, body language னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. தன்னோட close friend ஓட body க்காக சண்டை போடுற ஊருக்கு மத்தில,  தன்னோட friend உயிரோட தான் இருக்கான் னு நம்பிக்கையை இவரு பேசும் போது ரொம்ப emotional ஆவும் sincere ஆவும் இருந்தது.   balasaravanan ஓட comedy scenes ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. kaali venkat மறுபடியும் ஒரு super ஆனா role ல நடிச்சிருக்காரு. படத்துல பாதிக்கு மேல deadbody அ நடிச்சாலும் இந்த ரெண்டு ஊரையும் எப்படியாவுது ஒண்ணா  சேக்கணும் ன்ற இவரு படுற கஷ்டம் ரொம்ப natural அ இருந்தது.  Shivathmika Rajashekhar க்கு screen presence கம்மியா இருந்தாலும் இவங்க வர scenes  எல்லாம் super அ இருந்தது. இவங்க kaali venkat ஓட தங்கச்சிய தான் இருப்பாங்க. manimuthu யும் kathir யும் எப்படி இந்த ஊர் அ ஒண்ணா சேக்குறாங்க ன்றது தான் கதையை இருக்கு. nasar ஒரு politician அ செமயா நடிச்சிருந்தாரு. abhirami தான் இந்த ஊர்க்கு புது collector அ வந்திருப்பாங்க. இந்த ஊர்ல ஒரு மாற்றத்தை கொண்டு வரணும் இவங்க பண்ணற efforts எல்லாமே அருமையா இருந்தது. இந்த படத்துக்கு d imman தான் இசை அமைச்சிருக்காரு . இவரோட songs and bgm ரெண்டுமே இந்த படத்தோட கதைக்கு அழகா பொருந்தி இருந்தது. 

   

சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment