Thursday, 11 September 2025

Kaayal Movie Review

Kaayal Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  kaayal  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம்  sep 12 அன்னிக்கு  release ஆகா போது .இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது damayanthi  .  இந்த படத்துல  Lingesh, Gayathrie Shankar, Swagatha S. Krishnan னு பலர் நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருளாம். 



கடல்  இருக்கற உயிரன்களை பத்தி research பண்ணற வேலைல இருக்கற lingesh. இது மட்டும் இல்லாம இவரு ஒரு social activist ஆவும் இருக்காரு. gayathrie anti  suicide  campaigne  ல ரொம்ப active அ மக்கள் க்கு ஒரு awareness அ create பண்ணற person அ இருக்காங்க. ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரும் love பண்ணுறாங்க. தன்னோட love அ பத்தி காயத்ரி அப்பாவான isac கிட்ட சொல்ராங்க. isac assistant commissioner அ work பண்ணிட்டு இருப்பாரு. தன்னோட பொண்ணோட சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் குடுத்து இந்த love க்கு ok சொல்லுறாரு. ஆனா காயத்ரி ஓட அம்மாவை இருக்கற anumol இதை accept பண்ணிக்க மாட்டாங்க. anumol இந்த காதல் அ எதிருக்கற காரணம் lingesh தாழ்ந்த ஜாதிய சேந்தவரா இருப்பாரு. அதுனால தன்னோட பொண்ணோட எதிர்ப்பையும் மீறி இவங்களோட caste லேயே ஒரு  பையன பாத்து காயத்ரியை கட்டி வைக்கிறாங்க. இந்த marriage காயத்ரி க்கு ரொம்ப torcher அ இருக்கு. இதுனால கல்யாண ஆனா 6 மாசத்துல வேற வழி இல்லாம suicide பண்ணிக்கறாங்க. இவங்களோட  மரணம் எதிர்பாராத ஒரு கனமா காயத்ரி ஓட குடும்பத்துக்கு வருது. இதுனால காயத்ரி ஓட அப்பாக்கும் அம்மாக்கும் ஒரு பிரிவு ஏற்படது. காயத்ரி ஓட அஸ்தி கரைக்குறதுக்காக pondichery ல இருந்து dhanushkodi க்கு இவங்களோட parents வருவாங்க. இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேக்கணும்ன்றதுக்காக இவங்களோட family friend யும் கூடவே வருவாரு. இந்த friend தான் ramesh thilak , இவரு ஒரு Psychiatrist அ இருப்பாரு. gayathri  ஓட parents  இந்த journey  ல என்ன கத்துக்கறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


gayathri  ஓட acting ரொம்ப natural அ இருந்தது. இவங்களோட வாழக்கை  ரொம்ப peaceful அ இருந்தாலும் ஒரு கஷ்டமான முடிவுக்கு தள்ள பட்டு வாழக்கையை முடிச்சிட்டாங்க ன்றது தான் ஒரு சோகமான விஷயமா இருக்கு. காயத்ரி ஓட நினப்புலயே வாழக்கையை lead பண்ணுறாரு lingesh. இவரோட acting யும் எதார்த்தமா இருந்தது . அது மட்டும் இல்லாம இவரோட வேலை பாத்துட்டு இருக்கற swagatha lingesh அ love பண்ணுவாங்க. இவங்களோட love அ accept பண்ண முடியாம தவிக்கிற scenes எல்லாமே ரொம்ப emotional அ நடிச்சிருக்காரு. issac இது வரைக்கும் side character ஆவோ இல்ல villain ஆவோ தான் நடிச்சிருக்காரு. இந்த படத்துல ஒரு பாசக்கார அப்பாவா ஒரு genuine ஆனா performance அ வெளி படுத்தி இருக்காரு. ramesh thilak ஒரு psychiatrist அ ஒரு super ஆனா நடிப்பை வெளி படுத்தி இருக்காரு. anumol ஓட நடிப்பும் அருமையா இருந்தது. இந்த கதைல இவங்க கிட்ட தட்ட வில்லன் னே சொல்லலாம். இவங்களோட character transformation யும் நல்ல இருந்தது. 


படத்தோட title க்கு ஏத்த மாதிரி முக்காவாசி கதை கடல் சார்ந்த இடங்கள் ல தான் எடுத்துருக்காங்க. இந்த மாதிரி locations எல்லாமே ரொம்ப peaceful ஆவும் character ஓட emotions னு எல்லாமே அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு cinematographer. கதையோட தாக்கத்தை audience ஓட மனுசுல நிக்கற மாதிரி தான் justin ஓட இசை அமைச்சிருக்கு. இந்த படத்தோட editing யும் sharp and crisp அ இருக்கு.   


ஒரு self  reflection  அ அமைச்சிருக்கற கதை தான் இந்த kayal . சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment