Friday, 17 October 2025

Bison Movie Review

Bison Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bison படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு release ஆனா இந்த படத்தை இயக்கி இருக்கிறது mari selvaraj . dhruv விக்ரம்,  Pasupathy, Ameer, Lal, Anupama Parameswaran, Rajisha Vijayan, Hari Krishnan, Azhagam Perumal and Kalaiyarasan னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இது ஒரு sports drama film . 2023 ல இந்த படத்தை பத்தி பேசும் போது manathi ganesan ன்ற ஒரு kabadi player ஓட life story அ base பண்ணி இந்த கதையை எடுத்திருக்கோம் னு director சொல்லிருக்காரு. ஆனா அதுக்கு அப்புறம் இது ஒரு fictional story தான் னு share பண்ணிருந்தாங்க. இந்த படத்துக்காக dhuruv vikram sports க்கான training லாம் எடுத்துகிட்டாராம். சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

kittan அ நடிச்சிருக்க dhruv vikram ஒரு கபடி player. இவரும் இவரோட குடும்பமும் இருக்கற சின்ன ஊர் தான் vanathi. இவரோட அப்பா தான் velusamy அ நடிச்சிருக்க pasupathy. அப்புறம் இவருக்கு sister அ வராங்க raji அ நடிச்சிருக்க rajisa vijayan . இந்த ஊர் ல இவரோட வாழக்கை ரொம்ப கஷ்டம் னே சொல்லலாம். இவரு தாழ்ந்த ஜாதி குடும்பத்தை சேந்தவரு அதுனால ஏகப்பட்ட politics அ சந்திப்பாரு. இவங்க ஊர் ல ரெண்டு கூட்டமா அ ஆட்கள் பிரிஞ்சு இருப்பாங்க. அதுல ஒரு கூட்டத்துக்கு தலைவரா இருக்காரு pandiyaraj  அ நடிச்சிருக்க ameer  அப்புறம் இன்னொரு கூட்டத்துக்கு தலைவரா இருக்காரு kandhasamy அ நடிச்சிருக்க lal . இவங்களுக்கு பழி தீத்துக்கணும் னா மத்தவங்கள கொலை தான் பண்ணுவாங்க. அந்தளவுக்கு மோசமா இருக்காங்க ரெண்டு group யும். இந்த மாதிரி ஜாதி பிரச்சனை ஒரு பக்கம் ஊர் ல நடக்கற politics எல்லாம் தாண்டி kittan india க்காக விளையாடுற team ல சேந்து ஆடுவாரா இல்லையா? இவரோட இந்த கனவு க்கு இந்த ஊர் மக்கள் support பண்ணுவாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


mariselvaraj ஓட படங்கள நம்ம பாத்திருப்போம். அவரோட படங்கள் ல ஜாதி பிரச்சனை, oppression , inequality , injustice னு நெறய விஷயங்களை காமிச்சிருப்பாரு. அதே சமயம் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு solution யும் சொல்லிருப்பாரு. இதெல்லாமே இந்த படத்துலயும் இருக்கு னு சொல்லலாம். இருந்தாலும் இந்த மாதிரி  manathi ganeshan ஓட வாழ்க்கைல நடந்த ஒரு சில விஷயங்களோட சேந்து fictional ஆவும் இந்த  கதையை கொண்டு வந்திருக்காங்க. usual அ mari selvaraj ஓட படங்கள் ல hero தான் எல்லா பிரச்சனைகளுக்கு எதிரே குரல் கொடுப்பாரு. பரியேறும் பெருமாள் ல இருந்து மாமன்னன் வரைக்கும் இந்த pattern அ நீங்க பாக்கலாம். ஆனா இந்த படத்துல kitta வை பாத்தீங்கன்னா நல்ல விளையாடி ஒரு தனி பேரு எடுக்கணும் னு ஒரு வெறி இருக்கும் இருந்தாலும் ஊர் ல நடக்கற பிரச்சனைகளை பாத்து பயப்பட தான் செய்வாரு. pasupathi க்கு தன்னோட பையன் இந்த பிரச்சனைல எதுக்கும் மாட்டிக்க கூடாது ண்டாரத்துக்காக kitta கிட்ட கபடி விளையாடவேண்டும் னு சொல்லுவாரு. இருந்தாலும் kitta ஓட teacher தான் இவருக்கு full support பண்ணுவாரு. அப்படியே இவரு indian team க்கு select யும் ஆவாரு . ஆனா இந்த journey ரொம்ப easy அ இவருக்கு அமைச்சிடாது. 


இந்த ஊர் ல இருக்கறவங்க எல்லாருமே ஊர் சாமியான kalamaadan ன்ற ஒரு சாமிய கும்புடுவாங்க. இதுக்கும் dhruvvikram க்கு ஒரு connection வச்சிருப்பாங்க. அதாவுது காளைமாட்டை சீண்டாதவரைக்கும் அது நம்மள ஒன்னும் பண்ணது இருந்தாலும் அதை அடக்குறது ரொம்ப கஷ்டம். இந்த மாதிரி தான் kitta ஓட character யும் இருக்கும். kitta ஓட நெருங்கிய சொந்தமான அவரோட குடும்பமா இருக்கட்டும், இவரு love பண்ணுற பொண்ணு rani யா நடிச்சிருக்க anupama parameswaran அ இருக்கட்டும் இவங்ககிட்ட kitta ஓட interaction எல்லாமே கம்மியா தான் இருக்கும். இவரோட dialogues அ இருக்கட்டும் body language அ இருக்கட்டும் எல்லாமே super அ இருந்தது. அதுக்கு அப்புறம் pasupathi யோட character ரொம்ப strong அ இருக்கு னே சொல்லலாம். ஒரு அப்பாவா தன்னோட பையன் safe அ இருக்கணும் ன்ற நினப்பு, பாசம் னு அழகா நடிச்சிருந்தாரு. rajisa kitta ஓட அக்காவா support பண்ணுறது super அ இருந்தது. 


இந்த படத்துல violence யும் எக்கச்சக்கம் னே சொல்லலாம். ஒரு சிலரை கத்தி யால குத்துற scenes எல்லாம் காமிப்பாங்க, அதெல்லாத்தயும் பாக்கும் போது, ஒரு character சாகுறதயும் தாண்டி  எவ்ளோ வெறுப்பு இருந்த இப்படி செய்வான் ன்ற மாதிரி நமக்கு தோணும். vanathi கிராமத்துல நடக்கற சண்டைகள், caste oppression எல்லாமே இன்னும் reality ல நடந்துட்டு இருக்கற விஷயங்கள் தான். இதே எல்லாமே audience ஆழ easy அ relate பண்ணிக்க முடியும்.   violence அ கைல எடுக்கறதே அழிவு ன்ற விஷயம் தான் இந்த படத்தோட core message னே சொல்லலாம். இதோட விளைவுகள் ரொம்ப ஆபத்தானதா இருக்கும் ன்றதா ரொம்ப அழகா director இந்த படத்துல கொண்டு வந்திருக்காரு. 


படத்தோட technical aspects அ பாக்கும் போது nivas k prasanna ஓட songs and bgm excellent அ இருக்கு. ezhil arasu ஓட cinematography thoothukudi ஓட அழகை அப்படியே camera ல பதிவு பண்ணிருக்காரு. ஒரு sports background ல நடக்கற caste politics அ பத்தி சொல்லற ஒரு அட்டகாசமான படம் தான் bison . சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment