Thursday, 2 October 2025

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

 *ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!*



வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை.


🔗 https://youtu.be/O9N6kz7_0vQ?si=DLTPUzgN72ThJwoK


தேரே இஷ்க் மேயின் படத்தை இயக்குநர்-தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய், புஷண் குமார் மற்றும் கலர் யெல்லோ தயாரித்து, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் கதை எழுத, இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டடீஸர் தற்போது வெளியாகி உள்ளது.


புதியதும் எதிர்பாராததுமான இந்த ஜோடி, டீசரில் சங்கர் (தனுஷ்) – முக்தி (க்ரிதி சனோன்) இடையிலான காந்த ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது. முன்பே வெளியான சில காட்சிகளுக்கு பிறகு, இப்போது டீசர் காதலின் வலி, துன்பம் மற்றும் நிறைவேறாத ஆசையின் கதையை வெளிப்படுத்துகிறது. ஆனந்த் எல் ராயின் நுணுக்கமான கதை சொல்லும் பாணி, ஹிமான்ஷு ஷர்மாவின் எழுத்து ஆகியவை இணைந்து, காரணத்தை மீறும் காதலை – அழிக்கும் மற்றும் மீட்டெடுக்கும் காதலை டீஸரில் காட்டுகின்றன. வாரணாசியுடன் ஆனந்த் எல் ராய்க்கு உள்ள ஆழ்ந்த தொடர்பை டீசர் வெளிப்படுத்துகிறது.


ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களை, இர்ஷாத் காமில் வரிகள் எழுதி, அரிஜித் சிங் பாடியுள்ளார். டீசரில் இடம்பெற்ற haunting track ஏற்கனவே ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வார்த்தைகள் சொல்ல இயலாத இடங்களில் மௌனம் பேசுகிறது; நிறைவேற்றத்தைவிட ஏக்கம் வலுவாக இருக்கும் காதல் கதையின் ஒரு சாளரம் இதன் மூலம் திறக்கப்படுகிறது.


இயக்குனர் ஆனந்த் எல் ராய் கூறியதாவது, "காதல் என்றால் முழுமையான சரணாகதி – அது உங்களை குணப்படுத்தட்டும், காயப்படுத்தட்டும், மாற்றட்டும்.”


டீ-சீரிஸ் தலைவர் புஷண் குமார் கூறியதாவது, “தேரே இஷ்க் மேயின் ஒரு புது ஜோடியை – தனுஷ் மற்றும் கிரிதி சனனை – முதன்முறையாக ஒன்றிணைக்கிறது. அவர்களுக்கிடையிலான மின்சாரம் போன்ற காந்த ஈர்ப்பு திரையில் ரசிகர்களை கவரும். ஆனந்த் எல் ராயின் கண்ணோட்டம், ஏ.ஆர். ரஹ்மானின் ஆன்மீக இசை இணைந்து, படம் முடிந்த பின்னரும் உங்கள் மனதில் நிலைத்து நிற்கும்.”


குல்ஷன் குமார், டீ-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ வழங்கும் தேரே இஷ்க் மேயின், ஆனந்த் எல் ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிப்பில், புஷண் குமார் மற்றும் கிரிஷன் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதியுள்ளனர். இசை: ஏ. ஆர். ரஹ்மான். வரிகள்: இர்ஷாத் காமில். முன்னணி கதாபாத்திரத்தில் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன். இந்த காதல் காவியம், 2025 நவம்பர் 28 அன்று, ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment