Thursday, 20 November 2025

திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’

 *திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!*







*மும்பை, நவம்பர் 20, 2025:* உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்'. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை 'ஸ்டீபன்' தர இருக்கிறது. 


தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் 'ஸ்டீபன்' இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர் பெற்றவர்களும் ஒரே தளத்தில் பார்வையாளர்களுக்கு தரமான கதைகளை கொடுப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு நெட்ஃபிலிக்ஸ் தளமாகும். 


நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் மாறுபட்ட கதைக்களங்களை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த கதைகளில் 'ஸ்டீபன்' படமும் ஒன்று. பல திருப்பங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர்தான் 'ஸ்டீபன்'. கதை தொடங்கியதில் இருந்து கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்களை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி மற்றும் கோமதி சங்கர் திறமைகளை எடுத்து சொல்லும் கதையாகவும் இது இருக்கும்.  தரமான கதைகளை பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நிலைப்பாட்டிற்கு இந்தக் கதை இன்னும் வலு சேர்க்கும்" என்றார். 


அறிமுக இயக்குநர் மிதுன் பகிர்ந்து கொண்டதாவது, “அமைதியான கால்குலேட்டட் சீரியல் கில்லர் பற்றிய கதைதான் 'ஸ்டீபன்'. அமைதியற்ற பல தனிப்பட்ட ரகசியங்களை தன்னுள் சுமந்து செல்கிறார். கோமதி சங்கர் தீவிரமாக, உண்மைக்கு நெருக்கமாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநராக நிறைய விஷயங்கள் இதில் கற்றுக்கொண்டேன். இந்த கதையை மிகுந்த கவனத்துடனும் நேர்மையுடனும் முயற்சித்திருக்கிறோம். இந்த கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. எங்கள் கதையை 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிலிக்ஸில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அவர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.  


தான் பார்க்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த உலகிற்குள் 'ஸ்டீபன்' பார்வையாளர்களையும் அழைக்கிறார். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸில் 'ஸ்டீபன்' ப்ரீமியர் ஆகிறது. 


*நடிகர்கள்:* கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட்


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்குநர்: மிதுன்,

தயாரிப்பாளர்கள்: ஜெயகுமார் & மோகன்,

எழுத்தாளர்கள்: மிதுன், கோமதி சங்கர்,

தயாரிப்பு நிறுவனம்: ஜேஎம் புரொடக்சன் ஹவுஸ்


*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*


நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

No comments:

Post a Comment