Thursday, 27 November 2025

வேல்ஸ் - டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம்

 வேல்ஸ் - டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம்வேல்ஸ் - டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் கைகோர்த்த டி ஸ்டுடியோஸ் போஸ்ட் “






வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது. இதன் மூலம், இனி 'வேல்ஸ் - டி ஸ்டுடியோ'  என்ற பெயரில் செயல்படுமென்பது குறிபிடத்தக்கது, இந்நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படும். நவீனத்தொழில்நுட்ப வசதிகளுடன்  அமையப்பெற்ற டி ஸ்டுடியோஸ் போஸ்ட் நிறுவனம் முன்னணி இயக்குநர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. டாக்டர் ஐசரி கே. கணேஷ்,  இயக்குநர் விஜய்யுடன் இணைந்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறை  தயாரிப்பிலும் தொழில்நுட்பத்திலும் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெருமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   


இது குறித்து இயக்குநர் விஜய் பகிர்ந்து கொண்டதாவது, "இந்திய சினிமாவின் இதயத்துடிப்பு சென்னைதான். திரைப்படத் தயாரிப்பின் சில துறைகளில் மும்பை எவ்வாறு முன்னணியில் உள்ளது என்பதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அதுதான் இங்கு உலகத் தரம் வாய்ந்த படைப்பாற்றல் சூழலை உருவாக்க என்னைத் தூண்டியது. டாக்டர் ஐசரி கே. கணேஷ் சார் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவரது ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை என்னை எப்போதும் வழிநடத்தியுள்ளன. இந்தப் புதிய பயணத்தில் அவருடன் இணைந்திருப்பது ரொம்பவே ஸ்பெஷல். வருங்காலத்தில் 'வேல்ஸ் - டி ஸ்டுடியோ' தமிழ் சினிமாவை முன்னேற்றப் பாதையில் எடுத்து செல்லும் நிறுவனமாக இருக்கும்" என்றார்.


உயர்தர கேமரா, புரொடக்ஷன் கருவிகள், எடிட்டிங் சூட்ஸ், ஒலி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸூக்கான சப்போர்ட் மற்றும் அவுட்டோர் யூனிட் என அனைத்தும் இந்த அப்கிரேட்டட் ஸ்டுடியோவில் இருக்கும் எனவும் இயக்குநர் விஜய் தெரிவித்தார். எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ரிலாக்ஸாக பணிபுரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினருக்கு இந்த ஸ்டுடியோ நிச்சயம் உதவும் எனவும் கூறினார். 


தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் கூறியதாவது, "இயக்குநர் விஜயுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. சினிமா துறையினர் நம்பிக்கையுடனும் சுதந்திரமாகவும் பணிபுரியும் வகையில் உலகத் தரத்திலான கிரியேட்டிவ் இடத்தை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டிருக்கிறேன்.  நான் ஆசைப்பட்ட விஷயமும் டி ஸ்டூடியோஸ் போஸ்ட் விருப்பமும் ஒன்றாக இருந்தது. திறமையான அணியினருடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி" என்றார். 


மேலும் அவர் கூறியதாவது, "வேல்ஸ் - டி ஸ்டுடியோவுடன், திரைத்துறையினருக்கு சிறந்த வசதிகளை வழங்குவதையும், சினிமா தரத்தை உயர்த்துவதையும், தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். திரைப்படத் தயாரிப்பிற்கான மையமாக சென்னையை வலுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள்" என்றார்.

No comments:

Post a Comment