Thursday, 27 November 2025

காசி விஸ்வநாதர் முதல் கங்கை நதி வரை: 'தேரே இஷ்க் மே' படத்திற்காக வாரணாசியை

 *காசி விஸ்வநாதர் முதல் கங்கை நதி வரை: 'தேரே இஷ்க் மே' படத்திற்காக வாரணாசியை ஒளிரச் செய்த தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் ஆனந்த் L ராய்!*








தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.


ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தேரே இஷ்க் மே' படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் மற்றும் AR ரஹ்மானின் மனதை வருடும் பாடல்களால், நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன.


படம் பிரம்மாண்டமாக வெளியாவதை முன்னிட்டு, நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் க்ரிதி சனோன், இயக்குநர் ஆனந்த் L ராயுடன் வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோரின் இந்த பயணத்திற்கு உத்வேகம் அளித்த காசி நகரம், இருவரின் மனதிலும் நீண்ட காலமாக ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.


அவர்களின் வருகை, ரசிகர்களின் உற்சாகமான கொண்டாட்டமாக மாறியது. நட்சத்திரங்களை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. முதலில், மூவரும் வாரணாசியில் உள்ள ஒரு திரையரங்கில் உள்ளூர் ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து, 'தேரே இஷ்க் மே' உருவான விதம், திரைக்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான கதைகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.


திரையரங்கு சந்திப்பிற்கு பிறகு, படக்குழுவினர் வாரணாசியின் தெய்வீக அழகை அனுபவித்தனர். புனிதமான காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து, படம் வெற்றிபெற ஆசிகளை பெற்றனர். சூரியன் மறையும் நேரத்தில் தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் ஆனந்த் L ராய் ஆகியோர் தசாஸ்வமேத படித்துறைக்கு சென்று, புகழ்பெற்ற கங்கா ஆரத்தியை கண்டு ரசித்தனர். இது ரசிகர்களுக்கு ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் ஆன்மீக அனுபவத்தை அளித்தது.


ஷங்கர் மற்றும் முக்தியின் கதை உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் உயிர் பெறுவதை காண தயாராகுங்கள்.


குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment