Wednesday, 26 November 2025

சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு

 *சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!*



ஒவ்வொரு சில வருடங்களுக்கும் உலகளவில் ஒரு திரைப்படம் அதன் வெளியீட்டு தேதியை மட்டும் குறிக்காமல் திரைப்பட உருவாக்கத்திலும் புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தமுறை புதிய மாற்றத்தை காண டிசம்பர் 19 ஆம் தேதி தயாராகுங்கள். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வெளியாவது உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்விற்கான கவுண்ட்டவுன் போல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஒரு புதிய படத்துடன் வரும்போதெல்லாம் பிரம்மாண்டமான கதை சொல்லல், புதிய தொழில்நுட்பம் என சினிமா மொழியையே மாற்றி அமைக்கிறார். 


மற்றவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, ஜேம்ஸ் கேமரூன் அதைக் கண்டுபிடித்தார். ’தி டெர்மினேட்டர்’ மற்றும் ’ஏலியன்ஸி’ன் ஆரம்ப நாட்களிலிருந்தே, ஜேம்ஸ் கேமரூனுக்கு அறிவியலில் அதீத ஆர்வம் இருந்தது. புதிய உலகங்களை கற்பனை செய்வதில் அவர் திருப்தியடையவில்லை, அவற்றை உருவாக்கும் இயந்திரங்களை அவர் விரும்பினார். இந்த உந்துதல் ’டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே’ திரைப்படத்தில் மிகவும் பிரபலமானது. T-1000 ஒரு வில்லன் மட்டுமல்ல, உலகின் முதல் நம்பத்தகுந்த ஃபோட்டோரியல் திரவ-உலோக சிஜிஐ கதாபாத்திரம். நவீன டிஜிட்டல்-எஃபெக்ட்ஸ் சகாப்தத்திற்கு அடித்தளம் அமைத்த ஒரு புதிய சாதனை. அப்போது சோதனை ரீதியாக இருந்தது. பின்னர், கேமரூனின் முயற்சிக்குப் பிறகு பிளாக்பஸ்டர் சினிமாவின் அடிப்படை இலக்கணமாக மாறியது. 


தொழில்நுட்பம் இல்லாதபோது அதை உருவாக்கும் இந்த உள்ளுணர்வு அவரது அடையாளமாக மாறியது. இது ‘அவதார்’ திரைப்பட பிரபஞ்சத்திலும் தெளிவாக பிரதிபலித்தது. ஜேம்ஸ் கேமரூன் பண்டோராவை வடிவமைக்கத் தொடங்கியபோது, தனக்குத் தேவையான கருவிகள் இல்லை என்பதை உணர்ந்தார். எனவே பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மற்றும் கேமரா நிபுணர்களுடன் கூட்டு சேர்ந்து அவற்றை அடித்தளத்திலிருந்து உருவாக்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் திரைப்பட உருவாக்கத்தை மாற்றியமைத்த தொழில்நுட்பங்கள் தோன்றின. முதலாவது, முன்பு பயன்படுத்தப்பட்ட கரடுமுரடான, ஜெர்க்கி பதிப்பாக அல்லாமல் டிஜிட்டல் கதாபாத்திரங்கள் உணர்ச்சி ரீதியாக மனிதனாக உணரும் அளவுக்கு நுண்ணிய வெளிப்பாடுகளை மிகவும் நம்பகத்தன்மையுடன் துல்லியமான, ஆழமாக மறுகற்பனை செய்தது. நடிகர்கள் தலையில் பொருத்தப்பட்ட கேமராக்களை அணிந்திருந்தனர். அவை உணர்ச்சியின் ஒவ்வொரு மாற்றத்தையும் படம்பிடித்தன. திரையில் பார்வையாளர்கள் அனிமேஷனைப் பார்க்காமல் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் யதார்த்தமாக மொழிபெயர்க்கப்பட்ட மனித செயல்திறனை கண்டு களித்தனர். 


ஆனால் கேமரூன் அதோடு நிற்கவில்லை. உண்மையாக இல்லாத ஒரு உலகத்திற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட சினிமா சார்ந்த கருவிகள் அவருக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவர் மெய்நிகர் கேமராவை (Virtual Camera) கண்டுபிடித்தார். இது ஒரு உண்மையான செட்டில், ஒரு கேமராவை வைத்திருப்பது போல் ஒரு சிஜி சூழலுக்குள் நடக்க அனுமதிக்கும் சாதனம். இது புதிய திரைப்படத் தயாரிப்பு மொழியை உருவாக்கியது. ஒரு இயக்குநர் ரெண்டர் செய்யப்பட்ட காட்சிகளைக் காண பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அவர் அவற்றை உடனடியாக பார்க்க முடியும். அதன் பிறகு அவர் சிமுல்-கேமை (Simul-Cam) உருவாக்கினார். நேரடி-செயல் புகைப்படத்தை மானிட்டரில் உள்ள மெய்நிகர் சூழல்களுடன் இணைத்தார். அத்தகைய தொழில்நுட்பத்தை யாரும் பயன்படுத்தாத நேரத்தில், ஜேம்ஸ் கேமரூன் சாதாரணமாக இதை உருவாக்கிக் காட்டினார்.


இதன் விளைவாக, ’அவதார்’ திரைப்படம் கடந்த 2009-ல் திரைப்படம் வெளியானது. இது உலக சினிமாவில் கதையாக மட்டுமல்லாது, அதன் பின்னணியில் உள்ள இயந்திரங்களாலும் புரட்சியை ஏற்படுத்தியது. ஜேம்ஸ் கேமரூனின் புதிய ஃபியூஷன் 3D கேமரா ரிக்குகள் ஸ்டீரியோஸ்கோபிக் திரைப்படத் தயாரிப்பிற்கான தரத்தை அமைத்தன. ஒரு கதையை ஆழம், பிரகாசம், வண்ணத் துல்லியம் மற்றும் ஈடுபாட்டுடன் பார்வையாளர்கள் உணர்ந்த விதம் முற்றிலும் மாறியது. 3டி ஒரே இரவில் வந்து போகவில்லை, அது சினிமாவின் எதிர்காலமாக மாறியது.


இருப்பினும், ஜேம்ஸ் கேமரூன் சினிமா துறை மீது மட்டும் அக்கறை கொள்ளவில்லை. அவர் நாம் வாழும் புவி மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். டைட்டானிக்கிற்காக, கப்பல் விபத்துக்குள்ளான பகுதிகளைப் படம்பிடித்து அதிநவீன ஆழ்கடல் கேமரா அமைப்புகளுக்கு முன்னோடியாக அவர் உதவினார். கடல் மீதான அவரது ஈர்ப்பு இறுதியில் டீப்சீ சேலஞ்சரை உருவாக்க வழிவகுத்தது. 2012 ஆம் ஆண்டில் பூமியின் மிக ஆழமான பகுதிகளில் ஒன்றான மரியானா அகழியில் கேமரூன் தனியாக இறங்கினார். இது உலகளாவிய கடல் ஆராய்ச்சியை முன்னோக்கி நகர்த்திய தரவு, படங்கள் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவுகளில் பங்களித்தது.


‘அவதார்’ திரைப்படம் சினிமா மேக்கிங்கை மறுவடிவமைப்பு செய்திருந்தால், ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் மற்றொரு எல்லையை உடைத்தது. அதாவது, நீருக்கடியிலான படப்பிடிப்பு. இதற்கு முன்பு யாரும் அதைச் செய்ததில்லை. நீரின் தன்மையும், ஒளி சிதறல்களும் படப்பிடிப்பை கணிக்க முடியாதபடி சிதறடிக்கும். மேலும் மோஷன் கேப்சர் கேமராக்கள் அளவுத்திருத்தத்தை இழக்கின்றன. கேமரூனும் அவரது குழுவும் பல ஆண்டுகளாக புதிய அமைப்புகள், புதிய ஒளியியல் மற்றும் நீருக்கடியில் இயக்கத்தை டிகோட் செய்ய புதிய இயந்திர கற்றல் கருவிகளை வடிவமைக்கச் செலவிட்டனர். இதன் விளைவாக யதார்த்தம் மற்றும் தத்ரூபமான உணர்வுகளுடன் நீருக்கடியில் நகரும் உலகின் முதல் டிஜிட்டல் கதாபாத்திரம் கிடைத்தது. நடிகர்கள் பல மாதங்களாக பயிற்சி பெற்றனர். மேலும் கேட் வின்ஸ்லெட் ஏழு நிமிடங்களுக்கும் மேலாக மூச்சைப் பிடித்துக் கொள்வதில் தேர்ச்சி பெற்றார்.


’அவதார்’ படத்தின் சீக்வலுக்காக ஏஐ-யால் இயக்கப்படும் ஃபேசியல் ரீடார்கெட்டிங்கை கேமரூன் முன்னெடுத்தார். இதனால் டிஜிட்டல் நவி கதாபாத்திரங்கள் சிக்கலான மனித உணர்வுகளை முகத்தில் கொண்டு வந்தது. சினிமா கதை சொல்லலில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் தெளிவு, ஆழம் ஆகியவற்றையும் நவீன தொழில்நுட்பத்துடன் அவர் செம்மைப்படுத்தினார். இந்த புதுமைகளால் ஜேம்ஸ் கேமரூன் எதிர்காலத்திலிருந்து கடன் வாங்குவதில்லை, அவர் அதை உருவாக்குகிறார்.


அதனால்தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்தத் திரைப்படம் வெறும் சீக்வல் மட்டுமல்ல சினிமாவில் தொழில்நுட்பத்தில் அடுத்தக்கட்ட நகர்வு எனலாம். படத்தின் கதைக்காக மட்டுமல்லாது மற்றொரு தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காகவும், உலகம் இதுவரை கண்டிராத ஒன்றுக்காகவும், விரைவில் வழக்கமான ஒன்றாகவும் மாற இருப்பதற்காகவும் ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஜேம்ஸ் கேமரூன் சினிமாவை மாற்றியமைத்த, அறிவியல் ஆய்வை மாற்றியமைத்த மற்றும் மனித கற்பனையை விரிவுபடுத்திய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். 


‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் மூலம், அவர் அதை மீண்டும் செய்யத் தயாராகி இருக்கிறார்.

No comments:

Post a Comment