சினிமா பேக்டரி அகாடமியில் படிக்கும் மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கிய ஏஐ குறும்படம் ‘தி லாஸ்ட் பேக்கப்’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் தேர்வாகி, மேலும் வரலாற்றுச் சாதனையாக முதல் AI Film Festival Award–ஐ வென்று பெருமை சேர்த்துள்ளது.
இந்த சிறப்பு விருதை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் சேகர் கபூர் நேரடியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உருவான ஏஐ குறும்படம் ஒரு சர்வதேச மேடையில் இப்படியாக அங்கீகாரம் பெறுவது அரிதான சாதனை.
சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் 'தி லாஸ்ட் பேக்கப்
முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவி ஸ்ரீ ரிதன்யா படம் இயக்கி உருவாக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் 3030ஆம் ஆண்டின் எதிர்கால சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட அறிவியல் புனைவுக் கதை. தொழில்நுட்பம் அனைத்தையும் ஆட்சி செய்யும் உலகிலும், மனித உணர்வுகள் மட்டும் என்றும் அழியாது என்ற உணர்ச்சியை உருக்கமாக வெளிப்படுத்துகிறது.
கோவா திரைப்பட விழாவில் திரையிடுதலுக்கு பிறகு, படத்தைப் பற்றிய விவாதங்களும் கருத்தரங்கும் நடைபெற்றன. மிகுந்த போட்டிக்குள் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் சர்வதேச விருது பெற்ற இந்த சாதனை, ஏஐ திரைப்படத் துறையில் புதிய கதவுகளைத் திறக்கிறது.
---

No comments:
Post a Comment