Thursday, 27 November 2025

Friday Movie Review

Friday Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம friday படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Hari Venkatesh . இந்த படத்துல Mime Gopi, KPY Dheena, Aneesh Masilamani, Ramachandra Durairaj, Kalaiyarasan, Siddhu Kumaresan னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாக்கலாம். 



இந்த படத்தோட கதையை பாக்கலாம். படத்தோட title க்கு ஏத்த மாதிரி ஒரு friday night நடக்கற சம்பவங்கள் தான் கதையே. friday night அன்னிக்கு மர்மமான முறைல நெறய gangsters இறந்து போறாங்க. இதெல்லாம் யாரு பண்ணுற எதுக்காக பண்ணுறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. இந்த படத்துல நெறய புது முகங்கள் தான். இருந்தாலும் இவங்கள வச்சு ஒரு விறுவிறுப்பான கதையை கொண்டு வந்திருக்காரு director . 


என்னதான் படத்தோட கதை ஒரே night ல நடக்கற மாதிரி காமிச்சாலும், நெறய nonlinear flashbacks அ குடுத்து படத்தை இன்னும் interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. படத்துல நெறய violent scenes இருந்தாலும், முகம் சுளிக்கற அளவுக்கு இல்லாம இருக்கிறது பாராட்ட படவேண்டிய விஷயம் தான். 


இந்த படத்துல highlight ஆனா performance னா அது mime gopi , dheena , aneesh masilamani தான். இவங்களோட character அ இருக்கட்டும், இவங்களோட dialogue delivery , bodylanguage னு எல்லாமே excellent அ இருக்கு. இந்த படத்துக்கு மிக பெரிய பலம் னா அது dumey ஓட bgm and songs தான். இவ்ளோ high tension ஆனா padathukku ஏத்த மாதிரி bgm அ அமைச்சிருக்காரு. 


ரொம்ப கம்மியான budget அ இருந்தாலும் ஒரு interesting ஆனா gangster உலகத்தை காமிச்சு விறுவிறுப்பை கதையை கொண்டு போயிருக்காங்க. ஒரு பக்காவான கதை தான் இந்த friday . சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment