Jatadhara Telugu Movie
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம jatadhara படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Venkat Kalyan and Abhishek Jaiswal . இந்த படத்துல Sudheer Babu, Sonakshi Sinha, Divya Khosla Shilpa Shirodkar, Indira Krishna, Ravi Prakash, Jhansi, Rajeev Kanakala, Srinivas Avasarala, Rohit Pathak, னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் telugu ளையும் hindi ளையும் release ஆயிருக்கு. இது ஒரு supernatural thriller movie னு தான் சொல்லணும். இந்த கதையோட background அ பாத்தீங்கன்னா anatha padamanaba samy kovil அ தான் காமிச்சிருப்பாங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
pishach bhandan ன்ற ஒரு சாபம் இருக்கும். இதை பண்டைய காலத்துல உருவாக்குனாங்க. இதுக்கு காரணம் கோயில் ல இருக்கற விலைமதிப்புள்ள சுரங்கத்தை பாதுகாக்குறதுக்கக தான். கெட்ட எண்ணதோட யாரு இந்த சாபத்தை உடைக்கரங்களோ அப்போ ஒரு துர்த்தேவதை வரும் அதோட அது சாபத்தை உடைச்சவங்கள கொன்னுடும் னு சொல்லுறாங்க. இந்த துர்த்தேவதையா வராங்க sonakshi sinha . இப்போ தான் shiva வா நடிச்சிருக்க sudheer babu வராரு. இவரு ஒரு ghost hunter அ இருக்காரு இவரை பொறுத்த வரைக்கும் கண்ணால பாக்குற வரைக்கும் எதுமே நம்ப மாட்டாரு. இந்த சாபத்தை பத்தி investigate பண்ண ஆரம்பிக்குறாரு. அதுல இருந்து இவரோட journey ஏ மாறிடுது. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இதை ஒரு horror movie னு சொல்லிட முடியாது. மூடநம்பிக்கைக்கும் logic க்கும் இருக்கற வித்யாசத்தை காமிக்க்ர விதமா இந்த படம் அமைச்சிருக்கு. நெறய விஷயங்களை நம்மள யோசிக்கவும் வைக்குது னு சொல்லலாம். படத்தோட first half அ ரொம்ப பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா suspense அ build பண்ணுறாங்க. அப்படியே second half ல இருந்து தான் கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது. இந்த படத்துல நெறய scenes visual ஆவும் highlight ஆவும் இருந்தது. உதாரணத்துக்கு பழங்கால கோயில்களா இருக்கட்டும், rituals பண்ணுற scenes அ இருக்கட்டும் கடைசில climax ல வர shiva தாண்டவமா இருக்கட்டும் எல்லாமே amazing அ இருந்தது.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance அ பாக்கும் போது sonakshi shinha ஓட acting அ பத்தி சொல்லியே ஆகணும். இவங்களுக்கு dialogues ரொம்ப கம்மியா இருந்தாலும் ஒரு துர்த்தேவதையா இவங்களோட body language , facial expressions எல்லாமே அட்டகாசமா இருந்தது. sudheer babu ஓட acting யும் super அ இருந்தது. அதுவும் emotional scenes அ இருக்கட்டும் action scenes அ இருக்கட்டும் எல்லாமே பக்கவா இருந்தது. divya khosla sitara ன்ற character ல அருமையா நடிச்சிருக்காங்க. மத்த supporting actors அ நடிச்ச Rajeev Kanakala, Ravi Prakash, Shilpa Shirodkar, Indira Krishna, Subhalekha Sudhakar னு இவங்களோட நடிப்பும் பிரமாதமா இருந்தது.
இந்த படத்தோட technical aspects அ பாக்கும் போது Sai Krishna Karne அப்புறம் Shyam Babu Meriga ஓட dialogues எல்லாமே audience அ யோசிக்க வைக்கிற விதமா இருந்தது னு தான் சொல்லணும். இவங்களோட dialogues ல ஒரு philosophy ஓட சேந்து வரும் அதெல்லாமே கேட்க நல்ல இருந்தது. directors Venkat Kalyan and Abhishek Jaiswal யும் சேந்து பழங்கால நம்பிக்கையோட இந்த காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி ஒரு story அ கொண்டு வந்திருக்காங்க. இதுக்கே இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய கைதட்டலை குடுத்து ஆகணும். Sameer Kalyani ஓட cinematography super அ இருந்தது. முக்கியமா கேரளா ஓட அழகு, அங்க இருக்கிற கோயில்கள், மர்மமான முறைல நடக்கற சடங்குகள் னு audience க்கு appealing அ இருக்கற மாதிரி camera ல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். special effects லாம் கூட super அ இருந்தது. அதோட இந்த படத்துல rajiv raj ஓட bgm and songs நல்ல இருந்தது. முக்கியமா bgm தான் வேற level ல இருந்தது. sound design, மந்திரத்தை ஓதுறது, எக்கோ அடிக்கிறது னு எல்லாமே ஒரு suspense mood க்கு கதையை எடுத்துட்டு போயிருக்கு. இந்த supernatural setting க்கு ஏத்த மாதிரி classical ragas அ சேத்து bgm ல use பண்ணிருக்கறது தான் highlight அ இருந்தது. shivastotram ல use பண்ணிருந்தாங்க அதுவும் நல்ல இருந்தது.
visual , story line , bgm , actors ஓட strong ஆனா performance னு எல்லாமே அட்டகாசமா இருக்கற திரைப்படம் தான் jatadhara . mythology ஓட சேந்து இருக்கிற modern storytelling தான் இந்த படம். sound and visual காகவே நீங்க இந்த படத்தை theatre ல போய் பாக்குறது worth தான். சோ மறக்காம உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க
[11/7, 1:57 PM] Abhinaya Viji Friend: the girlfriend - tamil movie
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the girlfriend படத்தோட review அ தான் பாக்க போறோம். Rashmika Mandanna, Dheekshith Shetty, Rao Ramesh, Anu Emmanuel, Rohini னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது rahul ravindran . இப்போ இருக்கற period ல நம்ம face பண்ணிட்டு இருக்கற gender politics அ பத்தி பேச கூடிய படமா இது இருக்குனு சொல்லலாம். bhooma வா நடிச்சிருக்க rashmika mandana ஒரு MA டிகிரி படிக்கற student அ இருக்காங்க. இவங்க vikram அ நடிச்சிருக்க dheekshith shetty அ love பண்ண ஆரம்பிக்கறாங்க. மேல் ஓட்டமா பாக்கும் போது love story மாதிரி தெரியலாம் ஆனா ஒரு பொண்ணோட self discovery journey அ பத்தி சொல்லற விதமா இந்த படம் அமைச்சிருக்கு. இந்த male dominated society அவளுக்கான இடத்தை கண்டுபிடிக்கறதுக்கான ஒரு போராட்டம் னே சொல்லலாம்.
இந்த படத்தோட கதையே booma ஓட perspective ல தான் இருக்கும். ஆனா இவங்களோட இந்த story ல இவங்க main character கிடையாது. இன்னும் சொல்ல போன இவங்க main character அ காமிச்சாலும் இவங்களே சொந்தமா முடிவு எடுக்கறதுக்கான உரிமை இவங்களுக்கு கிடையாது. ஆண் ஆதிக்கம் எப்படி பெண்களை ஒதுக்கி வைக்குது ன்றத்துக்கு நல்ல உதாரணம் இந்த படம் னு சொல்லலாம். இவளோட life ல இருக்கற ஓவுவுறு ஆணும் தான் இவ எப்படி அவளோட life அ lead பண்ணனும் னு சொல்லுவாங்க. ஒரு பக்கம் vikram marriage பண்ணதுக்கு அப்புறம் இவ எப்படி இருக்கணும் னு சொல்லுவான். இன்னொரு பக்கம் இவளோட அப்பா rao ramesh booma college ல இருக்கணுமா இல்லையா னு முடிவு எடுக்கறதே அவரை தான் இருக்கும். இது எல்லாத்தயும் ரொம்ப அமைதியா எடுத்துட்டு போற booma. durga வா நடிச்சிருக்க anu emmanuvel யும் நெறய விஷயங்களை booma கிட்ட சொல்லற. ஆனா இதெல்லாத்தயும் கேட்டும் booma பெருசா react பண்ணிக்காம அமைதியா தான் இருப்ப.
இவளோட life அ இவ control க்கு எடுத்துட்டு வர கொஞ்சம் time எடுக்கும். booma ஓட இந்த transformation அ ஒரு process மாதிரி காமிச்சிருப்பாங்க. இதுவே ரொம்ப genuine அ இருந்தது. இதுல booma நெறய இடங்கள் ல silent அ இருக்கிறேதே ஒரு plus point தான் இந்த கதைக்கு. என்னதான் ஆண் ஆதிக்கம் ன்ற ஒரு விஷயம் அந்த காலத்துல தான் உண்டு இப்போ கிடையாது னு சொன்னாலும், இன்னும் நெறய இடங்கள் ல அது ஒளிஞ்சு இருக்கு ன்றது தான் உண்மை ன்றதா ரொம்ப அழகா காமிச்சிருக்காங்க. இந்த படத்துல ஒரு plus point ஏ social message அ சொல்லறோம் ன்ற பேர்ல ரொம்ப emotional அ கதையை கொண்டு போகாதது தான். ஆனா அதுக்காக sentimental scenes லாம் கிடையாது னு சொல்ல முடியாது இருக்கு ஆனா ரொம்ப சோகமா எடுத்துட்டு போயிருக்க மாட்டாங்க. நெறய எடத்துல சின்ன சின்ன விஷயங்களுக்கு லாம் detail குடுத்திருக்க விதம் அழகா இருந்தது. அதாவுது அவளோட room அ விட்டு வெளில வரும் போது shawl அ எடுத்து போட்டுகிறதா இருக்கட்டும் இல்லனா போற வழில திடுருனு யாராவுது அவளோட வழிய தடுக்கறதா இருக்கட்டும் இதெல்லாமே ரொம்ப depth அ குடுத்திருக்காங்க. அதே மாதிரி toxic relationship ல இருக்கிறதா பத்தியும் காமிச்சிருப்பாங்க. vikram ஒரு toxic character அ portray பண்ணிருப்பாங்க. இந்த character அ நல்ல நடிச்சிருக்கரு deekshith shetty.
அதுக்கு அப்புறம் இவங்க இந்த relationship ல இருந்து வெளில வரதும் அதோட peaceful அ இவங்க life அ lead பண்ணுற moments நல்ல இருக்கும். bhooma வவும் சரி durga வும் சரி வேற எந்த baggage யும் இல்லாம life அ lead பண்ணுவாங்க. relationship நாளே ஒரு சில பிரச்சனைகள் இருக்கும். அதெல்லாம் ரொம்ப detailed அ காமிச்சிருக்க மாட்டாங்க. உதாரணத்துக்கு vikram க்கு perfect அ bhooma set ஆகலாம் ஆனா bhooma க்கு vikram சரியான partner அ இருப்பானா ன்றது தான் கேள்வியே. இந்த மாதிரி நெறயா விஷயங்களை நம்மள யோசிக்க வைக்குது னு சொல்லலாம். ஒரு சில எடத்துல தனக்கு தான் vikram வேணும் ண்றதுக்காக durga selfish அ தெரிஞ்சாலும் கடைசில அவங்க bhooma க்கு தான் support அ இருப்பாங்க. இதுவே ரொம்ப gentle அ இருந்தது பாக்குறதுக்கு. ஒரு maturity ஓட இந்த படத்தோட கதையை முடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும்.
bhooma ஒரு challenging ஆனா character. rashmika இந்த character ல super அ perform பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். இவங்களோட life ல நடக்கற பல விஷயங்கள் audience ஆலா கண்டிப்பா relate பண்ணிக்க முடியும். இவங்க தான் இந்த படத்துக்கு uyir னு கூட சொல்லலாம். அந்தளவுக்கு amazing அ நடிச்சிருக்காங்க. krishna vasanth ஓட cinematography super அ இருந்தது. அதுவும் characters ரொம்ப suffocating அ feel பண்ணுற scenes லாம் ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. prashanth r vigari ஓட songs and bgm இந்த படத்துக்கு கூடுதல் பலம் னே சொல்லலாம்.
கடைசில எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அவங்களுக்கான space எடுத்துகிறது தான் இந்த படத்தோட climax அ இருக்கு. ஒரு genuine ஆனா good feel movie னு தான் இதை சொல்லுவேன். சோ கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணாம theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment