Friday, 7 November 2025

Predator Badlands Movie Review

 Predator Badlands Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம predator badlands படத்தோட review அ தான் பாக்க போறோம். இது predator series ஓட 7 part னு சொல்லலாம். இன்னிக்கு தான் இந்த படம் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தை பத்தி பாக்கலாம். predator படத்துக்கு fanbase அதிகம் னு தான் சொல்லணும். ஏன்னா ஓவுவுறு படத்லயும் aliens க்கும் மனுஷங்களுக்கும் நடுவுல நடக்கற சண்டையை ரொம்ப interesting அ காமிச்சிருப்பாங்க. கதையும் ரொம்ப விறுவிறுப்பா போகும். ஆனா இந்த படம் கொஞ்சம் வித்யாசமா இருக்கு னு தான் சொல்லணும். எப்பவுமே violence அதிகமாவும் sci fi theme யும் இருக்கற predator series ல இந்த படத்துல மட்டும் alien கொஞ்சம் soft nature அ இருக்காரு. இந்த சின்ன predator alien பேர் தான் dek . இந்த dek ஓட emotional journey அப்புறம் self acceptance அ சொல்லற விதமா இருக்கு னு சொல்லலாம். பழைய predator படத்தோட fans க்கு இது ரொம்ப வித்யாசமா இருக்கும். இருந்தாலும் modern storytelling க்கு ஏத்த மாதிரி கதை சொல்லிருக்கிறதுனால நெறய பேர்க்கு பிடிக்கவும் chance இருக்கு. இன்னும் சொல்ல போன கொஞ்சம் family friendly அ இருக்கற மாதிரி இந்த story அ ready பண்ணிருக்காங்க. 


2004 ல வெளி வந்த alien vs predator ல இந்த predators அ கொஞ்சம் பாவமா காமிச்சிருப்பாங்க ஆனா இந்த படம் அதையும் தாண்டி ஒரு படி முன்னாடி போயிருக்குனு தான் சொல்லணும். maybe இது disney pictures க்கு கீழ படம் வரதுனால violence அ இல்லாம predator ஓட coming of age படம் மாதிரி எடுத்திருக்காங்க போல. இதுக்கு முன்னாடி வந்த part ஆனா prey ல intense ஆனா violence இருந்தாலும் ஒரு emotional depth இருக்கும் ஆனா இதுல ரொம்ப soft அ கதையை எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். இப்போ இந்த படத்தோட கதை என்னனா dek ன்ற predator alien revenge காகவும் அதோட self discovery காகவும் தன்னோட வீட்டை விட்டு ஓடி போயிடுது. இப்படி வரும்போது தான் synthetic cyborg thia வா  நடிச்சிருக்க elle fanning ஓட friend ஆகுது. இவங்க ரெண்டு பேரும் friend ஆகுற இடத்தோட பேர் தான் death planet . இந்த dek எதுக்காக இந்த இடத்துக்கு வந்திருக்கும்னா அதோட கூட்டத்துல தலைசிறந்த warrior னு பேர் எடுக்கணும்ன்றதுக்காக  kallisk ன்ற ஒரு மிருகத்தை  கொலை பண்ணத்தான் வந்திருக்கும். இப்போ இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா weyland yutani  ன்ற ஒரு private company யும் இதை தேடி தான் வந்திருப்பாங்க. இந்த company ஓட நோக்கமே aliens அ research பண்ணுறது தான். அவங்களோட சுயலாபத்துக்காக தான் இந்த மாதிரி alien  related விஷயங்களை பண்ணுவாங்க. 1979 ல வெளி வந்த alien படத்துல  இந்த company  அ பத்தி detailed அ காமிச்சிருப்பாங்க. இப்போ இந்த company தான் இந்த படத்துல வருது. இவங்க ரெண்டு பேரும் மோதிக்கிறது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


predator series லேயே இது தான் முதல் படம் இந்த alien predator hero வா இருக்கிறது. ஆனா hero வா இதை கொண்டு வந்து அந்த mystery look எல்லாம் தூக்கிட்டாங்க. predators எப்பவுமே ரொம்ப sharp அ இருக்கும் அதோட குடுத்த வேலைய பக்காவா முடிச்சிடும். ஆனா இந்த dek அ பாத்தீங்கன்னா அந்த மிருகத்தை தேடி போறது எல்லாம் ok வா தான் இருக்கும். ஆனா அதோட சோக கதையை சொல்லி பொலம்புறது தான் கஷ்டமா இருக்கும். என்ன தான் இதுக்கு soft nature அ குடுத்திருந்தாலும் கொஞ்சம் பழைய predators ஓட characters அ குடுத்துருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். மத்தபடி கதையை ரொம்ப interesting அ தான் கொண்டு போயிருக்காங்க. இந்த predator இருக்கற world அ இருக்கட்டும் visuals அ இருக்கட்டும் ரெண்டுமே அதிரடியா இருந்தது. dan trachtenberg இந்த உலகத்தை create பண்ணிருக்காரு அதோட ஒரு சில creatures யும் உருவாக்கி இருக்காரு இதெல்லாமே அந்த dek கிட்ட சண்டை போட்டு தோத்து போய்டும். CGI shots எல்லாமே அட்டகாசமா குடுத்திருத்தங்க. action scenes யும் mass அ இருந்தது. அதோட ella fanning ஓட comedy யும் இந்த படத்துல super அ workout ஆயிருக்கு. 


மொத்தத்துல ஒரு நல்ல interesting ஆனா ஸ்டோரி தான். சோ மிஸ் பண்ணாம theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment