Thursday, 25 December 2025

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் 'சிக்மா' திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது

 *லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் 'சிக்மா' திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது!* 






லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய படமாக உள்ளது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி புதிய உச்சமாக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.  


இந்த மைல்கல் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், “'சிக்மா' படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. பார்வையாளர்களும் 'சிக்மா' உலகில் வலுவாக இணைந்திருப்பதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படக்குழுவினருக்கும் இது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. படத்தின் வெளியீடு நெருங்கும்போது அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடுவோம்" என்றார்.


*நடிகர்கள்:* பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி மற்றும் பலர் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக்குழு விவரம்:* 


தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ், 

தயாரிப்பு: சுபாஷ்கரன்,

லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி: ஜி.கே.எம். தமிழ் குமரன்,

இசையமைப்பாளர்: தமன் எஸ், 

ஒளிப்பதிவாளர்: கிருஷ்ணன் வசந்த், 

எடிட்டர்: பிரவீன் கேஎல்,

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: ஹரிஹரசுதன், 

இணை இயக்குநர்: சஞ்சீவ், 

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

No comments:

Post a Comment