Tuesday, 2 December 2025

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’

 *ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் தயாராகிறது! டிசம்பர் 5 ஆம் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்குகின்றன!*



உலகின் மிகப்பெரிய திரைப்படமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஐமேக்ஸின் சிறந்த இருக்கைகளில் அனுபவித்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுங்கள். மேலும், டால்பி விஷன் சினிமாவில் முதல் முறையாக வெளியிடப்படுகிறது. 


இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான ‘அவதார்’ வெளியீட்டை ஒட்டி இந்த மாதம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. ஐமேக்ஸ் மற்றும் டால்பி விஷன் திரையரங்குகளில் சிறப்பு சலுகையுடன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்திற்கான முன்பதிவு டிசம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்குகிறது. 


’அவதார்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் சிறந்த இருக்கைகள், பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் தரமான ஒலியுடன் படத்தை சிறந்த முறையில் கண்டு களிக்க ஐமேக்ஸ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. 


முன்பதிவு தொடங்கும் வேளையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவதார் தீமுடன் கூடிய பாக்ஸ் ஆஃபிஸ் கவுண்டர் அமைக்கப்பட்டிருக்கும். படம் வெளியாகி அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிக ரசிகர்கள் கூட்டம் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் முதல் நாள் முதல் ஷோவை பிரம்மாண்ட முறையில் பார்க்க ஐமேக்ஸ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. 


டிசம்பர் 5 ஆம் தேதி அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கும்.


20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடும்.

No comments:

Post a Comment