Tuesday, 16 December 2025

தென்னிந்தியாவின் இசை தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது

 *தென்னிந்தியாவின் இசை தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது!*



*சென்னை, டிசம்பர் 16, 2025:* தென்னிந்தியாவின் இசைத் தலைவராக அசோக் பர்வானியை நியமித்ததாக வார்னர் மியூசிக் இந்தியா இன்று அறிவித்துள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா மற்றும் இசை நிறுவனங்களில் ஒன்றான டிவோவை வார்னர் மியூசிக் இந்தியா பெரும்பான்மையாக கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


பிராந்திய பட்டியல் விரிவாக்கத்தை விரைவுபடுத்துதல், படைப்பாளர் மற்றும் பார்ட்னர் உறவுகளை வலுப்படுத்துதல், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்துதல் போன்றவற்றில் வார்னர் மியூசிக் இந்தியாவும் டிவோவும் இணைந்து கவனம் செலுத்துகின்றன.


இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாற்பது வருடங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்தை கொண்டுள்ளார் பர்வானி. குறிப்பாக, சோனி மியூசிக் இந்தியாவில் தனது இருபது வருடகால பதவிக்காலத்தில், பிராந்தியத்தில் சோனி மியூசிக் சவுத் வணிகத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதுமட்டுமல்லாது, முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் நல்லுறவையும் தக்க வைத்தார். 


விநியோகம், வெளியீடு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் இன்ஃபுளூயன்சர் மார்க்கெட்டிங் ஆகியவற்றை வழங்கும் டிவோ தென்னிந்திய இசையமைப்பில் ஒரு முக்கிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. வார்னர் மியூசிக் இந்தியா 2023 ஆம் ஆண்டில் டிவோவை பெரும்பான்மையாக கையகப்படுத்தியது. 


இந்த நிறுவனம் தற்போது பெரிய அளவிலான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் இசை பட்டியலை நிர்வகிக்கிறது. இதுமட்டுமல்லாது, வார்னர் இசை குழுமத்தின் வலுவான உலகளாவிய நெட்வொர்க்கை பிரதிபலிக்கும் வகையிலும் சமீபத்தில் சுயாதீன திறமைகளை மையமாகக் கொண்ட ஆர்டிஸ்ட்-ஃப்ர்ஸ்ட் லேபிளான லூப்டை அறிமுகப்படுத்தியது. பிராந்திய கலைஞர்களுக்கு புதிய சர்வதேச வாய்ப்புகளை உருவாக்க வடிவமைக்கப்பட்ட இலங்கையின் எம்-என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டிவோவுடன் கூட்டு முயற்சியுடன் வார்னர் மியூசிக்கின் தடம் மேலும் விரிவடைந்தது.


வார்னர் மியூசிக் இந்தியா & சார்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய் மேத்தா கூறுகையில், "தென்னிந்தியாவில் எங்கள் எதிர்கால திட்டத்துடன் ஒத்துப்போகும் நிபுணத்துவம் மற்றும் தொழில் உறவுகளை நிச்சயம் அசோக் வலுப்படுத்துவார். உள்ளூர் கலைஞர்களுக்கான உலகத் தரம் வாய்ந்த பாதைகளை உருவாக்குவதற்கும் இந்தியாவின் அற்புதமான இசையை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் அவரது அனுபவம் வாய்ந்த தலைமை மிக முக்கியமானதாக இருக்கும்" என்றார். 


டிவோவின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஷாஹிர் முனீர் பகிர்ந்து கொண்டதாவது, “அசோக்கின் அனுபவமும் தொழில்துறை உறவுகளும் வார்னர் மியூசிக் இந்தியாவின் தெற்கு பிராந்தியத்திற்கு மிகப்பெரும் பலம். எங்கள் கேட்டலாக், பார்ட்னர்ஷிப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு வலுவான வணிக வாய்ப்புகளை உருவாக்குவது என அவரது தலைமை வார்னர் மியூசிக் நெட்வொர்க்கிற்குள் டிவோவின் பணியை வலுப்படுத்தும்" என்றார்.  


ஹெட் ஆஃப் மியூசிக், அசோக் பர்வானி பகிர்ந்து கொண்டதாவது, "இத்தகைய துடிப்பான தருணத்தில் வார்னர் மியூசிக் இந்தியாவில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டிவோவின் வலுவான கூட்டணியுடன் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் தென்னிந்திய இசையை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பாக இதை கருதுகிறேன். தென்னிந்திய இசை உலகளவில் செழிக்கவும் திறமையாளர்களுக்கு புதிய வாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்” என்றார். 


வார்னர் மியூசிக் இந்தியாவின் தெற்கு உத்தியை வலுப்படுத்துவதிலும், டிவோவின் திறன்களை ஒருங்கிணைப்பதிலும், உலக அரங்கில் தென்னிந்திய இசையை விரிவுபடுத்துவதிலும் முக்கியமான படியாக பர்வானியின் நியமனம் பார்க்கப்படுகிறது. 


*வார்னர் மியூசிக் இந்தியா பற்றி:* 


2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வார்னர் மியூசிக் இந்தியா நாட்டின் முன்னணி லேபிள்களில் ஒன்றாக குறுகிய காலத்திலேயே மாறியுள்ளது. இதில் தர்ஷன் ராவல், தில்ஜித் டோசன்ஜ், கர்மா, கிங் மற்றும் சஞ்சித் ஹெக்டே போன்ற சிறந்த உள்நாட்டு கலைஞர்களும், பென்சன் பூன், புருனோ மார்ஸ், கோல்ட்ப்ளே, துவா லிபா மற்றும் எட் ஷீரன் உள்ளிட்ட உலகளாவிய பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.


தென்னிந்தியாவின் டிவோவில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பது, ஆர்டிஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான இ-பாசிட்டிவ் நிறுவனத்தை கையகப்படுத்துவது மற்றும் நேரடி பொழுதுபோக்கு தளமான ஸ்கில்பாக்ஸில் முதலீடு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் நிறுவனம் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. டிப்ஸ் மியூசிக் உடனான உரிம ஒப்பந்தம், ஸ்கை டிஜிட்டல் (பஞ்சாபி மியூசிக்) மற்றும் குளோபல் மியூசிக் ஜங்ஷன் (ஹரியான்வி மற்றும் போஜ்புரி) உடனான பிராந்திய ஒத்துழைப்புகளும் இதில் அடங்கும்.


இந்திய இசையை கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வார்னர் மியூசிக் இந்தியா விஷால் தத்லானி, மோஹித் சவுகான், ராணி கோஎனூர், மைக்கி மெக்கிளியரி மற்றும் வருண் குரோவர் போன்ற கலைஞர்களைக் கொண்ட MAATI-ஐ அறிமுகப்படுத்தியது. இது வார்னர் மியூசிக் கனடாவுடன் இணைந்து 91 நார்த் ரெக்கார்டுகளை உருவாக்கியது. பஞ்சாபி நட்சத்திரங்களான கரண் அவுஜ்லா மற்றும் ஜோனிதா காந்தியுடன் இணைந்து உலகளவில் தெற்காசிய திறமைகளை வென்றது.


*டிவோ மியூசிக் பற்றி:*


இந்தியாவின் முன்னணி மியூசிக் லேபிள், விநியோகம் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றான டிவோவின் ஒரு பிரிவுதான் டிவோ மியூசிக். இது தற்போது வார்னர் மியூசிக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது. டிவோ மியூசிக் திரைப்பட தயாரிப்பாளர்கள், சுயாதீன லேபிள்கள் மற்றும் ஆர்டிஸ்ட்டுகளுடன் இணைந்து தங்கள் ஒலிப்பதிவுகள் மற்றும் பாடல்களை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறது.


வார்னர் மியூசிக்கின் உலகளாவிய விநியோக திட்டத்துடன் இணைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி இசையை உள்ளடக்கிய பட்டியலை டிவோ மியூசிக் கொண்டுள்ளது. இதன்மூலம், உலகளாவிய விநியோகம், வெளியீட்டுக்கான அணுகல் மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை ஒத்திசைப்பதன் மூலம் பார்ட்னர் பயனடைவதை டிவோ மியூசிக் உறுதி செய்கிறது.


பிளாக்பஸ்டர் சவுண்ட்டிராக்ஸ் முதல் சுயாதீன இசை அறிமுகங்கள் வரை, டிவோ மியூசிக் கலைஞர்களுக்கு உள்ளூர் முதல் உலகளவில் தளம் அமைத்து தருகிறது. இது அவர்களின் படைப்பு அடையாளத்தைத் தக்க வைப்பதோடு அனைத்து தரப்பு ரசிகர்களுடனும் இணைக்க உதவுகிறது.

No comments:

Post a Comment