RMV The Kingmaker Documentary Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the kingmaker ன்ற ஒரு documentry படத்தை பத்தி தான் பாக்க போறோம். r m veerappan அவர்களோட life ல நடந்த பல முக்கியமான விஷயங்களை இந்த documentry ல cover பண்ணிருப்பாங்க.
இவரு யாரு னு என்னன்றதா நம்ம இதுல detailed அ பாக்கலாம். இவரு ஒரு senior political leader அப்புறம் satyamovies ன்ற ஒரு production company யும் வச்சுருந்தாரு. இவரு அந்த காலத்துல இருந்த periyar, arignar anna , MGR, karunanithi ஓட ரொம்ப close அ இருந்திருக்காரு. DMK ல இருந்து MGR விலகி வந்தஉடனே MGR க்கு support அ இருந்து ADMK கட்சி யா ஆரம்பிச்சாங்க. MGR அப்புறம் JAYALALITHA அவர்கள் முதல் அமைச்சரா இருந்தபோது இவரு 1977 ல இருந்து 1996 வரைக்கும் 5 தடவை minister அ இருந்தாரு. இவரு legislative assembly ளையும் member அ இருந்திருக்காரு.
25 படங்களுக்கு மேல இவரு produce பண்ணிருக்காரு. அதுமட்டுமில்ல இவரு நெறய blockbuster படங்களையும் குடுத்திருக்காரு. deivathaai , kavalkaran , moondrumugam , batsha னு நெறய சொல்லிட்டே போகலாம். இப்போ இருக்கற generation க்கு இவரை பத்தி தெரியணும்ன்றதுக்காக இந்த ஒரு முயற்சி எடுத்திருக்காங்க satyamovies ஓட head thangaraj veerapan . padam venukumar யும் அவரோட team மும் தான் இந்த documentry யா create பண்ணிருக்காங்க. RMV the kingmaker னு ஒரு tribute song யும் sep 9 ஆம் தேதி release பண்ணிருந்தாங்க. sep 9 aam தேதி தான் R M veerappan அவர்களுடைய 99 ஆவுது பிறந்தநாள். தமிழ் சினிமா ல இருக்கற பல பிரபலங்கள் அரசியல் வாதிகள் னு நெறய பேர் அவரோட அனுபவங்களை இந்த documentry ல share பண்ணிருக்காங்க. இந்த documentry ஓட preview யா இந்த வருஷம் april 9 ஆம் தேதி release பன்னிருத்தாங்க. அதுல rajinikanth யும் முதலமைச்சர் stalin யும் அவங்களோட அனுபவங்களை share பண்ணிருப்பாங்க.
பத்திரிக்கையாளர் ஆனா ரா கண்ணன் பேசும்போது, 1969 ல நடந்த election ல DMK கட்சி தான் ஜெய்க்குது. இதுக்கு மிக முக்கிய காரணம் MGR அவர்கள் தான். இருந்தாலும் karunanithi அவர்கள் MGR க்கு எந்த ஒரு minister பொறுப்பை கொடுக்கல. அதுமட்டுமில்ல இவங்க ரெண்டு பேருக்கும் நெறய கருத்துவேறுபாடு வரவும் கடைசியா தனிக்கட்சியை ஆரம்பிக்க போறேன் னு MGR முடிவு எடுக்குறாரு. இவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கறதுக்காக veerappan try பண்ணுறாரு அது முடியல. கடைசில veerappan MGR க்கு உறுதுணையா இருந்து ADMK கட்சியை ஆரம்பிக்க உதவி பண்ணிருக்காரு. புது கட்சியை ஆரம்பிக்க போறத MGR announce பண்ணும்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் னு தான் MGR பேசிருப்பாரு. இந்த மாதிரி வரிகளை எழுதி குடுத்தது R M veerpan தான்.
superstar rajinikanth பேசும்போது , Basha படத்தோட 100 days celebration ல rajini பேசுனா அரசியல் னால veerapan ஓட பதவி பறிபோச்சு. என்ன தான் rajini பொதுவான அரசியல் கருத்துகளை வெளி படுத்தினாலும் indirect அ அது அப்போ முதலமைச்சரா இருந்த jayalalitha அவர்களை சுட்டி காமிக்குது னு எல்லாரும் நினைச்சாங்க. இவரு பேசுனதுனால தான் பதவி போய்டுச்சுன்னு கேள்விப்பட்டு அவரோட வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்டுருக்காரு. ஆனா veerapan அதெல்லாம் ஒன்னு கிடையாது நீங்க கவலைப்படாதீங்க னு சொல்லிருக்காரு.
முதலமைச்சர் stalin பேசும்போது , அரசியல் ல நம்பகத்தன்மையான ஆட்கள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அந்தவிதத்துல RM veerapan dmk கட்சிக்கு விசுவாசமே இருந்தாரு னு share பண்ணிருக்காரு. இந்த மாதிரி சரத்குமார், திருமாவளவன், தமிழிசை, ரங்கராஜ பாண்டே, ஜெகத்ரட்சகன் னு பலர் அவங்களோட அனுபவங்களை share பண்ணிருக்காங்க.
இந்த documentry ஓட மொத்த duration 2 மணிநேரம். இவங்க சொல்லுற விஷயங்களை வச்சு Veerappan ஒரு எப்படி பட்ட மனிதர் அவரோட journey எப்படி இருந்தது னு நல்ல புரிஞ்சுக்கலம். இவருக்கு periyar ஓட கொள்கைகள் ரொம்ப பிடிக்கும். இது தான் முக்கியமான காரணம் dmk கட்சில சேருறதுக்கு. அதுமட்டுமில்ல அறநிலைத்துறை அமைச்சரா இருந்து srirangam கோயில் ஓட கோபுரத்தை சீரமைச்சிருக்கு இந்த மாதிரி பல interesting ஆனா விஷயங்களை இந்த documentry ல குடுத்திருக்காங்க.
இப்போ நடக்கற அரசியல் யும் அதுல இருக்கற அரசியல்வாதிகளை பத்தி தெரியணும்னா நம்ம கண்டிப்பா கடந்த காலத்துல இந்த காட்சிகள் எப்படி வந்தது யாரெல்லாம் பெரிய ஆட்களா இருந்தாங்க ன்றது தெரிறதும் ரொம்ப முக்கியம். அதுக்கு ஏத்த மாதிரி இந்த documentry யா குடுத்திருக்காங்க. சோ எல்லாரும் பாக்கவேண்டிய documentry படம் தான் இது. சோ miss பண்ணாம பாருங்க.

No comments:
Post a Comment