Wednesday, 28 January 2026

ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

 *“ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!*

 



துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக்க தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார்.


Geetha Arts & Swapna Cinema வழங்க,  சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது


தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும்  நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக  “ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும்  தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து,  புகழ் பெற்ற பவன் சடினேனி  ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிக்கின்றனர். புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான புரமோக்கள், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்,  இப்படத்தின் மீது  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் கண்ணாடியுடன், கீழ்நோக்கி பதிந்த தீவிரமான பார்வையுடன்,  இயல்பான தோற்றத்தில் இருக்கிறார் —அது அவரின் கதாபாத்திரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. அவரது உதட்டில் இருக்கும் சிகரெட்டும், மேலெழும் புகையும், அந்த கதாபாத்திரத்தில் உள்ள உணர்ச்சி ஆழத்தையும் சொல்லப்படாத கதைகளையும் சுட்டிக்காட்டுகிறது.


இந்த திரைப்படத்தின்  கதையோட்டத்தில் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் ,கதையின் திருப்புமுனையாக முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. அவர் இப்படத்தில் இணைந்துள்ளது, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அவரது தோற்றமே, இந்த டிராமாவுக்கு புதிய பரிமாணத்தையும் கனத்தையும் சேர்க்கும் சக்தியாக அவரை நிலைநிறுத்துகிறது.


இந்த திரைப்படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை சுஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கின்றனர்.


தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.


நடிகர்கள்: துல்கர் சல்மான்,  சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்


தொழில்நுட்ப குழு:

இயக்கம்: பவன் சடினேனி

கதை: கங்கராஜு குன்னம்

தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்

வழங்குபவர்கள்: Geetha Arts, Swapna Cinema

இசை: GV பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: சுஜித் சாரங் (Sujith Sarang)

தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்


No comments:

Post a Comment