தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
பொங்கல் கலைவிழா
கலைச் சங்கமம்
தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்ட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றமுத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும்விதத்தில், 1973 -ம்ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நா டக மன்றம் எனப் பெயர் சூட்டப்ட்டது. கலை, பண்பாட்டு இயக்ககத்தின்ஓர்அங்கமாகத்திகழும், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் தமிழ்நாடு அராசால் வழங்கப்டும் நிதியுதவியின் மூலம் பழமையான கலை களை வளர்த்தல், அக்கலை களில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய கலை நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பாரம்ப ரியக் கலைகளை பல மாநிலங்களிலும் உல களவிலும் எடுத்து செல்லுதல் மற்றும் தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பைய்யும் கலை ஞர்களுக்கு விருதுகள் வழங்குதல் மற்றும் நலிந்தநிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளை தமிழ்நாடுஇயல்இசை நாடகமன்றம் மேற்கொண்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்உத்தரவின் படி தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் “கலை சங்கமம்” கலை விழாவாக சிறப்பாக கொ ண்டாட ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்..*தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஒரே நாளில் (18.01.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கலை சங்கமம் கலை விழா* அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொள்ளும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் அந்தந்த மாவட்டங்களை சார்ந்த சிறப்பிற்குரிய, பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
வருகிற 22.01.2026 மாலை 6 மணியளவில் சென்னை, ராஜாஅண்ணாமலை புரம், முத்தமிழ் அரசவையில் இயல் சங்கமமும், 25.01.2026 மற்றும் 26.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் இசை மற்றும் நாட்டிய சங்கமமும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைச் சங்கமம் கலை விழாக்களின் வாயிலாக "நான்காயிரத்திற்கும் மேற் ட்டகலைஞர்கள் பங்கு பெறுவார்கள் மன்றத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் • நலிந்த நிசலை யில் வாழும் கலை ஞர்களுக்கு திங்கள் தோ றும் நிதியுதவிரூ.3000/- உயர்த்தப்ட்டு அதற்கான உத்தரவு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் 2021 ஜுன் மாதத்தில்வழங்கப் ட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்உத்தரவின் படி, இந்த ஆண்டு (2025-26) அகவை முதிர்ந்த, நலிவுற்ற நிலையில்வாழும் கலை ஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பத்திருந்த 2,500 கலைஞர்களுக்கும் ஒரே நேரத்தில் மாதாந்திர நிதியுதவி வழங்குவதற்கு ரூபாய் ஒன்பது கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 05.09.2025 அன்று கலைஞர்களுக்கு ஆவணகள் வழங்கப்ட்டன.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு, ஆண்டுததாறும்வழங்கப்ட்டு வந்த நிதி ரூ.3.00 கோ டியிலிருந்து ரூ.4.00 கோ டியாக மாண்புமிகு முதல்வர் அவர்களால் 2025–2026ஆம் ஆண்டு நிதி அறிவித்து உயர்த்தி வழங்கப் ட்டது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக் கலை விழா, பழங்குடியின் கலை விழா மற்றும் கlaiத் திருவிழாக்கள் நடத்துதல் போன்ற சீர்மிகு கலைப் பணிகளை மன்றம் செய்படுத்தியது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின்வழிகாட்டுதலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஓன்றிய அளவில்மட்டு இல்லாமல் உலக அளவில் தலை சிறந்த கலை நிறுவனமாகச் செயல் ட்டுவருகிறது . இச்செய்திகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் மற்றும்தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத் தலைவர் திரு. வாசகை சந்திரசேகர் அவர்களும், உறுப்பினர் செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் அவர்களும் தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment