Tuesday, 20 January 2026

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'மான சங்கர வர பிரசாத் 'திரைப்படத்தின் பிரம்மாண்ட

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'மான சங்கர வர பிரசாத் 'திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி*





உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மான சங்கர வர பிரசாத் ' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி தனது இதய பூர்வமான -ஆழமான - உணர்ச்சி பூர்வமான- செய்தியை வெளியிட்டிருப்பதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஒரு தெலுங்குத் திரைப்படம் இந்த இலக்கை அடைவது இதுவே அதிவேகமான சாதனையாகும். இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் மூன்று மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லையும் கடந்து, சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாகவுப் உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி எட்டாவது நாளில்  வலிமையான வசூலை பதிவு செய்த MSG-  பெரும் முன் பதிவுகளின் ஆதரவுடன் ஒன்பதாவது நாளில் கூடுதல் வலிமையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ள இந்த திரைப்படம்.. தற்போது மேலும் பல புதிய சாதனைகளை படைக்கும் நிலையில் உள்ளது. 


இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி பண்டிகை காலத்திற்கான புத்துணர்ச்சியை அளித்து வரும் இந்த நேரத்தில் சிரஞ்சீவி வசூலித்த தொகையைப் பற்றி பேசாமல் இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள தன்னுடைய ரசிகர்கள் - விநியோகஸ்தர்கள் மற்றும் கடினமாக உழைத்த படக் குழுவினரை பற்றி பேசி இருக்கிறார். 


அவர் வெளியிட்டிருக்கும் தன்னுடைய மனமார்ந்த குறிப்பில், 'மெகா ஸ்டார் எம் எஸ் ஜி - இந்த நிலையை அடைந்த பயணத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு மைல் கல்லும் தலைமுறை தலைமுறையாக வரும் திரைப்பட ரசிகர்களின் பாசத்தால் வடிவமைக்கப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். அவரது இந்த செய்தி ரசிகர்களிடையே பரவலாக எதிரொலித்தது. அவர்கள் அவரது நீடித்த பாரம்பரியத்தை கொண்டாடுவது போலவே இந்தத் திரைப்படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.‌


'மெகா ஸ்டார் 'சிரஞ்சீவியின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது...


''நமது எம் எஸ் ஜி யின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை பார்க்கும் போது என் இதயம் நன்றியுணர்வால் நிரம்புகிறது. நான் எப்போதும் உங்கள் அன்பின் விளை பொருள் என்று கூறி வருகிறேன். இன்று நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். 


இந்த சாதனை தெலுங்கு ரசிகர்களுக்கும், அன்பான விநியோகஸ்தர்களுக்கும், பல தசாப்தங்களாக எனக்கு துணையாக நிற்கும் எனது அன்பான மெகா ரசிகர்களுக்கும் சொந்தமானது. திரையரங்குகளில் நீங்கள் எழுப்பும் ஆரவாரமே என்னை முன்னோக்கி செல்ல வைக்கும் ஆற்றல். சாதனைகள் வரும். போகும். ஆனால் நீங்கள் என் மீது பொழியும் அன்பு ...என்றென்றும் நிலைத்திருக்கும்.‌


இந்த பிளாக் பஸ்டர் வெற்றி நமது அனில் ரவி புடி - தயாரிப்பாளர்களான சாஹூ மற்றும் சுஷ்மிதா ஆகியோருடனான முழு படக் குழுவினரின் கடின உழைப்பிற்கும், என் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு காணிக்கையாகும். இந்த கொண்டாட்டத்தை தொடர்வோம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்''. 


இந்த செய்தியின் மூலம் சிரஞ்சீவி திரைப்படத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல்.. ஒவ்வொரு பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின்னாலும் உள்ள கூட்டு உணர்வை இந்த துறைக்கு நினைவூட்டி இருக்கிறார். அவரது வார்த்தைகள் ஒரு எளிய உண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால் சிரஞ்சீவிக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு நித்யமானது.




No comments:

Post a Comment