*ZEE5 தமிழ் 2026-ஐ திகிலான பொழுதுபோக்கு வரிசையுடன் தொடங்குகிறது – ஜீவா & ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோருடன் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பமானது !!*
ZEE5 தமிழ், 2026-ஆம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்குகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதைகளுடன், வலுவான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களின் வரிசையை கொண்ட ZEE5 தமிழ், இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான கதைகள் மற்றும் முழுமையான பார்வை அனுபவங்களை இந்த ஆண்டு வழங்கத் தயாராக உள்ளது.
2026-க்கான ZEE5 தமிழின் வேகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. தளபதி விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, ZEE5 உள்ளடக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளில் அதிகமான சந்தாதாரர்களை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடித்த “மாஸ்க்” திரைப்படம் பெற்ற பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ZEE5 இந்த ஆண்டில் வலுவான தொடக்கத்தை உறுதி செய்துள்ளது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ZEE5 தமிழ், ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடிப்பில் உருவான சிறப்பு பொங்கல் பிராண்ட் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு திகில் நிறைந்த பொழுதுபோக்கை வழங்கும் தனது வாக்குறுதியை மேலும் வலுப்படுத்தும் இந்த கொண்டாட்டம், “ZEE5-இல் இந்த பொங்கல் – திகில் பொங்கல்” என்ற விளம்பர வாசகம் மூலம், இந்த விழாக்காலம் முழுவதும் சஸ்பென்ஸ், பரபரப்பு மற்றும் ஈர்க்கும் கதையாக்கம் நிறைந்ததாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
🔗 – https://youtu.be/9zd7u-vKS9g
பாரம்பரியமான பொங்கல் கொண்டாட்ட பின்னணியில் அமைந்த இந்த பிராண்ட் திரைப்படம், ஒரு மர்ம சம்பவம் நிகழ்வதன் மூலம் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. ஜீவா உறுதியான விசாரணை அதிகாரியாக நடிக்க, ஆண்ட்ரியா அந்த மர்மத்தின் மையக் கதாபாத்திரமாக மாறுகிறார். கதைக்களத்தின் உஷ்ணத்தையும், நியோ நாயர் பாணி திகில் சூழலையும் இணைக்கும் இந்த கதை, 2026-க்கான ZEE5 தமிழின் பலவகை திரில்லர் வகை உள்ளடக்க திட்டத்தை பிரதிபலிக்கிறது.
இந்த பொங்கலிலிருந்து, ZEE5 தமிழ் பார்வையாளர்களுக்கு வலுவான திரைப்பட வரிசையையும் வழங்குகிறது. இதில், விக்ரம் பிரபு மற்றும் L.K. அக்ஷய் குமார் நடித்த விமர்சகர்களால் பாராட்டப்பட்ட “சிறை” திரைப்படம் இடம் பெற்றுள்ளது. மற்றும் பிளாக்பஸ்டர் திகில் திரைப்படமான டிமாண்டி காலனி-யின் இரண்டாம் பாகப் படமும் வெளியாகவுள்ளது. இதோடு, சமுத்திரக்கனி நடித்த “பார்த்த ஞாபகம் இல்லையோ” மற்றும் ஒன்ஸ் அப்ஆன் எ டைம் இன் காயம்குளம் ஆகிய ஒரிஜினல் சீரிஸ்களும் இடம்பெறுகின்றன.
ZEE5 தமிழின் 2026 உள்ளடக்கத் திட்டம் குறித்து பேசிய லாய்ட் C. சேவியர்,
பிஸ்னஸ் ஹெட் – தமிழ் & மலையாளம் ZEE5, சீனியர் வைஸ் பிரசிடென்ட் (SVP) – மார்க்கெட்டிங், தென் இந்தியா கூறியதாவது:
“திகில் நிறைந்த, அதிக தாக்கம் கொண்ட பொழுதுபோக்கை வழங்கும் தெளிவான நோக்கத்துடன் ZEE5 தமிழ் 2026-இல் காலடி எடுத்து வைத்துள்ளது. ஜனநாயகன் இசை விழா மற்றும் கவினின் மாஸ்க் படம் ஆகியவற்றிற்கு கிடைத்த பெரும் வரவேற்பு, சக்திவாய்ந்த உள்ளடக்கத்திற்கான பார்வையாளர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. எங்கள் பொங்கல் கொண்டாட்ட திட்டம் மற்றும் பரபரப்பான திரைப்பட, தொடர் வரிசையுடன், தமிழ் ஒடிடி பொழுதுபோக்கில், புதிய உயரங்களை எட்டவும், ஆண்டுதோறும் பார்வையாளர்களை ஈர்க்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”
இந்த கொண்டாட்டத்தின் முகமாக இருக்கும் நடிகர் ஜீவா கூறியதாவது:
“ZEE5 தமிழ் உடன் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. பார்வையாளர்களை நேரடியாக இணைக்கும் வகையில் திகில் மற்றும் ரசிகர்களை ஈர்க்கும் கதைகளை வழங்குவதில் இந்த குழு முழு கவனம் செலுத்துகிறது. இந்த பொங்கல் படம், இந்த ஆண்டு ZEE5 தமிழில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் விழாக்கால உற்சாகத்தையும் திகிலையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது.”
நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா கூறியதாவது:
“இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். “மாஸ்க்” திரைப்படத்தின் புரமோஷனை க்ரியேட்டிவாக இதில் இணைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. என் நண்பன் ஜீவாவுடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷம். பார்வையாளர்கள் இதற்கு எப்படி வரவேற்பு தருவார்கள் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்.”
திகில் நிறைந்த திரில்லர்கள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் அதிரடியான சீரிஸ்களால் நிரம்பிய கண்டண்ட் வரிசையுடன், ZEE5 தமிழ் தனது பார்வையாளர்களுக்கான விழாக்காலமும் ஆண்டு முழுவதுமான பொழுதுபோக்கையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதுடன், 2026-ஐ தமிழ் ஓடிடி கதைக்களத்தை ஒரு மைல்கல்லாக மாற்ற தயாராக உள்ளது.
ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது.
12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.
உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.
Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.


No comments:
Post a Comment