Friday, 13 February 2026

Pookie Movie Review

Pookie Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pookie படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Ajay Dhishan, RS Dhanusha, Pandiarajan   னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது MC Ganesh Chandra .  இந்த படத்தை produce பண்ணிருக்கறது vijay antony  தான். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



எல்லா generation ல இருக்கற மக்களுக்கு love ல கஷ்டமான ஒரு விஷயம் breakup தான். அதா main theme அ வச்சு தான் இந்த படத்தை எடுத்திருக்காங்க. என்ன தான் technology எல்லாமே வளர்ச்சி அடைஞ்சாலும் breakup னால வர வலி எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். இந்த கதைல kailaash , அப்புறம் aazhi இவங்க ரெண்டு பேரும் ஆறு வருஷமா love பண்ணிருப்பாங்க. ஒரு நாள் traffic signal ல வச்சு இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை வரும், அவ்ளோதான் அந்த சண்டை பெருசா வெடிச்சு road ல நின்னுக்கிட்டே தாறுமாறா argument பண்ண ஆரம்பிக்குறாங்க. இவங்க இப்டி சண்டை போடுறத யாரோ video எடுத்து online ல post பண்ணிடுறாங்க. அது வும் viral அ போயிடுது. இதுனாலயே இவங்க வெளில போன மக்கள் இவங்கள judge பண்ண ஆரம்பிக்குறாங்க. இதுனால இவங்களோட six years of relationship அ break up பண்ணி love அ close பண்ணிடுறாங்க. இவங்களோட breakup க்கு அப்புறமா அந்த வலியை cope up பண்ண தெரியாம இவங்க எடுக்கற முடிவுகள் தப்பா தான் போய் முடியது. 


இந்த படத்துல நெறய சின்ன சின்ன scenes அ வச்சு தான் கதையை நகர்த்திடு போயிருக்காங்க. அதே மாதிரி இவங்களோட break up க்கு அப்புறம் இவங்க எப்படி இருக்காங்க ன்றதா ரொம்ப detailed  அ காமிச்சிருப்பாங்க. அதெல்லாம் audience ஆழ relate பண்ணிக்குற மாதிரி தான் இருக்கும். உதாரணத்துக்கு lover அ பத்தி யோசிக்கக்கூடாது னு work ல மூழ்கி போறது, ex lover அ மறக்க புதுசா ஒரு ஆழ தேடுறது, திடுருனு இவங்க சின்ன சின்ன விஷ்யத்துக்குளம் சண்டை போட்ட விஷயங்கள் ஞாபகத்துக்கு வரத்து னு சொல்லிட்டே போகலாம். இந்த scenes எல்லாமே ரொம்ப natural  அ இருந்தது. audience க்கும் இந்த scenes அ பாக்கும்போது அந்த characters ஓட pain  அ புரிஞ்சுக்க முடியும். 


இந்த படத்துல நெறய நல்ல moments யும் இருக்கு. and கதை போக போக உங்களுக்கு characters ஓட emotions அ deep ஆவும் காமிப்பாங்க. உதாரணத்துக்கு breakup க்கு அப்புறம் kailash க்கு நெறய விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும். இவருக்கு கோபம் வந்த ஆபத்து அ மாறிடுவாரு ண்றமாதிரி தான் காமிச்சிருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் love பண்ணிட்டு இருக்கும்போதே aazhi யா அடிச்சிருக்கலாம் ண்டரமாத்ரியும் dialogues வரும். இவரு breakup க்கு அப்புறம் gym க்கு போறது friends கிட்ட பேசுறது னு சமாளிப்பாரு. இன்னொரு பக்கம் aazhi ashram மூலமா ஏமாந்துபோய்டுறாங்க. இந்த மாதிரி ரெண்டு side யும் detailed அ காமிக்கறாங்க.  இந்த காலத்து பசங்களுக்கு ஏத்த மாதிரி தான் கதையை கொண்டுவந்திருக்காங்க. நெறய internet ல வர வார்த்தைகள் அப்புறம் social media ல வர jokes அ வச்சு பாக்கும்போதே அதா புரிஞ்சுக்கலாம். ஆனா இப்போ trend ஆகுற விஷயங்கள் ஒடனே காணாம போயிடுது. இந்த மாதிரி விஷயங்களை மட்டும் படத்துல கம்மி பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல comedy அ வர விஷயம் ந அது தெருநாய்களுக்கு funny ஆனா mindvoice அ குடுத்தது தான்.  ஒரு சில விஷயங்களை ரொம்ப அழகா எடுத்திருந்தாங்க. உதாரணத்துக்கு kailash க்கு எப்படி பட்ட பொண்ண chose பண்ணுறாரு ன்றதா observe பண்ணி அதுல தப்பு இருக்கு னு நினச்சு புரிஞ்சுக்குறாரு. இந்த scenes அ ரொம்ப matured அ director கொண்டு வந்திருக்காரு.  

இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது ajay dishan ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. maargan படத்துக்கு அப்புறமா இந்த படத்துல ரொம்ப natural  அ நடிச்ச மாதிரி இருந்தது. dhanusha  ஓட நடிப்பும் ரொம்ப cute ஆவும் எதார்த்தமாவும் இருந்தது. Shiyara and Vivek Prasanna, லாம் supporting actors அ இருந்தாலும் இவங்களோட portions இந்த படத்துல ரொம்ப முக்கியமானதா இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு வச்சு பாக்கும்போது vijay antony ஓட music தான் இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. அதே மாதிரி director ganesh chandra தான் இந்த படத்துக்கு cinematographer ஆவும் work பண்ணிருக்காரு. எல்லா scenes யும் audience க்கு பிடிச்ச மாதிரி ஓவுவுறு scenes யும் கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும்.  


. ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த pookie சோ உங்க family  and  friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல miss பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment