With Love Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம with love படத்தோட review அ தான் பாக்க போறோம். Abishan Jeevinth , anaswara rajan lead role ல நடிச்சிருக்காங்க. tourist family படத்தோட இயக்குனர் தான் இந்த படத்துல hero வா அறிமுகம் ஆயிருக்காரு. இந்த படத்தை இயக்கி இருக்கிறது மதன். இவரு இயக்குற முதல் படம் இது தான். இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்புறம் எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் company யும் சேந்து produce பண்ணிருக்காங்க. இது ஒரு romantic drama movie . இந்த படத்தை premiere show ல பாத்த பல celebraties , கதையை பாராட்டி அவங்களோட social media ல share பண்ணிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
satya வா நடிச்சிருக்க abhishan jeevinth க்கு arrange marriage மேல சுத்தமா interest ஏ கிடையாது. அதுனால இவரோட sister ஒரு blind date ஏ ஏற்பாடு பண்ணுறாங்க. அப்படி தான் satya monisha வா நடிச்சிருக்க anaswara rajan அ சந்திக்குறாரு. ரெண்டு பேரும் பழக ஆரம்பிக்குறாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப பிடிச்சி போயிடுது. இவங்க ரெண்டு பேரும் நல்ல பேச ஆரம்பிக்குறாங்க அப்போ தான் இவங்க ரெண்டு பேரும் ஒரே school ல படிச்சிருக்காங்க னு தெரிய வருது. இதுல ஒருத்தர் senior அப்புறம் இன்னொருத்தர் junior .அப்படி பேசிட்டு இருக்கும்போது இவங்க life ல நடந்த first love , heartbreak , னு நெறய விஷயங்களை share பண்ண ஆரம்பிக்குறாங்க. இவங்க ரெண்டு பேரோட journey என்னன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்தோட first half ரொம்ப fresh ஆவும் jolly ஆவும் போச்சு. மனச நெருடரா மாதிரி கதையும் சிரிக்க வைக்கிற மாதிரி scenes யும் வச்சுருக்காங்க. audience க்கு interesting அ இருக்கற மாதிரி reallife ல எதார்த்தமா நடக்கற விஷயங்களை குடுத்திருக்காங்க. உதாரணத்துக்கு life ல ஒருத்தர் க்கு வர முதல் காதல், ஒரு சில chance அ miss பண்ணுறது னு நெறய சொல்லிட்டே போலாம். அப்படியே படத்தோட second half அ பாக்கும்போது கொஞ்சம் emotional அ கதையை கொண்டு போயிருக்காங்க. life ல நடந்த ஒரு சில வருத்தமான விஷயங்களுக்கு closure கொடுக்குறது, நெருக்கமானவங்கள புரிஞ்சுகிறது னு ரொம்ப deep அ கதையை கொண்டு போயிருக்காரு director. இந்த படத்தை பாத்துட்டு வரும்போது கண்டிப்பா ஒரு நல்ல படம் பாத்தோம்னு ஒரு திருப்தி இருக்கும்னு சொல்லலாம்.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது abhishan jeevinth ஓட acting ரொம்ப natural ஆவும் sincere ஆவும் இருந்தது. அவரோட character அ புரிஞ்சுகிட்டு confident ஆனா performance அ குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். என்னதான் actor அ இவருக்கு இது முதல் படமா இருந்தாலும் romantic scenes அ இருக்கட்டும் emotional scenes அ இருக்கட்டும் ரெண்டுமே நல்ல நடிச்சிருக்காரு. anaswara rajan ஓட நடிப்பும் எதார்த்தமா இருந்தது. இவங்களோட dialogue delivery , body language னு எல்லாமே perfect அ குடுத்திருக்காங்க.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது sean roldan ஓட இசை இந்த படத்துக்கு பக்க பலம் னு சொல்லலாம். படத்துல வர emotional scenes அ இருக்கட்டும் romantic scenes அ இருக்கட்டும் மக்கள் ஓட மனசுல பதிய வைக்குற மாதிரி music அமைச்சிருக்கு. shreyas krishna ஓட cinematography bright ஆவும் colourful ஆவும் இருந்தது.
ஒரு good feel movie னா அது இது தான். audience க்கு கண்டிப்பா இந்த படம் பிடிக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. feb 6 த் அன்னிக்கு இந்த படம் release ஆகுது சோ கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment