Thursday, 12 March 2026

கலை சாரல் என்ற தலைப்பில் அகில இந்திய பல்கலைக்கழகம் சார்பில் தேசிய

 *கலை சாரல் என்ற தலைப்பில் அகில இந்திய பல்கலைக்கழகம் சார்பில் தேசிய இளைஞர்கள் திருவிழா சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக கோலாகலமாக துவங்கியது.*




அகில இந்திய பல்கலைக்கழகம் சார்பில் 39ம் ஆண்டு தேசிய இலைஞர்கள் திருவிழா சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக மாநில காலச்சார கலை திருவிழாவுடன் துவங்கியது. 


ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த தேசிய அளவிலான கலை திருவிழாவை அகில இந்திய பல்கலைக்கழக தலைவர் வினைய்குமார் பதக் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 


முன்னதாக 142 பல்கலைக்கழக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. 


“கலை சாரல்” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த கலாச்சார கலை திருவிழா போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, காஸ்மீர், சத்தீஷ்கர், டெல்லி, அரியானா, மும்பை, கோவா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள 142 பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 3000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


இந்தியா முழுவதும் 8 மண்டலமாக பிரித்து பல்கலைகழகங்களுக்கு இடையே நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற 142 பல்கலைக்கழகங்கலை சேர்ந்தவர்கள் சென்னையில் நடைபெறும் கலை திருவிழா போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 


ஒவ்வொரு மாநில காலாச்சாரத்தை கௌரவிக்கும் வகையில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களின் கலை திருவிழா வெகு விமர்சையாகவும், கோலாகலாமாகவும் துவங்கியது. 


தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கலை திருவிழாவில் மாணவர்கள் குழுவாக அவர் அவர் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெரும் நிலையில் வெற்றிப்பெரும் அணிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment