Tuesday, 31 March 2026

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!

 *பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அன்பான வணக்கம்!* 



நான் சோமிதரன், 'நீளிரா' திரைப்படத்தின் இயக்குநர். ஒரு பத்திரிகையாளராக உங்களுடன் இருந்து, பாலு மகேந்திரா அவர்களின் உதவியாளராக பணியாற்றி, ஆவணப் படங்களை இயக்கி இன்று இப்படத்தை இயக்கியுள்ளேன். அதுவும், என் கனவான என் மக்களின் கதையை படமாக எடுத்துள்ளேன். 


தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையை, ஆனால் சொல்ல வேண்டிய கதையை உங்கள் முன் படைத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ஈழ மக்களின் வாழ்க்கையை தமிழ் சினிமாவில் காட்ட வேண்டும் என்பது எனது கனவு மட்டுமல்ல, எத்தனையோ ஈழ மக்களின் கனவு, பாலு மகேந்திரா போன்ற பெரும் கலைஞர்களின் கனவு. 


இப்படத்தின் மீதான உங்கள் விமர்சனங்களை படிக்கவும், காணவும், உங்கள் கருத்துகளை கேட்கவும் ஆவலாக உள்ளேன். உங்கள் விமர்சனம் தான் இப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும். 


இந்த சமயத்தில் ஒரு வேண்டுகோளையும் உங்களிடம் வைக்கிறேன். 'நீளிரா' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி உங்கள் விமர்சனங்களில் குறிப்பிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த கல்யாண காட்சி தான் படத்தின் மிக முக்கியமான பகுதி என்பதால் அதை பற்றி முன்னரே அறிந்து கொள்ளாமல் திரையரங்கில் ரசிகர்கள் காண வேண்டும் என்று நான் விரும்புவதால் இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன். உங்கள் சகோதரனாக,  ஈழ மண்ணின் கலைஞனாக இந்த படத்தை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன். 



No comments:

Post a Comment