Wednesday, 4 March 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக ராக்கிங் ஸ்டார் யாஷ்

 *மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  (Toxic: A Fairy Tale for Grown-ups) திரை


ப்படம்  வெளியீட்டு தேதி ஜூன் 4,2026க்கு மாற்றப்பட்டது.*


*மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்*


*மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  திரைப்படம் வெளியீட்டு தேதி 4 ஜூன் 2026க்கு ஒத்திவைப்பு*


கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான Phars Films வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்‌ஃப் நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், மார்ச் 8ஆம் தேதி பெங்களூரில் நாடு முழுவதிலிருந்தும் ஊடகங்களை அழைத்து ஒரு பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். மேலும் 2026 மார்ச் 19 வெளியீட்டை முன்னிட்டு இறுதி கட்ட புரமோஷன் திட்டங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தன.


படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2 அன்று வெளியிட தயாராக இருந்தபோதிலும், தயாரிப்பாளர்கள் அந்த மியூசிக் வீடியோவை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி, இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் தொடங்கவிருந்த புரமோஷன் நடவடிக்கைகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.


கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பிறகு, இந்த படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம்.


உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம்.”


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'   திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் சந்திப்போம்.


டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் எழுதியுள்ள இந்த படத்தை, கீது மோகன்தாஸ்  இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள, இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations தயாரிக்கும் இந்த படம் 2026 ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது



*

No comments:

Post a Comment