Saturday, 14 March 2026

Vowels Movie Review

 Vowels Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vowels  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை  Hemanth Kumar, Dhilip Kumar, Sangeeth, Santhosh Ravi, Jagan Rajendran னு மொத்தம் 5 பேர் இயக்கிருக்காங்க.  இந்த படத்துலYugi Sethu, Chinni Jayanth, Raj Ayyappa, Deepak Paramesh, Samyuktha Viswanathanனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



atlas map book அ பத்தி எல்லாரும் கேள்வி பட்டிருப்பிங்க. atlas book அ பாத்தீங்கன்னா எல்லா வகையான map யும் நீங்க பாக்கலாம். இந்த படத்தோட tagline அ பாத்தீங்கன்னா an atlas of love . அதாவுது different ஆனா love journey தான் இந்த படத்தோட கதையே ன்ற மாதிரி ஒரு clue குடுத்திருக்காங்க. இதுக்கு ஏத்த மாதிரி மொத்தம் அஞ்சு பேரோட காதல் கதைகளை காமிக்கறாங்க. ஓவுவுறு கதையும் கிட்டத்தட்ட 30 நிமிஷம் கிட்ட வருது. and ஓவுவுறு கதைகளும் வேற வேற மாதிரி தான் இருக்கும். இந்த படத்தோட ஆரம்பமே mars இல் ஒரு அழகி ன்ற ஒரு சின்ன கதையோட தான் ஆரம்பிக்குது. இந்த குட்டி கதையோட ஹீரோ movie critic podcaster அ இருக்காரு. இவரோட வேலையே படத்தை deep அ analyse பண்ணி மக்களுக்கு எடுத்து சொல்லுறது தான். முதல் scene லேயே camera வழியா ஒரு பொண்ணை காமிக்கறாங்க. அந்த பொண்ணோட அழகையும் பத்தி சொல்லுறாங்க. கூடியே சீக்கிரமே ஒரு twist ஒன்னு வருது. அது என்னனா hero திடுருனு camera முன்னாடி உக்காந்துகிட்டு ஒரு குற்றத்தை பண்ணிட்டேன் னு வாக்குமூலம் குடுத்துட்டு இருக்காரு. அதுக்கு அப்புறம் ஒரு flashback காமிக்கறாங்க அதுல இவங்க ரெண்டு பேரும் எப்படி சந்திச்சாங்க ன்ற விஷயத்தை காமிப்பாங்க. இந்த flashback ல இந்த ரெண்டு characters யும் நெறய படத்தை பத்தி பேசிருப்பாங்க. உதாரணத்துக்கு The Shawshank Redemption அப்புறம்  Kanchivaram படங்களை சொல்லலாம். இதுல இருந்தே director க்கு cinema எவ்ளோ பிடிக்கும் ன்றதை பத்தியும் தெரிஞ்சுக்கலாம். 


அடுத்த segment eros , இதை direct பண்ணது dhilip kumar . இதுவும் ஒரு love story தான். இதுல yugi sethu வும் சின்னி jayanth யும் இருக்காங்க. ஆனா இவங்க ரெண்டு பேரும் ஒரே time ல screen ல வரமாட்டாங்க. yugi sethu தான் eros யா நடிச்சிருப்பாரு. eros தான் greece நாட்டோட காதல் க்கான கடவுள். ஒரு  ஆளு க்கு breakup ஆயிருக்கும் அதுனால தன்னோட வாழக்கையை முடிக்கணும் னு முடிவு பண்ணிட்டு இருப்பாரு. இவருகிட்ட தான் Eros கதையை சொல்லிட்டு இருப்பாரு. இதுல yugi sethu வார்தைகளால விளையாடுறது, comedy பண்ணுறது னு எல்லாமே நல்ல இருக்கும். இந்த portion பாக்கும்போது audience க்கு கண்டிப்பா refreshing ஆவும் இருக்கும். இதுக்கு நடுவுல வர சின்ன கதை தான் chinnijayanth ஓடது. இவருக்கு ஒரு flashback story இருக்கும், கிட்டத்தட்ட powerpandi படத்துல வர கதை தான் இவரோட life ல நடந்திருக்கும். அதுனால இவரோட scenes மட்டும் நம்ம easy அ guess பண்ணற மாதிரி அமைச்சிருக்கும். 


மூணாவுது segment தான் வர்ணஜாலம், இதை direct பண்ணது santosh ravi. இதுல deepak paramesh அப்புறம் samyuktha viswanathan நடிச்சிருப்பாங்க. இந்த கதை முக்காவாசி hospital குள்ள தான் நடக்கும். இந்த கதையோட idea ரொம்ப simple love க்கான அடிப்படையே நம்பிக்கை தான். samyuktha ஒரு cancer patient அ இருப்பாங்க and deepak ஒரு photographer. ஒருத்தர் மனத்தளவு ல ரொம்ப பாதிக்கப்பட்ட அவங்கள காப்பாத்திக்க யாருகிட்டயும் பழகாம இருப்பாங்க. ஆனா காதல் னு ஒரு விஷயம் வரும்போது ஒருத்தர் மேல நம்பிக்கை வைக்க திறந்த மனசோட பழகுறது தான் சரியான விஷயம். இந்த segment ஓட time கம்மியா இருந்தாலும், emotional ஆவும் எதார்த்தமாவும் இந்த கதையை மக்களுக்கு கொண்டு போய் சேத்துருக்காங்க னு தான் சொல்லணும்.  eros ஜாலி ஆவும் happy ending ஓட இருந்தாலும் வர்ணஜாலம் ஒரு sincere ஆனா love story அ காமிச்சிருக்காங்க. 


நாலவுது segment தான் மீண்டும் ஒரு பயணம், இதை direct பண்ணது jagan rajendran . இது love story அ இருந்தாலும் road safety அ பத்தி ஒரு awareness சொல்லுற மாதிரி தான் இருக்கு. இந்த கதை ஒரு motorcycle racing அ பத்தி இருக்கு. raj ayappa தான் ஒரு mass ஆனா biker அ நடிச்சிருக்காரு. இந்த segment ல bike racing main அ இருந்தாலும் racing scenes ரொம்ப கம்மியா தான் இருக்கு. இந்த கதை மூலமா சொல்ல வர விஷயமும் ரொம்ப simple அ தான் இருக்கும் இருந்தாலும் suspense அ கடைசி வரைக்கும் கொண்டு வந்திருப்பாங்க. அஞ்சவுது segment தான் reload, இதை direct பண்ணது hemanth kumar. இந்த கதை ல வருவாங்க எல்லாரும் ஏதோ ஒரு mafia group அ சேந்தவங்க மாதிரி இருப்பாங்க. ஆனா இவங்களோட background அ clear அ காமிச்சிருக்க மாட்டாங்க. இந்த கதை ல relationship க்கு நடுவுல நம்பிக்கை இல்லனா அது எப்படி இருக்கும் ன்றதை காமிக்க்ர  விதமா அமைச்சிருக்கும். lovers  க்கு நடுவுல  trust மட்டும் இல்லனா overthink பண்ண வைக்கும்,  overthinking வந்துச்சுன்னா அந்த love நிலைச்சு நிக்காது. 


இந்த அஞ்சு different  ஆனா love story  அ வச்சு இந்த anthology படத்தை கொண்டு வந்திருக்காங்க directors . இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கது Saravanaa Subramaniam.  எல்லா கதைகளையும் ஒரு song  அ குடுத்திருக்காரு. அதே மாதிரி bgm மும் இந்த படத்துக்கு highlight அ அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment