Thursday, 2 April 2026

இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் " ரூம் பாய் " ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

 இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ்  திரில்லர் " ரூம் பாய் " ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.







ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாகும் சஸ்பென்ஸ் - திரில்லர் படம் " ரூம் பாய் " 


சென்னை அண்ணா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற " ரூம் பாய் " படக்குழுவினர்.


ACM சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படம் " ரூம் பாய் " 


C.நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 


காமெடிக்கு இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், youtube புகழ் காத்து கருப்பு கலை, இன்ஸ்டா புகழ் கற்பகம் மற்றும் கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர்,கேரளா பெஹமின் உட்பட பலர் நடித்துள்ளனர்.


இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.


சி.பாரதி ராஜன் Dft இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடலாசிரியர் சூரியமூர்த்தி வரிகளுக்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். 

படத்தொகுப்பை D.V. மீனாட்சி சுந்தர் செய்திருக்கிறார். 

நடனம் - தினா

ஸ்டண்ட் - கார்த்திக் வர்மன் 

விளம்பர வடிவமைப்பு S.B.ராஜா

உடைகள்-  வளையாபதி 

மக்கள் தொடர்பு -  புவன் செல்வராஜ்

தயாரிப்பு மேலாளர் - முத்துக்குமார்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்-  A.சக்தி.

தயாரிப்பு மேற்பார்வை - R.முரளி.


தயாரிப்பு - சூரியகலா சந்திரமூர்த்தி


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.


இவர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 

2002 ஆம் ஆண்டு "தாத்தா "  என்ற குறும்படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவிற்கான  தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் 50க்கும் மேற்பட்ட ஆவணம்,கார்ப்பரேட் மற்றும் விளம்பர படங்களை இயக்கியவர்.


படம் பற்றிய இயக்குனர் ஜெகன் ராயன் பகிர்ந்தவை..


இது ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கி இருக்கிறோம்.


படப்பிடிப்பு இயற்கை எழில் கொஞ்சும் திருப்பத்தூர், ஏலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 


பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 


இறுதி கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இம்மாதம் ( ஏப்ரல் ) 17ஆம் தேதி  திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறோம்  என்றார் இயக்குனர் ஜெகன் ராயன்.


படம் இம்மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார, பண்பாட்டு  விழாவில் கலந்துகொண்டு " ரூம் பாய் " படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அது அவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment