Sunday, 17 May 2026

தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்

 *"தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்*






சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் 'மண்டவெட்டி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி.


இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, "'மண்டவெட்டி' திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு உடல்ரீதியாகவும் மாறி வாழ்ந்திருக்கிறார் கோமலி. மிகுந்த சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல் ரீதியாக கடினமான தருணங்கள் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு அவர் நடித்தார். இந்தக் கதை, தன்னைவிட பலமிக்க சக்தியுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையையும், மனக்குழப்பங்களையும் மையமாகக் கொண்டது. அதனால் இந்த கதாபாத்திரம் பலவீனம், கொந்தளிப்பு, வலி மற்றும் மீண்டு வரும் மனவலிமை என இவை அனைத்தையும் கோமலி தேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்". 


மேலும் அவர் கூறியதாவது, "சூப்பர் நேச்சுரல் கதையை படம் மையமாகக் கொண்டிருந்தாலும் உணர்வு சார்ந்த உண்மைகளையும் 'மண்டவெட்டி' பேசும். பழமைவாதத்தில் இருந்து தன்னையே மீண்டும் கண்டுபிடிக்க முயலும் ஒரு பெண்ணின் கதையே இதன் மையம். அந்தக் கதாபாத்திரத்திற்கு கோமலியின் அற்புதமான நடிப்பை படக்குழுவே வியந்து பாராட்டியது" என்றார். 


டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'மண்டவெட்டி' திரைப்படம் பதட்டம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். 'செஞ்சி' எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தை மையமாகக் கொண்ட மர்மமான புராணக் கதையைக் கொண்டு, மனதை பதறவைக்கும் மற்றும் உணர்வுப்பூர்வமான உலகிற்குள் இந்த திரைப்படம் பயணிக்கிறது. தற்போது படத்தின்ன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


*தொழில்நுட்பக் குழு:*


தயாரிப்பு நிறுவனம் : டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,

தயாரிப்பாளர் & இயக்குநர் : சரண்ராஜ் செந்தில்குமார்,

ஒளிப்பதிவு : பிரகாஷ் மனிதன்,

படத்தொகுப்பு : குணா பழனிசாமி,

இசையமைப்பாளர் : தீபக் வேணுகோபால்,

சண்டைக் காட்சிகள் : கெளதம்,

உடை வடிவமைப்பு : சங்கீதா சென்,

ஒலி கலவை : டோனி ஜே ஆண்டனி,

டிஐ கிரேடிங் : பாலகங்காதரன்,

சிஜிஐ : விஜயன்,

தயாரிப்பு மேலாளர் : மகேந்திரன் கந்தசாமி,

ஒப்பனை : நர்மதா

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்

No comments:

Post a Comment