DC Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம DC படத்தோட review வை தான் இன்னிக்கு பாக்க போறோம். இந்த படத்தோட director Arun Matheswaran . இது Sarat Chandra Chattopadhyay ஓட novel ஆனா devadas ஓட reimagination கதை னு சொல்லலாம். இந்த படத்தோட கதையை பாத்தீங்கன்னா das அ நடிச்சிருக்காரு lokesh kanagaraj . இவரு police station ல இருக்கற weapons அ திருடுறாரு. அது மட்டும் இல்ல ஒரு police officer அ கொலையும் பண்ணிடுறாரு. இவரை arrest பண்ணுறதுக்காக police officer bojaraj அ நடிச்சிருக்க krish dhyal களத்துல எறங்குறாரு. இவங்க கிட்ட இருந்து தப்பிக்க das யும் அவரோட கூட்டாளிகளும் சென்னை ல இருக்கற ஒரு lodge ல தங்குறாங்க. அங்க தான் parvathy யா நடிச்சிருக்க sanjana krishnamurthy யா சந்திக்குறாரு. இவங்க ரெண்டு பேரும் பழகுற காலம் கொஞ்சமா இருந்தாலும் எதிர்பாராத ஒரு விபத்தை சந்திக்கறாங்க parvathy. இதுக்கு நடுவுல தான் das, பாலியல் தொழில் செய்யற chandra வ நடிச்சிருக்க wamiqa வை சந்திக்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி devadas ஓட reimagination story தான் இது. தேவதாஸ் parvathy யா love பண்ணுறதுக்கு முன்னாடியே இறந்து போயிருந்தாங்க னா என்ன நடந்திருக்கும்? devadas ஒரு காதலனா இல்லாம குற்றம் செஞ்ச நபர் அ இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் ? ன்ற imagination ல தான் arun இந்த கதையை எடுத்துருக்காரு. director ஓட முதல் படமான rocky ல எவ்ளோ violence இருக்கும் னு உங்களுக்கே நல்ல தெரியும். ஆனா அதுல violence மட்டும் கிடையது ஒரு மனுஷனோட dark side யும் ரொம்ப அழுத்தமா காமிச்சிருப்பாரு. ஆனா அதுக்கு அப்புறம் வந்த படங்கள் ல இந்த side இல்லாம இருந்தது அதுனால இவரோட படங்கள் பெருசா hit ஆகல. ஆனா இது எல்லாத்தயும் மாத்தி rocky படத்துல இருக்கற அந்த same emotions and feelings அ கதைல கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும்.
DC ன்ற title அ பாத்தீங்கன்னா படத்தோட main character ஆனா Das அப்புறம் Chandra ஓட பேரை வச்சு தான் இருக்கும். அதே மாதிரி இவங்க ரெண்டு பேர் தான் இந்த படத்துக்கு உயிர்நாடியும் கூட. das ஓட character அ பாக்கும்போது அவரோட life full அ வன்முறையை தான் இருக்கும். இவரு முரட்டுத்தனமான மனுஷனா தான் இருப்பாரு. இவரு இந்த மாதிரி மோசமா மாறுறதுக்கு க்கான காரணம் என்ன ன்ற flashback story a மெல்லமெல்ல தான் director சொல்லிருப்பாரு. அப்படியே chandra பக்கம் போனம்னா, சின்ன வய்சுல தப்பான பாதைக்கு தள்ளப்படுறாங்க. இவங்களோட வாழக்கை பாதை ரொம்ப பயங்கரமாவும், இருண்டதாவும் தான் இருக்கும். என்ன தான் கோவத்துல ஒருத்தர கொள்ளுற அளவுக்கு துணிச்சலும், மனசளவுல ஒரு கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்டா சின்ன குழந்தைய தான் இருக்காங்க. இப்படி extreme ல இருக்கற இந்த ரெண்டு character யும் சந்திக்கும்போது தான் கதையே சூடு பிடிக்குது னு சொல்லலாம்.
director ஓட முன்னாடி படங்களை பாத்தீங்கன்னா parents ஆழ கைவிட பட்ட கொழந்தைகள் , இல்ல சமூகத்தால் ஒடுக்கப்பட்ட கொழந்தைகள் characters எப்பவுமே common அ இருக்கும். இந்த படத்துல அது இருந்தாலும், இந்த characters அ handle பண்ண விதம் தான் ரொம்ப அழகா இருக்கும். இந்த ரெண்டு characters க்கும் இவரு கொடுத்த detailing, emotional depth னு எல்லாமே strong அ இந்த கதைக்கு அமைச்சிருக்கு . இந்த படத்துல ரெண்டு விஷயங்கள் highlight னு சொல்லலாம், ஒன்னு பக்கவா chereograph பண்ணிருக்கற action scenes , எங்க பாத்தாலும் ரத்தம் தெறிக்கும், bullets பறக்கும் னு சொல்லலாம். அதே மாதிரி ரெண்டாவுது aniruth ஓட இசை தான். சும்மா சொல்லக்கூடாது இவரோட bgm, songs எல்லாமே வேற level ல இருந்தது. ஒரு சில scenes ல லாம் இவரோட bgm ருத்ரதாண்டவம் ஆடிருக்கு னு தான் சொல்லலம். இந்த bgm and songs காகவே theatre experience worth னு தான் சொல்லணும்.
lokesh kanagaraj actor அ இது தான் முதல் படம். என்னதான் முதல் படமா இருந்தாலும், தன்னோட நடிப்பால audience ஓட கவனத்தை தன்னோட பக்கம் இழுத்தறுக்கறு னு தான் சொல்லணும். இவரோட emotions, dialogue delivery, body language னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. wamiqa ஓட acting யும் அதிரடியா இருந்தது. இவங்களோட career ல ஒரு முக்கியமான படமா இது அமைச்சிருக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. இவங்களோட action scenes க்கும் theatre ல விசில் பறந்தது. police அ வர krish , sanjana, lokesh ஓட friends அ நடிச்சிருக்கறவங்க னு எல்லாருமே அவங்களோட role அ சரியா நடிச்சிருக்காங்க.
இந்த படத்தோட technical aspects அ பத்தி பாக்கும்போது mukesh ஓட cinematography , g k பிரசன்ன ஓட editing எல்லாமே பக்கவா இருந்தது. stunt cherographers க்கு ஒரு பெரிய கைதட்டல் குடுக்கலாம். fightscenes எல்லாமே hollywood level ல இருந்தது.
மொத்தத்துல ஒரு அருமையான action thriller படம் தான் இது. சோ மறக்காம உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment