Friday, 21 August 2026

Insidious: Out of the Further Movie Review

Insidious: Out of the Further Movie Review


ஹாய் மக்களே, இன்னிக்கு நம்ம Insidious: Out of the Further படத்தோட review-வை தான் பாக்கப் போறோம். இந்த படத்துல Amelia Eve, Island Austin, Brandon Perea, Lin Shaye, Maisie Richardson-Sellers, Sam Spruell னு பலர் நடித்திருக்காங்க. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கறது Jacob Chase. Insidious series இதுவரைக்கும் Lambert family-யை மையமா வைத்து வந்த நிலையில், இந்த படம் ஒரு புதிய கதாபாத்திரங்கள் மற்றும் புதிய supernatural rules உடன் இன்னொரு fresh direction-க்கு போகுது.



இந்த படத்தோட கதையைப் பொறுத்தவரைக்கும் Gemma ஒரு dentist மற்றும் ஒரு young mother. தன்னோட சின்ன வயசுல வாழ்ந்த அதே வீட்டுல, தன்னோட மகள் Maya-வை வளர்த்து வராங்க. ஒரு கட்டத்துல Gemma-வுக்கு The Further அப்படிங்கற உயிருக்கும் இறந்தவர்களுக்கும் நடுவுல இருக்குற supernatural world-க்கு போகக்கூடிய ஒரு சக்தி இருக்கறது தெரிய வருது. அதுமட்டுமில்லாம அங்க இருக்குற சில விஷயங்களை நிஜ உலகத்துக்கே கொண்டு வரக்கூடிய ability-யும் அவங்களுக்கு இருக்கு. இதனால ஆரம்பிக்குற விஷயம் கொஞ்சம் கொஞ்சமா ஒரு பெரிய supernatural பிரச்சனையா மாறுது.


Gemma-வோட அம்மாவுக்கும் அவங்களுக்கும் இருந்த relationship அவங்க இறப்பதுக்கு முன்னாடி ரொம்பவே மோசமாயிடுது. ஆனால் அதே நேரத்துல தன்னோட மகள் Maya மேல Gemma ரொம்ப அன்பா இருக்காங்க. தன்னோட childhood memories-ஐயும், அம்மாவை பற்றிய photographs-ஐயும் எல்லாத்தையும் cardboard boxes-ல போட்டு மறைச்சு வச்சிருக்காங்க. ஆனா அவங்க இருக்குற அந்த வீட்டிலேயே திடீர்னு nightmares வர ஆரம்பிக்குது. அந்த nightmares மூலமா The Further-க்குள்ள போக ஆரம்பிக்கிறாங்க. அங்க நடக்குற விஷயங்கள் ஒவ்வொண்ணுமே பயங்கரமான அனுபவமா மாறுது.


படத்துல dental horror-ஐ ஒரு முக்கியமான element-ஆ use பண்ணிருக்காங்க. குறிப்பா Gemma தன்னோட dental clinic-ல ஒரு வயதான patient-க்கு treatment பண்ணுற ஒரு scene ரொம்பவே creepy-ஆவும் unexpected-ஆவும் இருக்கு. Teeth, dental instruments, claustrophobic spaces எல்லாத்தையும் வைத்து horror create பண்ணியிருக்காங்க. Jump scares மட்டும் நம்பாம, நமக்கு கொஞ்சம் கூட எதிர்பார்க்க முடியாத விஷயங்கள்ல இருந்து பயத்தை உருவாக்குறது இந்த படத்தோட பெரிய plus.


ஆரம்பத்துல Gemma சொல்ற supernatural விஷயங்களை அவங்களோட boyfriend Nick பெருசா நம்ப மாட்டாரு. ஆனா The Further-ல இருந்து Gemma சில objects-ஐ நிஜ உலகத்துக்கு கொண்டு வர்றதை தன்னோட கண்ணால பார்த்த பிறகு அவருக்கும் இந்த விஷயத்துல நம்பிக்கை வருது. இதுக்கப்புறம் கதையோட supernatural side இன்னும் interesting-ஆ மாறுது.


இந்த படத்துல நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச Elise கதாபாத்திரமும் திரும்பி வராங்க. Lin Shaye மீண்டும் Elise-ஆ வர்றது Insidious ரசிகர்களுக்கு ஒரு நல்ல surprise. The Further-க்குள்ள Gemma-வை சந்திக்கிற Elise, இறந்திருந்தாலும் உயிரோட இருக்குறவங்களுக்கு எப்படி communicate பண்ணணும், demons-ல இருந்து எப்படி பாதுகாத்துக்கணும்னு வழி காட்டுறாங்க. Claire என்ற ஒரு orphaned woman உடன் சேர்ந்து Elise இந்த supernatural world-ஐ எதிர்கொள்றாங்க. சில இடங்கள்ல Elise ஒரு superhero மாதிரி கூட feel ஆகுற அளவுக்கு powerful-ஆ காட்டப்பட்டிருக்காங்க, அதுவும் நல்ல fun-ஆ இருக்கு.


இந்த படத்துல இன்னொரு highlight Cyrus. The Further-ல இருக்குற ஒரு cult leader-ஆ வர்ற Sam Spruell, அந்த character-க்கு sema creepy look கொடுத்திருக்காரு. அவரோட makeup, அந்த disturbing smile, body language எல்லாமே character-ஐ இன்னும் scary-ஆ மாற்றுது. The Further-ல இருக்குற விஷயங்களையெல்லாம் real world-க்குள்ள கொண்டு வரணும்னு நினைக்குற ஒரு dangerous villain-ஆ அவரோட character அமைக்கப்பட்டிருக்கு.


படத்தோட performance-ஐ பத்தி பாத்தோம்னா Amelia Eve நல்லா perform பண்ணிருக்காங்க. ஒரு mother-ஆ தன்னோட குழந்தையை protect பண்ணணும் ன்ற emotions-ம், supernatural world-ஐ எதிர்கொள்ளுற fear-ம் நல்லா வெளிப்படுத்திருக்காங்க. Maya-வா நடிச்சிருக்குற Island Austin-ம் cute-ஆவும் natural-ஆவும் இருக்காங்க. Brandon Perea-வோட Nick character-ம் கதைக்கு நல்ல support கொடுக்குது.


படத்தோட இன்னொரு பெரிய plus point என்னன்னா, horror scenes-ஐ புதுசு புதுசா யோசிச்சு உருவாக்கியிருக்காங்க. Dental mirror reflection மூலமா வர்ற ஒரு jump scare கூட ரொம்ப creative-ஆ இருக்கு. Claustrophobic situations, creepy locations, unexpected appearancesன்னு ஒவ்வொரு scene-லயும் ஏதாவது ஒரு புதிய idea இருக்குற மாதிரி feel ஆகுது.


மொத்தத்துல Insidious: Out of the Further ஒரு horror franchise-ல ஆறாவது படம் என்றாலும், பழைய formula-வையே repeat பண்ணாம புதுசா சில supernatural rules, புதிய characters, புதிய horror elementsன்னு கொண்டுவந்திருக்காங்க. Reality-யும் The Further-யும் mix பண்ணி கதையை வேகமா கொண்டு போற விதம் நல்ல engaging-ஆ இருக்கு. Family emotions-ம் horror-ம் சரியான அளவுல கலந்து இருக்குறதால படம் இன்னும் interesting-ஆ மாறுது.


சோ horror movies பிடிக்கிறவங்க, குறிப்பா Insidious series ரசிகர்கள், இந்த படத்தை கண்டிப்பா theatre-ல போய் பாருங்க. ஒரு நல்ல scary மற்றும் entertaining experience-ஆ இந்த படம் இருக்கும்!

No comments:

Post a Comment