Monday, 14 September 2026

தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்"

 தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்"








பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகனின் " பனங்காட்டான் "


ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன்  தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பனங்காட்டான்" 


மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பான விமர்சனங்களை பெற்ற  கிடுகு,கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார் 


இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன், மாஸ்டர் ரோஹித்,செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ் குமார் ஆகியோர் முக்கி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்திற்கு சுந்தர். N இசையமைத்துள்ளார்.


ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ளார் 


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வீரமுருகன்.


படம் பற்றி இயக்குனர் வீரமுருகன் பகிர்ந்தவை...


தென் மாவட்டத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளேன்.


ஒரு முக்கிய பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போக கூடாது என்று இன்று வரை மறைமுகமாக அதனை கடைபிடித்து வருகின்றனர்.

அது என்ன மாதிரியான கட்டுப்பாடு, அது சமூகத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது,என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் இந்த " பனங்காட்டான் " 


பாலமேடு ,தூத்துக்குடி, ராமநாடு, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம்,  விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்றார் இயக்குனர் வீரமுருகன்.


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment