Sunday, 27 September 2026

கோரா’வுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தைத் தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக்!

 ‘கோரா’வுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தைத் தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக்!


தமிழின் முன்னணி நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கிற்கு சினிமாவைத் தாண்டி விளையாட்டு மற்றும் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக மோட்டார் சைக்கிள் ரைடிங் அவரது வாழ்க்கையின் முக்கியமான ஒரு பகுதியாக மாறியுள்ளது. படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் நேரங்களில் பைக் ஓட்டுவது, பயிற்சி மேற்கொள்வது என தனது ஆர்வத்தை தீவிரமாக வளர்த்து வருகிறார்.


பைக் ஓட்டுவதை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல், அதில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு, மோட்டார் ஸ்போர்ட்ஸில் தன்னை படிப்படியாக தயார்படுத்தி வருகிறார் கௌதம். மோட்டார் சைக்கிள் பந்தயங்களை தொடர்ந்து கவனித்து வரும் அவர், ஒவ்வொரு பயணத்தின் மூலமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறார்.


திரைப்படப் படப்பிடிப்புகளின் பரபரப்பிலிருந்து சிறிது நேரம் விலகி, தனக்குப் பிடித்த விஷயத்தில் முழு கவனத்தையும் செலுத்துவது கௌதமுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கிறது. பைக் ரைடிங் மூலம் உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனதளவிலும் தன்னை சவாலுக்கு உட்படுத்தி வருகிறார். அதே நேரத்தில், தனது பைக்கையும் அதன் செயல்பாடுகளையும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.


இந்த ஆர்வத்தின் மற்றொரு பகுதியாக, தனது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறிய ஆவணப்பட வீடியோவை கௌதம் ராம் கார்த்திக் உருவாக்கியுள்ளார். இதில் அவரது மனதுக்கு நெருக்கமான பைக் ‘கோரா’ முக்கிய இடம் பிடித்துள்ளது.


கௌதம் மற்றும் அவரது நண்பர்களின் பைக் பயணம், அதற்கான தயாரிப்புகள், பயிற்சிகள் என பல்வேறு தருணங்களை இந்த வீடியோ பதிவு செய்கிறது. குறிப்பாக, ஒரு ரைடருக்கும் அவரது பைக்கிற்கும் இடையே உருவாகும் அந்த நெருக்கத்தையும், பைக் மீதான கௌதமின் ஆர்வத்தையும் இந்த ஆவணப்படம் அழகாக வெளிப்படுத்துகிறது.


திரையில் நடிகராக பார்க்கப்படும் கௌதம் ராம் கார்த்திக்கின் இன்னொரு பக்கத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது. தனது ஆர்வத்தை வெறுமனே பொழுதுபோக்காக வைத்துக்கொள்ளாமல், அதை முறையாக கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் பயணித்து வருகிறார்.


தொடர்ந்து திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், கிடைக்கும் நேரத்தை மோட்டார் ஸ்போர்ட்ஸுக்காக ஒதுக்கி வரும் கௌதம், ஒரு ரைடராக தன்னை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார். அந்த புதிய பயணத்தின் தொடக்கத்தைத்தான் தற்போது வெளியாகியுள்ள ‘கோரா’ வீடியோ பதிவு செய்கிறது.


நட்பு, ஆர்வம் மற்றும் பைக் ரைடிங்கின் மீதான காதல் ஆகியவற்றுடன் கௌதம் ராம் கார்த்திக்கின் இந்த புதிய பயணம் இனி எப்படி தொடரப் போகிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறிய முன்னோட்டமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment