Thursday, 1 October 2026

டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

 *“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!*




நடிகர் சனந்த்தின் திரைப்பயணம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. அவரது திறமை முழுமையாக வெளிப்படாமல் போன வலிமிகுந்த காலகட்டமும் இருந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பின் மூலம் உச்சத்தைத் தொட்டு சனந்த் மிளிர்வது, அவருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘டோரதி’ படத்தின் டிரெய்லரில் ஆக்ரோஷமான உடல்மொழியுடன் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் சனந்த் தோன்றியதால், அவர் ஒரு கிராமத்து முரட்டு இளைஞராக நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. ஆனால், சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய அசாத்தியமான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த சனந்த், தற்போது தனது திரைப்பயணத்தின் மிகச்சிறந்த நடிப்பு எனப் பலரும் பாராட்டும் ஒரு கதாபாத்திரத்தைப் பெற்றுள்ளார். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து வருகின்றன.


“இது எனக்கு கனவு நனவான தருணம். ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பயணித்த காலத்திலிருந்தே, வாழ்நாள் முழுவதும் நினைவுகூரக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து அந்தக் கதாபாத்திரத்தைத் திரும்பிப் பார்த்து மகிழ வேண்டும் என்று விரும்பினேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தை நான் முழுமையாக நம்பினேன். அந்த நம்பிக்கையே தற்போது எனக்கு கிடைக்கும் பாராட்டுகள்” என்றார்.


முதல் முறையாகக் கதையைக் கேட்ட தருணத்திலேயே அந்தக் கதாபாத்திரத்துடன் தனக்கு ஏற்பட்ட ஆழமான தொடர்பு குறித்து சனந்த் கூறுகையில், “கார்த்திக் சுப்புராஜ் சார் கதையைச் சொன்னபோதே, அந்தக் கதாபாத்திரத்துடன் நான் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போனேன். கதையைக் கேட்ட அந்த நொடியில் இருந்தே ‘டோரதி’ என்னுள் பிறந்துவிட்டாள். கார்த்திக் சுப்புராஜ் சாரின் பார்வை மிகவும் தெளிவாக இருந்தது. வழக்கமான சினிமா பாணியிலான உடல்மொழி அல்லது செயற்கையான பாவனைகள் மூலம் இந்தக் கதாபாத்திரத்தை வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. மாறாக, அதன் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கவே விரும்பினார். மற்ற கதாபாத்திரங்களும் வலுவாக இருந்ததால் எனது கதாபாத்திரமும் மேலும் வலுவானது. ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் இந்தப் படத்தின் தூண். அவை படத்தில் எனது கதாபாத்திரத்தின் இருப்பையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருந்தன” என்கிறார்.


படத்தின் தொழில்நுட்ப சிறப்புகள் குறித்தும், குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசுவின் காட்சியமைப்புகள் குறித்தும் சனந்த் பாராட்டியுள்ளார். “இசைஞானி இளையராஜா சாரின் இசை, இந்தப் படத்தின் ஆசீர்வாதம். ஒளிப்பதிவாளர் திரு சார் தனது காட்சியமைப்புகளின் மூலம் இந்தப் படத்தை உலக அளவில் பேசப்படும் படைப்பாக மாற்றியுள்ளார். அவரது காட்சிமொழி, சர்வதேச மற்றும் பிராந்திய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தது. ‘டோரதி’ திரைப்படம் எனக்கு ஆத்மார்த்தமான அனுபவம். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது என் வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்று.குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அம்மாக்கள், சகோதரிகள் என பெண்கள் எனது கதாபாத்திரத்தையும் நடிப்பையும் பாராட்டுவதைப் பார்க்கும்போது அந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்றார். 

 

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரத்தின் மாற்றம் குறித்து மேலும் பேசிய சனந்த், “படத்தின் இறுதிப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் எனது கதாபாத்திரம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும். அந்தத் தருணத்தை வெளிப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய சவால். அதுவரை சுப்பு கதாபாத்திரம் பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த அனைத்தையும் முழுமையாக விட்டுவிட்டு, ஒரு புதிய உணர்வுப்பூர்வமான நிலைக்குள் என்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சி கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ, மேலோட்டமானதாகவோ தோன்றாத வகையில் கார்த்திக் சுப்புராஜ் சார் அந்த மாற்றத்தை உணர்வுப்பூர்வமாகவும் நுட்பமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். திரு சாரின் கேமரா அந்தக் காட்சியில் இடம்பெற்ற உணர்வுகளின் நுணுக்கங்களை அற்புதமாகப் பதிவு செய்தது. அதே நேரத்தில், இசைஞானி இளையராஜா சாரின் இசை அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்தது. காட்சி, ஒளிப்பதிவு மற்றும் இசை என மூன்றும் அற்புதமாக ஒன்றிணைந்த இடம் அது. அந்த காட்சி எப்போதும் என் நினைவில் இருக்கும்” என்றார்.


கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கியுள்ளன. சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சரவணன் சந்திரன் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பவன் நரேந்திரா நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

The Transformation in ‘Dorothy’ Was Emotionally Overwhelming for Me – It Will Remain One of the Most Cherished Moments of My Career”

 *“The Transformation in ‘Dorothy’ Was Emotionally Overwhelming for Me – It Will Remain One of the Most Cherished Moments of My Career” – Actor Sananth*




_*Sananth Opens Up About His Career-Defining Performance in ‘Dorothy’ and the Emotional Connect He Has Found with Audiences.*_


Sananth’s career as an actor has never been a bed of roses, but rather an excruciating phase where his potential, more often than not, remained unexplored. It is therefore a truly gladdening moment for the actor and movie buffs to see him shine at his pinnacle with his powerful performance in the latest release, Dorothy. While the trailers showcased him as a ruffian with aggressive mannerisms, leading audiences to expect him to portray a rustic character, Sananth delivered an absolute surprise with his remarkable performance as Subbu. The actor, who has waited for years for a role that could truly showcase his potential, has finally found what many are calling the best of his career, with reviews and audience reception showering him with praise.


“This is a dream come true for me. As an aspiring actor, I have always desired to play something that will remain as a lifetime role, which I can look back on after decades and rejoice. I thank my producers, Karthik Subbaraj and the entire team for giving me a role that explores the deepest emotions of human beings,” says Sananth, who adds that he completely believed in the process, and that conviction has now earned him a positive reception.


Sharing how deeply he connected with the character from the very first narration, Sananth says, “When Karthik Subbaraj narrated the script, I was emotionally bound to the role. Dorothy was born in me from the moment I listened to the script. The vision of Karthik Subbaraj was so clear that he didn’t want to showcase this character through clichéd mannerisms, but instead wanted to convey the emotions. My character gained its substance with the support of the other characters. Both Rishikanth and Keerthy Suresh’s roles were designed with so much intensity that they kept elevating my presence in the movie.”


Sananth also has special words for the film’s technical brilliance, particularly the music of Maestro Ilaiyaraaja and the visuals of cinematographer Thirunavukkarasu. “Isaignani Ilaiyaraaja sir’s music is like a celestial bliss showered on the film. DOP Thiru sir has made the film achieve a global phenomenon. His visual language conveys more emotions to international and regional audiences. Dorothy will be a soulful tattoo engraved deep in my heart, and playing this role is like winning a lifetime honour. To see the audiences, especially mothers and sisters from every home, appreciating my character and performance leaves me speechless.” Adding more about the climax scene, Sananth claims, “There is a particular sequence towards the end where the character undergoes a transformation, and portraying that moment was one of the biggest challenges for me. It required me to completely let go of everything I had established about Subbu until then and emotionally surrender to a new space. Karthik Subbaraj sir presented that transformation with extraordinary sensitivity, never allowing it to feel forced or superficial. Thiru sir’s camera captured the emotional nuances so beautifully, while Isaignani Ilaiyaraaja sir’s music added an incredible soul to the entire sequence. The combination of their presentation, visuals and music made the moment far more powerful than what I had imagined while performing it. It remains one of the most challenging and emotionally fulfilling portions of my experience in Dorothy.”


Dorothy is written and directed by Karthik Subbaraj and produced by Jyoti Deshpande, Guneet Monga Kapoor and Achin Jain. The film stars Keerthy Suresh, Sananth and Rishikanth, with an original score by Maestro Ilaiyaraaja. Presented by Jio Studios and Sikhya Entertainment, the film is produced by Sikhya Entertainment and Dhammam Films. S. Thirunavukkarasu is the Director of Photography, Pavan Narendra is the Executive Producer, Saravanan Chandran has contributed additional screenplay, and Ganesh Siva is the editor.

தயாரிப்பாளருக்கு லாபம் தந்தது இயக்­கு­நர் பாலாஜி சொந்த ஊரில் ‘தி டார்க் ஹெவன்’ வெற்றி விழா !

 தயாரிப்பாளருக்கு லாபம் தந்தது இயக்­கு­நர் பாலாஜி சொந்த ஊரில்

‘தி டார்க் ஹெவன்’ வெற்றி விழா !









ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் தூங்குவேன்: ஓர் இயக்குநரின் நிம்மதிப் பேச்சு

!

ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் ஹீரோ வரை: நடிகர் சித்து பேச்சு!


‘தி டார்க் ஹெவன்’ நான்

பெருமையாக சொல்லும் முதல் படம் :நடிகை தர்ஷிகா பேச்சு!


விரைவில் உண்மையான வசூல் விவரங்களை முழுமையாக வெளியிடுவோம் ‘தி டார்க் ஹெவன்’தயாரிப்பாளர் பேச்சு!


அண்மையில் வெளியான 'தி டார்க் ஹெவன் ' திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது. இதன் வெற்றியை இயக்குநர் பாலாஜி தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் விழா எடுத்துக் கொண்டாடினார்.


நெல்­லை­யைச் சேர்ந்த இயக்­கு­நர் பாலாஜி இயக்­கத்­தில் கடந்த செப்­டம்­பர் 18ம் தேதி வெளியான படம் 'தி டார்க் ஹெவன்'. இதில் சித்து, தர்­ஷிகா, ரித்­விகா, வேல ராம­மூர்த்தி, நிழல்­கள் ரவி, ஜெயக்­கு­மார், சாரண், அருள் டி சங்­கர், சத்­தியா, சாப்­ளின் பாலு, கோபால் மற்­றும் பலர் நடித்­திருந்தனர்.


இப்­ப­டத்­திற்கு மணி­கண்­டன் பிகே ஒளிப்­ப­திவு செய்ய, சக்தி பாலாஜி இசை­ய­மைத்­துள்­ளார். 

இப்­ப­டத்தை கோதை என்­டர்­டெ­யின்­மென்ட் மற்­றும் எம்­எஸ் ஸ்விஸ் பிலிம் பேக்­டரி நிறு­வ­னங்­கள் இணைந்து  தயா­ரித்­துள்­ளன.

சஸ்­பென்ஸ் திரில்­ல­ராக வெளி­யான இப்­ப­டம் 

ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பைப் பெற்­றுள்­ளது. 

 

இயக்­கு­நரின் சொந்த ஊரான நெல்­லை­யில் நேற்று இப்­ப­டத்­தின் வெற்றி விழா­வும், ரசி­கர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் நிகழ்ச்­சி­யும் நடந்­தது. இந்த விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராகப் பங்­கேற்ற திரு­நெல்­வேலி, நாகர்­கோ­வில் தின­ம­லர் நிர்­வாக இயக்­கு­நர்  தினேஷ், வழக்கறிஞர் கம­ல­நா­தன் ஆகி­யோர் படக் குழு­வி­ன­ருக்கு வெற்றி விழாக் கேட­யங்களை வழங்கி வாழ்த்திப் பேசி­னர்.


விழா­வில் திரு­நெல்­வேலி, நாகர்­கோ­வில் தின­ம­லர் நிர்­வாக இயக்­கு­நர் தினேஷ் பேசி­ய­ போது:


 ‘’இயக்­கு­நர் பாலாஜி கடந்த ஒன்பது ஆண்­டு­க­ளாக எனக்கு நண்­பர். நெல்­லை­யைச் சேர்ந்த இவர் நம் ஊர் நடி­கர்­களை வைத்து இந்தப் படத்தை சிறப்­பாக எடுத்­துள்­ளார். இது ஒரு சஸ்­பென்ஸ் திரில்­லர் கதை. இந்தப் படத்­திற்கு சக்தி பாலாஜி சிறப்­பாக இசை அமைத்­துள்­ளார். இந்தப் படத்­தில் கதாநாயகன், கதாநாயகி மற்­ற நடி­கர், நடி­கை­களும் அவர்­க­ளது கதா­பாத்­தி­ரங்­களை மிக­வும் சிறப்­பாக நடித்­துள்­ள­னர். நெல்லை மண்­ணைச் சேர்ந்த பாலாஜி, இது­போல் பல வித்­ தியா­ச­மான கதை­களைக் கொண்ட படங்­களை இயக்க வேண்­டும். வழக்கமாகச்

சென்­னை­யில் தான் வெற்றி விழாவைக் கொண்­டா­டு­வார்கள். ஆனால் தன் சொந்த மண்­ணில் இந்த படத்­தின் வெற்றி விழாவைக் கொண்­டா­டிய இயக்­கு­நர் பாலா­ஜிக்கு வாழ்த்­துக்கள்’’. என்றார்.


விழாவில் நடிகர் ஜெயக்குமார் பேசும்போது,


"நான் இந்தப் படத்தில் பாலாஜி சிரமப்பட்டதை, அவர் எதிர்கொண்ட போராட்டங்களை நேரில் பார்த்தேன் .என்னிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார் . பாலாஜி ஒரு நல்ல ஆத்மா. அவர் எப்போது எப்போது எங்கே அழைத்தாலும் நான் வருவேன்.இது வித்தியாசமான படக் குழு. இங்கே யாரும் மேல், கீழ் என்றெல்லாம் கிடையாது. தயாரிப்பாளர் கூட டீ வாங்கிக் கொண்டு  வருவார்.இது எனக்குப் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது. இது ஆத்மார்த்தமாக நினைத்து பணியாற்றிய படம் .அனைவரின் ஆசிகளும் பாலாஜிக்கு உண்டு .படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்றார்.


படத்தில் நடித்திருந்த நடிகை தர்ஷிகா பேசும்போது,


" இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மாதிரி இருக்கிறது.படம் எடுக்கும்போது நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். ஆனால் எடுத்து முடித்துவிட்டு பாடல்கள் வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு, நன்றி தெரிவிக்கும் சந்திப்பு என்றெல்லாம் நடைபெற்றது. திரையரங்குகளுக்கெல்லாம் சென்றோம். இதெல்லாம் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.இது எனக்கு முதல் படம், அதைப் பெருமையாக சொல்லக்கூடிய படம், இது எனக்கு சிறப்பான மேடை.

என்னை இந்தப் படத்தில் உமையாளாகக் கொண்டு வந்த இயக்குநருக்கு நன்றி. அந்த உமையாள் பாத்திரம் என் மனதில் எப்போதும் நிற்கும்.

சிலநேரம் நல்ல படங்கள் வரும்; ஆனால் அவை வெளியே தெரியாமல் போய்விடும். இந்தப் படத்தின் வெற்றியைப் பார்ப்பதற்காக   பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற பெரிய பெரிய திரையரங்குகளுக்கு எல்லாம் நாங்கள் செல்கிற போது, அங்கெல்லாம் இந்தப் படம் சென்றடைந்து இருக்கிறபோது எங்கள் தயாரிப்பாளர்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. அந்த அளவிற்கு முறையாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி" என்றார்.


படத்தின் நாயகன் சித்து பேசும்போது,


" இங்கே நான் கலகலப்பாக ஜாலியாகப் பேசலாம் என்று வந்தேன். ஆனால் இங்கே என்னைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட காணொலியைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது.  எனது வாழ்க்கை ஒரு பெரிய பயணமாகத்தான் இருக்கிறது.நான் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்து சாலிக்கிராமத்தில் ஒரு பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டு தான் எனது முயற்சிகளை எல்லாம் எடுத்தேன். எனது முயற்சிகளைப் பார்த்து விட்டுத் தான் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்கள்.அதிலிருந்து தான் நான் இப்போது வரை வளர்ந்து கொண்டிருக்கிறேன். இங்கே பேசும் போது 'ராஜா ராணி' படத்தில்  நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக வருவேன் என்றார்கள். அது மட்டுமல்ல இந்தப் படத்தின் முதல்  கதாநாயகனாக  நடித்த அந்த நடிகர் நடித்த 'வல்லினம்' படத்திலும் நான் அப்படி வந்திருப்பேன்.


ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கிறோமே என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது இதுதான் ,கேமரா எல்லாருக்கும் ஒன்றுதான். கேமரா யார் முன்னாடி வந்து நின்றாலும் அழகாகக் காட்டும்.அப்படி முன்னாடி நிற்பதற்கு நமக்கான நேரமும் வாய்ப்பும் வரவேண்டும் அவ்வளவுதான். இயக்குநர் சகோதரர் பாலாஜியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நான் படத்தில் நடித்த போது கூட எனக்கும் அவருக்கும் ஒரு நெருக்கம் ஏற்படதில்லை. ஏன் என்றால் அவர் பணி சார்ந்த அழுத்தத்தில் இருந்தார். நான் எப்படி நடிப்பது என்று இருப்பேன். ஆனால் இந்தப் படத்தின் விளம்பர வேலைகள் ஆரம்பித்த போது தான் அவரைப் பற்றி என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வளவு சினிமாவின் மீது வெறியுள்ள ஒரு நபராக அவர் இருக்கிறார்.அது மட்டுமல்லாமல் நகைச்சுவை உணர்வு உள்ளவர் .எனக்கு ஒரு நண்பராகவும் சகோதரராகவும் அவர் கிடைத்துள்ளார்.


இன்றும் சாலிகிராமத்தில் தனக்கான ஒரு வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும் பலரை நான் பார்த்து வருகிறேன். அப்படி ஏராளமான பேர் இருக்கிறார்கள். 45 வயது ஆகியும் கூட திருமணம் செய்து கொள்ளாமல்,  சினிமாவில் ஏதாவது செய்து விட்டுத்தான் திருமணம் என்று இருக்கிறார்கள்.வலியைச் சுமந்து கொண்டு இருக்கும் அவர்களை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கும். அப்படி வலியோடு பலர் இருக்கிறார்கள்.


 இப்படிப்பட்ட சூழலில் சகோதரர் பாலாஜி நல்ல திறமைசாலியாக இருக்கிறார். அவர் நிச்சயமாகத் தொடர்ந்து வெற்றி பெறுவார்.நிறையபேர் படம் செய்து விட்டு அதை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது,எப்படி வியாபாரம் செய்வது, எப்படி வெளியிடுவது, எப்படி விளம்பரப்படுத்துவது  என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

பாலாஜி நன்றாகக் கதை எழுதுவார்; நன்றாகக் காட்சிகள் அமைப்பார்; நன்றாக இயக்குவார்; நன்றாகப் பணிபுரிவார். இதையெல்லாம் தாண்டி அவர் திட்டமிடுதலில் பெரிய நிபுணராக இருக்கிறார். எப்படி ஒரு படத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாகவும் தீவிரமாகவும் இருக்கிறார்.எப்படிக் கொண்டு போய் சேர்த்து அந்தப் படத்தை பெரிய படமாக மாற்றுவது என்பதெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும்.

இது ஒரு இயக்குநருக்கு மிகவும் தேவை. அந்த அளவில் இவர் பெரிய இடத்தை அடைவார்.அதேபோல் இதில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர்,இசை அமைப்பாளர் போன்ற அனைவரும் பெரிய அளவிற்கு வருவார்கள்.என்னுடன் நடித்த  ரித்விகா, தர்ஷிகா, ஜெயக்குமார் சார் மற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி" என்றார்.


தயாரிப்பாளர் கோபால் பேசும்போது ,


"இந்த படம் சக்சஸ் மீட் நடத்தி இருக்கிறோம். வெற்றி விழா கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். இந்தப் படம் என்ன  சாதித்திருக்கிறது என்றால் நாங்கள் போட்ட முதலில் இருந்து இதுவரை இரண்டு மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது .நான் இதைப் பெருமையோடு  சொல்வேன்.இந்தப் படம் எங்களுக்கு  மிகப்பெரிய லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது .எந்தப் படம்பற்றியும் லாபக்கணக்கை  யாரும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் தைரியமாகச் சொல்ல இருக்கிறோம்.முழு வசூல் விவரம் பற்றி விரிவாகப் பிறகு கூறுவோம்.ஒரு சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம் பெரிய வெற்றி ,பெரிய லாபம் பெற்றிருக்கிறது என்பது மிகப்பெரிய விஷயம்.இதை சாத்தியப்படுத்திய பார்வையாளர்களுக்கு நன்றி.படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

"என்றார்.


இயக்குநர் பாலாஜி பேசும்போது,


" இன்று நான் நிம்மதியாக ஒரு விஷயத்தை மட்டும் செய்வேன், ஏழாண்டுகள் கழித்து இன்று தான் நான் நிம்மதியாகத் தூங்குவேன். 2019 முதல் 2026 ஆண்டு கால கட்டத்தில் இன்று தான் நான் நிம்மதியாகத் தூங்கப்போகிறேன். சிலர் சின்ன சின்ன பிரச்சினைகளோடு வந்ததாகச் சொன்னார்கள். நான் பெரிய பெரிய பிரச்சினையோடு தான் வந்தேன்.பிரச்சினைகளைக் கண்டு பயந்து விடக்கூடாது தொடர்ந்து ஓட வேண்டும் என்று எனக்குக் கிடைத்த  அறிவுரையை என்றும் மறக்க முடியாது.

என் உதவி இயக்குநர்களை மறக்க முடியாது .சினிமாவில் 24 கிராஃப்ட் இருப்பதாகச் சொல்வார்கள் .ஆனால் இவர்களே 20 கிராஃப்ட்களைச் செய்தது போல்  உழைத்தார்கள்.  இதில் நடித்திருந்த சித்து, ரித்விகா, தர்ஷிகா, ஜெயக்குமார் சார் ,நிழல்கள் ரவி சார், வேல ராமமூர்த்தி சார்  மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஒவ்வொருவர் பெயரையும் கூறினால் யாராவது பெயர் விடுபட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி. இதில் சின்ன பாத்திரங்களில் வந்துள்ள நடிகர்கள் திறமை உள்ளவர்கள். அவர்கள் தனக்கான அடையாளத்தை விரைவில் பெறுவார்கள். முறையாக அவர்கள் முயன்று வாய்ப்பு தேடினால் பெரிய இடத்துக்குச் செல்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது .அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு நன்றி நன்றி" என்றார்.


விழாவில் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.இது தமிழ்த் திரை உலகில் பல ஆண்டுகளாக நிகழாத ஒரு காட்சியாகும்.