Featured post

ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் பேனரில் ராஜாபிரபு தயாரிப்பில், சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் 'கிளிக்' (Click)

 *ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் பேனரில் ராஜாபிரபு தயாரிப்பில், சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் ...

Saturday, 31 October 2026

ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் குடும்பத்துடன் காண வேண்டிய தெலுங்கு திரைப்படம் 'ஜிக்ரிஸ்'

 *ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் குடும்பத்துடன் காண வேண்டிய தெலுங்கு திரைப்படம் 'ஜிக்ரிஸ்'*




*தெலங்கானா கத்தார் மாநில விருது பெற்ற நகைச்சுவைத் திரைப்படம் | 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். தெலுங்கு OTT-யில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது அகில இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: 'ஜிக்ரிஸ்' திரைப்படத்தை அமேசான் பிரைமில் பாருங்கள்!*


*100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம், தெலுங்கு OTT-யில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது அகில இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: 'ஜிக்ரிஸ்' திரைப்படத்தை அமேசான் பிரைமில் பாருங்கள்!*


உங்கள் நண்பர்களுடன் கழித்த அந்த அழகான நாட்களை நினைவுகூர்ந்து, உங்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு திரைப்படத்தைத் தேடுகிறீர்களா? 


தெலுங்கு OTT-யில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ஜிக்ரிஸ்' திரைப்படம், இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பிரபலமாகி வருகிறது. 


நான்கு நண்பர்களின் மறக்க முடியாத சாலைப் பயணம்: 


இயக்குநர் ஹரிஷ் ரெட்டி உப்பலா இயக்கிய 'ஜிக்ரிஸ்' ...ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது நட்பின் கொண்டாட்டம். சிறுவயது நண்பர்களான கார்த்திக், பிரவீன், வினய் மற்றும் பிரசாந்த் ஆகிய நால்வரும் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் கோவாவிற்கு ஒரு சாலைப் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், அவர்களிடம் பணமோ, கைபேசியோ, ஜிபிஎஸ்ஸோ இல்லை; அவர்களிடம் இருப்பது ஒரு பழைய மாருதி 800 கார் மட்டுமே!


நகைச்சுவையுடன் தொடங்கும் இந்தப் பயணம், பல திருப்பங்களுடன் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியாக மாறி, இறுதிக் காட்சிகளில் மனதை உருக்கும் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தைத் தருகிறது.


மாநில விருது பெற்ற நடிப்பு மற்றும் விமர்சனப் பாராட்டு:


'ஜிக்ரிஸ்' தெலுங்கு ஓடிடி தளங்களில் வெளியானபோது பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றிக்கு முக்கிய காரணம், எந்தவித செயற்கைத்தனமும் இல்லாத அதன் இயல்பான நகைச்சுவையே. படத்தின் சிறப்பான கதையும், நடிப்பும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா புருகுலா, தனது சிறப்பான நடிப்பிற்காக மதிப்புமிக்க தெலங்கானா கத்தார் திரைப்பட விருது - சிறந்த நகைச்சுவையாளர் விருதை வென்றார். கார்த்திக் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 


இப்போது தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில்!

நல்ல கதைகளுக்கு எல்லைகள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 'ஜிக்ரிஸ்' இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த வார இறுதியில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டு மகிழ, 'ஜிக்ரிஸ்' திரைப்படத்தை இப்போதே அமேசான் பிரைம் வீடியோவில் பாருங்கள்!

வேட்டுவம்’ பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.l

 *'வேட்டுவம்’  பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.*



பொங்கல் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்!


இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்மன்’, ‘சேயோன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவற்றின் வெளியீட்டுத் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், பொங்கல் 2027 வெளியீட்டை முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ‘வேட்டுவம்’, பொங்கல் திரையரங்க வெளியீட்டுப் போட்டியில் களமிறங்கியுள்ளது.


சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த வீடியோவிற்கு, இந்தியில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் சௌபின் ஷாஹிர், கன்னடத்தில் கிச்சா சுதீப், தமிழில் இயக்குநர் பா. இரஞ்சித் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.


அப்போகலிப்டிக் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள், மோதல்கள், எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்ட கதைக்களத்தில் பயணிக்கிறது. பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான அடிமுறை மற்றும் மல்லகம்ப் உள்ளிட்ட கலைகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காகப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.


ஆர்யா, தினேஷ், ஷபீர், ஷோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தி, ஒளிப்பதிவாளராக ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே., இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார், சண்டைப் பயிற்சி இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள பான் இந்தியத் திரைப்படமான ‘வேட்டுவம்’, பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரம்மாண்டமான கதைக்களம், தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான உலகப் பின்னணியுடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது ‘வேட்டுவம்’.

தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!

 *தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*






தென் தமிழகத்தின் திருவிழாக்களையும் மக்களின் பண்பாட்டையும் தன் காந்தக் குரலினாலும் வில்லுப்பாட்டு இசையினாலும் கட்டிப்போட்ட கிராமத்துக் கலைஞர் மாதவி, முதன்முறையாகத் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அடியெடுத்து வைத்துள்ளார்!


'பம்பர்' படப்புகழ் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ (அக்டோபர் 30) வெளியாகி, பக்தியையும் கிராமத்து உணர்வுகளையும் நேசிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


வில்லுப்பாட்டு கலையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்பு பெற்ற வில்லிசைக் கலைஞர் மாதவி, முதன்முறையாகச் சினிமாவில் பாடியுள்ள இந்த ஆன்மீகப் பாடல், கிராமத்துக் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக அதிர்வை அப்படியே உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்!


இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாரம்பரியமிக்க நாட்டுப்புற இசையில் உருவாகியுள்ள 7 பாடல்களில், இந்தப் பாடல் திருவிழா மேளதாளங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டின் உச்சக்கட்ட அனுபவத்தைத் தருகிறது. ‘தாய் கிழவி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் மூலம் கவனம்பெற்ற பாடலாசிரியர் மு.ஜெகன் கவிராஜ், ‘வீரம் பாயும் நெல்லையிலே...’ எனத் தொடங்கும் இந்தப் பாடலின் கம்பீரமான வரிகளை எழுதியுள்ளார்.


7 MILES PER SECOND Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அருள்நிதி - அமீர் கூட்டணியுடன் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், 'ஆடுகளம்' நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி மற்றும் நந்தினி எனப் பலரும் நடித்துள்ளனர்.


-ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு & ரூபனின் படத்தொகுப்புடன் தென் தமிழகத்தின் பண்பாடு, வீரம் மற்றும் ஆழமான தெய்வ நம்பிக்கையை அச்சு அசலாகக் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு. பாடல்களின் உரிமையை PRIME9 MUSIC நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் ‘வேட்ட சாமி’ திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஊர் திருவிழாவின் அசல் பரவசத்தையும், வில்லிசை மாதவியின் கம்பீரமான குரலையும் முதன்முறையாகத் திரையில் அனுபவிக்கத் தயாராகுங்கள்!


https://youtu.be/LABmSOxaJqw?si=nyGlSUltOd866mfk

Singgaramm Movie Review

Singgaramm Tamil Movie Review 

ஹாய் மக்களே! இன்னைக்கு நம்ம பார்க்கப்போற படம் Singgaramm. இந்தப் படத்தோட கதை கொஞ்சம் வித்தியாசமானது. ஒரே நாளில் ஒருத்தரோட வாழ்க்கை மொத்தமா மாறிப்போனா என்ன நடக்கும்? அப்படிங்கிற ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை மையமா வச்சு இந்தப் படத்தை எடுத்திருக்காங்க.



KV Kathirvelu இயக்கத்தில் Yogi Babu ஹீரோவா நடிச்சிருக்காரு. படத்துல அவர் Singaram அப்படிங்கிற கதாபாத்திரத்துல வர்றாரு. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு திடீர்னு லாட்டரியில் பணம் கிடைக்குது. அதுக்குப் பிறகு அவரோட வாழ்க்கையே மாறிப்போகுது. பணம் வந்ததும் அவருடைய ஆசைகளும் கனவுகளும் மாறுது. ஒரு கட்டத்துல அரசியலிலும் நுழைய நினைக்கிறார். அதுக்குப் பிறகு என்ன நடக்குது என்பதுதான் படத்தோட மீதிக்கதை.


திடீர்னு பணம் கிடைச்சா ஒருத்தரோட வாழ்க்கை மட்டுமில்ல, அவரைச் சுற்றியிருக்கிறவங்களோட அணுகுமுறையும் எப்படி மாறும்னு இந்தப் படம் காட்டுது. அதே மாதிரி, சமூகத்துல ஒதுக்கப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் அரசியலுக்கு வரும்போது அவருக்கு ஏற்படுற அனுபவங்களையும் கதையோட சேர்த்து சொல்லியிருக்காங்க.


படத்துல காமெடி காட்சிகள் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. லாட்டரி கிடைச்சதும் ஏற்படுற சந்தோஷம், வீட்டுக்குள்ள நடக்கிற சின்னச் சின்ன சண்டைகள், கிராமத்துல நடக்கிற பிரச்சினைகள்னு பல இடங்கள்ல நம்மைச் சிரிக்க வைக்கிறாங்க.


Yogi Babu வழக்கம்போல அவரோட ஸ்டைல்ல நடிச்சிருக்காரு. அவரோட காமெடி டைமிங் கதாபாத்திரத்துக்கு நல்லா பொருந்தியிருக்கு. அதே நேரத்துல எமோஷனலான காட்சிகளிலும் அவருடைய நடிப்பு கவனிக்க வைக்குது. அவருடைய அப்பாவா வர்ற MS Bhaskar, தன்னோட அனுபவமான நடிப்பால் குடும்பக் காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்த்திருக்காரு. மற்ற நடிகர்களும் அவங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களைச் சிறப்பா பண்ணியிருக்காங்க.


இந்தப் படத்துல எனக்குக் குறிப்பா பிடிச்ச விஷயம் அதோட கிராமத்துப் பின்னணி. அந்தக் காலத்து கிராமத்து வாழ்க்கை, வீடுகள், மக்கள், சுற்றுப்புறம்னு எல்லாத்தையும் ரொம்ப இயல்பா காட்சிப்படுத்தியிருக்காங்க. Cinematography மற்றும் Production Design படத்துக்கு நல்ல அழகைக் கொடுத்திருக்கு. ஒவ்வொரு காட்சியும் அந்தக் காலகட்டத்துக்கே நம்மைக் கூட்டிட்டுப் போற மாதிரி இருக்கு.


மொத்தத்துல Singgaramm ஒரு சின்ன கதைக்குள்ள பணம், குடும்பம், சமூக முன்னேற்றம், அரசியல் ஆசைன்னு பல விஷயங்களைப் பேசுற ஒரு கிராமத்துப் பின்னணியிலான Political Drama. Yogi Babu-வோட நடிப்பு, MS Bhaskar-ஓட நடிப்பு, காமெடி காட்சிகள், கிராமத்து சூழல்னு படத்துல ரசிக்கிறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு.


படத்தைப் பார்த்தவங்க உங்களோட கருத்தை Comment பண்ணுங்க. அடுத்த Review-ல சந்திக்கலாம். Bye மக்களே!

Sony VIZHA வழங்கும் ‘Notebook 90s – Kadhal Flashback’ 90களின் முதல் காதல்

 Sony VIZHA வழங்கும் ‘Notebook 90s – Kadhal Flashback’ 90களின் முதல் காதல் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் புதிய தொடர்.






நவம்பர் 23-ம் தேதி மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகின்றது.


ஒருவரை வகுப்பறைக்குள் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்பது, பள்ளியில் பரிமாறிக்கொள்ளும் ஒரு பார்வை நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு புன்னகை என 90-களில் காதல் என்பது ஓர் அழகான அனுபவமாக இருந்தது,அப்போது சிறிய சந்திப்புகள்கூட மனதில் பல கனவுகளை உருவாக்கும்.


வெட்கம் கலந்த பார்வைகள், சொல்ல முடியாத உணர்வுகள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு என முதல் காதலின் ஒவ்வொரு தருணமும் தனி அழகைக் கொண்டிருந்தது.


90-களின் முதல் காதலின் இனிமையையும் அழகான நினைவுகளையும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் Sony VIZHA வழங்கும் புதிய தொடர் ‘Notebook 90s – Kadhal Flashback’, இத்தொடர் நவம்பர் 23, 2026 முதல் மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகின்றது.


1990-களின் திருச்சியைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் தொடரில்,கௌதம் (Muzzamil Elias), காயத்ரி (Yuva) ஆகியோரின் காதல் கதை சொல்லப்படுகின்றது.


பள்ளிப் பருவத்தில் நடக்கும் ஒரு விளையாட்டுத்தனமான குறும்பில் தொடங்கும் இவர்களின் நட்பு, எதிர்பாராத விதமாக முதல் காதலாக மாறுகிறது. முதல் காதல் தரும் மகிழ்ச்சி மனதில் இருப்பதைச் சொல்லத் தயங்கும் தருணம்,தங்கள் காதலும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற நம்பிக்கை.,புரிதல் இல்லாத தருணங்கள், மனதை வலிக்கும் பிரிவுகள் என இளமைப் பருவக் காதலின் பல உணர்வுகளை இந்தத் தொடர் அழகாக எடுத்துக்காட்டுகிறது.


பள்ளி வழித்தடங்களில் பல கனவுகள் மலர்ந்த காலத்தையும், ஒரு சிறிய நிகழ்வுகூட பல ஆண்டுகள் மனதில் நிற்கும் நினைவாக மாறுவதையும் இந்தத் தொடர் அழகாக நினைவுபடுத்துகிறது,மேலும் வயதான காயத்ரியாக பாவனா சிறப்புத் தோற்றத்தில் நடித்து, கடந்த காலக் காதல் நினைவுகளையும் இன்றைய வாழ்க்கையையும் இணைக்க செய்கிறார்..


இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் கூறுயது:


 “Sony VIZHA மற்றும் Sony LIV உடன் இணைந்து ‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை உருவாக்குவதன் மூலம் நம் மனதிற்கு நெருக்கமான ஒரு காலத்தை மீண்டும் நினைவுகூர விரும்பினேன். 


90-களில் நட்பு,குடும்பம் மற்றும் உறவுகளுக்கு ஒரு தனி அழகு இருந்தது.அந்தக் காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருவதுடன் அப்போது நம் வாழ்க்கையை அழகாக்கிய அழகிய தருணங்களையும் இந்தத் தொடர் நினைவுபடுத்தும் என்று நம்புகின்றேன். 


இந்தத் தொடரைப் பார்க்கும் ஒருவர் தனது பழைய நண்பரை நினைத்துப் பார்த்தாலோ தன்னுடைய பழைய நினைவுகளைப் புன்னகையுடன் நினைவுகூர்ந்தாலோ அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்றார்.


திரைப்பட இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் படைப்பாக்கத்தில் உருவாகும் இந்தத் தொடரை சதாசிவம் இயக்கியுள்ளார்.நீலன் எழுதியுள்ளார். 90-களின் வாழ்க்கை முறையையும் அந்தக் காலத்தின் எளிமையையும் மீண்டும் கொண்டு வரும் இந்தத் தொடர் பள்ளிப் பருவ நட்பு, முதல் காதல் வரை இனிமையான நினைவுகள் மற்றும் வளரும் பருவத்தின் மறக்க முடியாத உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.


‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை நவம்பர் 23, 2026 முதல் மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் கண்டுகளியுங்கள்.

Sony VIZHA வழங்கும் ‘Notebook 90s – Kadhal Flashback’ 90களின் முதல் காதல்

 Sony VIZHA வழங்கும் ‘Notebook 90s – Kadhal Flashback’ 90களின் முதல் காதல் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் புதிய தொடர்.






நவம்பர் 23-ம் தேதி மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகின்றது.


ஒருவரை வகுப்பறைக்குள் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்பது, பள்ளியில் பரிமாறிக்கொள்ளும் ஒரு பார்வை நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு புன்னகை என 90-களில் காதல் என்பது ஓர் அழகான அனுபவமாக இருந்தது,அப்போது சிறிய சந்திப்புகள்கூட மனதில் பல கனவுகளை உருவாக்கும்.


வெட்கம் கலந்த பார்வைகள், சொல்ல முடியாத உணர்வுகள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு என முதல் காதலின் ஒவ்வொரு தருணமும் தனி அழகைக் கொண்டிருந்தது.


90-களின் முதல் காதலின் இனிமையையும் அழகான நினைவுகளையும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் Sony VIZHA வழங்கும் புதிய தொடர் ‘Notebook 90s – Kadhal Flashback’, இத்தொடர் நவம்பர் 23, 2026 முதல் மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகின்றது.


1990-களின் திருச்சியைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் தொடரில்,கௌதம் (Muzzamil Elias), காயத்ரி (Yuva) ஆகியோரின் காதல் கதை சொல்லப்படுகின்றது.


பள்ளிப் பருவத்தில் நடக்கும் ஒரு விளையாட்டுத்தனமான குறும்பில் தொடங்கும் இவர்களின் நட்பு, எதிர்பாராத விதமாக முதல் காதலாக மாறுகிறது. முதல் காதல் தரும் மகிழ்ச்சி மனதில் இருப்பதைச் சொல்லத் தயங்கும் தருணம்,தங்கள் காதலும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற நம்பிக்கை.,புரிதல் இல்லாத தருணங்கள், மனதை வலிக்கும் பிரிவுகள் என இளமைப் பருவக் காதலின் பல உணர்வுகளை இந்தத் தொடர் அழகாக எடுத்துக்காட்டுகிறது.


பள்ளி வழித்தடங்களில் பல கனவுகள் மலர்ந்த காலத்தையும், ஒரு சிறிய நிகழ்வுகூட பல ஆண்டுகள் மனதில் நிற்கும் நினைவாக மாறுவதையும் இந்தத் தொடர் அழகாக நினைவுபடுத்துகிறது,மேலும் வயதான காயத்ரியாக பாவனா சிறப்புத் தோற்றத்தில் நடித்து, கடந்த காலக் காதல் நினைவுகளையும் இன்றைய வாழ்க்கையையும் இணைக்க செய்கிறார்..


இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் கூறுயது:


 “Sony VIZHA மற்றும் Sony LIV உடன் இணைந்து ‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை உருவாக்குவதன் மூலம் நம் மனதிற்கு நெருக்கமான ஒரு காலத்தை மீண்டும் நினைவுகூர விரும்பினேன். 


90-களில் நட்பு,குடும்பம் மற்றும் உறவுகளுக்கு ஒரு தனி அழகு இருந்தது.அந்தக் காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருவதுடன் அப்போது நம் வாழ்க்கையை அழகாக்கிய அழகிய தருணங்களையும் இந்தத் தொடர் நினைவுபடுத்தும் என்று நம்புகின்றேன். 


இந்தத் தொடரைப் பார்க்கும் ஒருவர் தனது பழைய நண்பரை நினைத்துப் பார்த்தாலோ தன்னுடைய பழைய நினைவுகளைப் புன்னகையுடன் நினைவுகூர்ந்தாலோ அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்றார்.


திரைப்பட இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் படைப்பாக்கத்தில் உருவாகும் இந்தத் தொடரை சதாசிவம் இயக்கியுள்ளார்.நீலன் எழுதியுள்ளார். 90-களின் வாழ்க்கை முறையையும் அந்தக் காலத்தின் எளிமையையும் மீண்டும் கொண்டு வரும் இந்தத் தொடர் பள்ளிப் பருவ நட்பு, முதல் காதல் வரை இனிமையான நினைவுகள் மற்றும் வளரும் பருவத்தின் மறக்க முடியாத உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.


‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை நவம்பர் 23, 2026 முதல் மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் கண்டுகளியுங்கள்.

Har Yug Mein Ram: JioHotstar Partners with Namit Malhotra’s Ramayana and I.I.M.U.N. to Engage Nearly 20,000 Students

 *Har Yug Mein Ram: JioHotstar Partners with Namit Malhotra’s Ramayana and I.I.M.U.N. to Engage Nearly 20,000 Students Across India on the Timeless Values of Ramayana*


Ranbir Kapoor, Nitesh Tiwari, Ravie Dubey and Namit Malhotra come together with young leaders from over 500 schools across 18 cities for a special conversation on the values of Ramayana, to stream exclusively on JioHotstar from November 1st. 


Mumbai, October 28, 2026: Bringing the timeless values of Ramayana closer to a new generation, JioHotStar, in partnership with Namit Malhotra’s Ramayana and I.I.M.U.N., has brought together nearly 20,000 students from across India for Har Yug Mein Ram: A Conversation with Young Leaders.


Featuring Ranbir Kapoor, Nitesh Tiwari, Ravie Dubey and Namit Malhotra, the initiative created a unique platform for students to engage in an open dialogue about the epic’s enduring values, its iconic characters and the relevance of their choices and relationships in today’s world.


With participation from over 500 schools across 18 cities, spanning Kashmir to Kanyakumari, the event brought together young voices from different parts of the country to explore what Ramayana means to their generation. The interaction took place at I.I.M.U.N.’s headquarters in Mumbai, where approximately 150 student leaders were present for the live session, alongside students joining virtually from classrooms across the country. The conversation has been produced as a special episode that will stream exclusively on JioHotstar, extending this dialogue to audiences across India.


Moving beyond familiar interpretations of the epic, students posed thoughtful and engaging questions about who they consider the true hero of Ramayana, what they would ask Lord Rama, which character they would choose as a friend, and whose journey among Rama, Sita and Lakshman they found most challenging. These exchanges opened up conversations around love, friendship, duty, courage, forgiveness and sacrifice, exploring how the values of Ramayana continue to find meaning in the lives of young Indians.


For Ranbir Kapoor, who portrays Lord Rama in Ramayana: Part One, the interaction offered an opportunity to hear how the next generation interprets a character deeply rooted in India’s cultural consciousness.


He said, “Rama’s story has been part of our lives for generations, and stepping into his shoes has been an incredibly humbling experience. What made this interaction special was hearing young minds engage with his story in their own way. It was a reminder of how differently each generation can connect with Rama while still finding something deeply familiar in his journey.”


Namit Malhotra, Producer of Ramayana, said, “Ramayana has given us generations of stories, values and lessons that continue to guide us even today. As we bring this epic to the big screen, it’s equally important that young people discover these values and find their own connection with them. What made this conversation special was the curiosity, honesty and perspective that these students brought to the discussion. It’s wonderful to see how a story that has been with us for thousands of years continues to resonate with a new generation.”


Director Nitesh Tiwari said, “The richness of Ramayana lies in the fact that alongside its larger-than-life moments, its characters face deeply human choices and emotions. As filmmakers, our responsibility was to preserve that emotional truth while bringing the story to the screen for a new generation. Hearing students question, challenge and interpret these characters in their own way was a wonderful reminder of why this story continues to endure.”


Ravie Dubey, who plays Lakshman, said, “Playing Lakshman gave me the opportunity to explore a relationship built on loyalty, love and an unwavering sense of duty. What I found interesting during this interaction was how young people viewed these relationships and choices from their own experiences. It made me look at Lakshman in new ways too, and that was one of the most rewarding parts of being part of this initiative.”


Har Yug Mein Ram reflects a shared endeavour by JioHotStar, the makers of Ramayana and I.I.M.U.N. to create meaningful conversations between generations around India’s cultural heritage and timeless values. By connecting the cast and creators of the film with thousands of students through both live and virtual participation, the initiative celebrates the enduring relevance of Ramayana and encourages young people to discover its teachings through their own questions and perspectives.


The special episode, produced for JioHotstar, will premiere exclusively on the platform, bringing this unique exchange to audiences across the country.

Link: https://www.instagram.com/reel/DfEUfYFsFVS/?vrfl=aG9oMzNxYTJobGlm


Ramayana: Part One, produced by Prime Focus Studios in association with DNEG and Yash’s Monster Mind Creations, is the first instalment of a two-part live-action cinematic event directed by Nitesh Tiwari and adapted by Shridhar Raghavan from Valmiki’s Ramayana. The film stars Ranbir Kapoor as Lord Rama, Sai Pallavi as Sita, Yash as Ravana, Sunny Deol as Hanuman and Ravie Dubey as Lakshman, alongside an ensemble cast.


Ramayana: Part One releases worldwide in cinemas on November 5, 2026, in Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam and English, including IMAX 3D. Following its exclusive theatrical window, the film will be available on JioHotstar through a dedicated on-demand purchase offering.

Pani Vizhum Iravu Movie Review

Pani Vizhum Iravu Tamil Movie Review

ஹாய் மக்களே! இன்னைக்கு நம்ம பார்க்கப்போற படம் பனி விழும் இரவு. Arun Karthi, Enakshi Ganguly, Karuppu Nambiar, Cheran Raj, Saravana Sakthi உள்ளிட்ட பலர் நடிச்சிருக்கிற இந்தப் படத்தை S.R. Rajesh இயக்கியிருக்கிறார். ஒரு இளம் காதல் ஜோடி, திருமணத்துக்கு முன்னாடி Pre-Wedding Photoshoot எடுக்க கொடைக்கானல் போறாங்க. அங்கே அவங்களுக்கு ஏற்படுற சில மர்மமான அனுபவங்களும், அதைத் தொடர்ந்து நடக்கிற விசாரணையும்தான் இந்தப் படத்தோட மையக்கதை.



பொதுவாகவே கொடைக்கானல் மாதிரியான மலைப்பிரதேசத்துல நடக்கிற கதைகளுக்கு ஒரு தனி அழகு இருக்கும். அதுவும் Mist, குளிர், அமைதியான இடங்கள், Guest House-னு ஒரு Mystery Thriller-க்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இந்தப் படத்தோட கதைக்களத்துல இருக்கு. ஆரம்பத்திலிருந்தே ஒரு சுவாரஸ்யமான சூழலை உருவாக்கி, அடுத்து என்ன நடக்கப்போகுதுங்கிற ஆர்வத்தை படம் ஏற்படுத்துது.


குறிப்பாக, கொடைக்கானல்ல இருக்கிற ஒரு Guest House-ஐச் சுற்றி நடக்கிற மர்மமான சம்பவங்கள்தான் கதைக்கு முக்கியமான திருப்புமுனையா அமையுது. முதல் பாதியிலேயே அந்த இடத்தோட பின்னணி, அங்கே நடக்கிற விசித்திரமான நிகழ்வுகள், அதற்குப் பின்னால இருக்கிற காரணங்கள் என ஒவ்வொண்ணா அறிமுகப்படுத்துறாங்க. இதனால் கதையோட Investigation பகுதி சுவாரஸ்யமா நகருது.


இந்தப் படத்தோட முக்கியமான பலமே இதுல வர்ற Unexpected Twists and Turns தான். ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்டோம்னு நினைக்கிற நேரத்துல, அதைவிட வித்தியாசமான ஒரு தகவலைக் கொடுத்து கதையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போறாங்க. இதனால் பார்வையாளர்களும் கதையோட சேர்ந்து அந்த மர்மத்தைத் தீர்க்க முயற்சி செய்யலாம்.


இது ஒரு Investigative Crime Thriller என்பதால், ஒவ்வொரு சம்பவத்துக்கும் பின்னால இருக்கிற காரணத்தைத் தேடுற விதம் கதைக்கு நல்ல விறுவிறுப்பைக் கொடுக்குது. முதல் பாதி கதாபாத்திரங்களையும் மர்மமான சூழலையும் அறிமுகப்படுத்தி, Investigation-க்கான அடித்தளத்தை அமைக்குது. அதுக்கப்புறம் விசாரணை தீவிரமடையும்போது, கதையில அடுத்தடுத்து கிடைக்கிற தகவல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துது.


படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் Technology-யை கதையோட இணைச்சிருக்கிற விதம். குறிப்பாக, இறுதிப் பகுதிகள்ல Technology முக்கியமான பங்கு வகிக்குது. ஒரு Crime Investigation-ல நவீன தொழில்நுட்பம் எப்படி உதவ முடியும்ங்கிற விஷயத்தை சுவாரஸ்யமா பயன்படுத்தியிருக்காங்க. கதையோட முடிவை நோக்கி நகரும்போது இந்த Technology சார்ந்த காட்சிகள் ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்குது.


இயக்குநர் S.R. Rajesh, Mystery, Suspense, Technology ஆகிய மூன்றையும் ஒரே கதைக்குள்ள இணைச்சு சொல்லியிருக்கிறார். கொடைக்கானல் பின்னணி, Guest House-ஐச் சுற்றி நடக்கிற சம்பவங்கள், விசாரணையில கிடைக்கிற புதிய தகவல்கள் என ஒவ்வொண்ணையும் கதையோட ஓட்டத்துக்கு ஏற்ற மாதிரி அமைத்திருக்கிறது படத்துக்கு பலம் சேர்க்குது.


நடிப்பைப் பொறுத்தவரைக்கும் Arun Karthi, Enakshi Ganguly, Karuppu Nambiar, Cheran Raj, Saravana Sakthi உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரி நடித்திருக்காங்க. Gajraj, Suruli, Umar, Vinod உள்ளிட்ட மற்ற நடிகர்களும் படத்துல இடம்பெற்றிருக்காங்க. கதையின் மர்மத்தையும் விசாரணையையும் முன்னெடுத்துச் செல்லும் கதாபாத்திரங்களின் பங்களிப்பு படத்துக்கு உதவியாக இருக்கு.


ஒளிப்பதிவாளர் Jayakumar Thangavel-ஓட Cinematography இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். கொடைக்கானலோட இயற்கை அழகையும், அந்த இடத்துக்கே உரிய பனிமூட்டமான சூழலையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதே நேரத்துல கதைக்குத் தேவையான Mystery மற்றும் Suspense Feel-ஐயும் Camera Work மூலமா சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்.


Production Values-ம் படத்துக்கு நல்ல தரத்தைக் கொடுக்குது. குறிப்பாக, கதைக்களத்துக்கு ஏற்ற Locations மற்றும் Visual Presentation படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குது.


மொத்தத்தில், பனி விழும் இரவு ஒரு சுவாரஸ்யமான Investigative Crime Thriller. கொடைக்கானல் பின்னணி, மர்மமான Guest House, எதிர்பாராத திருப்பங்கள், விறுவிறுப்பான Investigation மற்றும் Technology-யின் புதுமையான பயன்பாடு எனப் பல சுவாரஸ்யமான அம்சங்கள் இந்தப் படத்துல இருக்கு. Mystery மற்றும் Suspense Thriller படங்களை விரும்பிப் பார்க்கிறவங்களுக்கு இந்தப் படம் ஒரு நல்ல தேர்வா இருக்கும்.


So மக்களே, பனி விழும் இரவு படத்தைப் பார்த்துட்டு உங்களோட கருத்தை Comment-ல சொல்லுங்க. இந்த Review பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Channel-ஐ Subscribe பண்ணுங்க. அடுத்த Review-ல சந்திக்கலாம். Bye மக்களே!

Enemy of the Smuggler Movie Review

Enemy of the Smuggler Tamil Movie Review

ஹாய் மக்களே! இன்னைக்கு நம்ம பார்க்கப்போற படம் Enemy of the Smuggler. Smuggling, Customs Investigation, Corruption, Bribery-னு நம்ம அதிகம் பார்க்காத ஒரு வித்தியாசமான கதைக்களத்தை மையமா வச்சு உருவாகியிருக்கிற Crime Thriller படம் இது. இந்தப் படத்தை முன்னாள் Indian Revenue Service Officer-ஆன T. Samaya Murali இயக்கியிருக்கிறார். அவரோட Professional Experience இந்தப் படத்துக்கு எந்த அளவுக்கு உதவியிருக்கு என்பதைப் பார்க்கலாம்.



இந்தப் படத்தோட கதையில Sharan Sakthi மற்றும் Bala Saravanan ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்களா வர்றாங்க. இவங்க ரெண்டு பேரும் Shipping Industry-யோட தொடர்புடைய வேலைகள்ல இருக்காங்க. அதுல Bala-வுக்கு Customs Department-ஓட தொடர்பும் இருக்கு. இவங்களோட வாழ்க்கையில J.D. என்ற The Emperor-ன் அறிமுகம் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துது.


குடும்பத்தோட கடன் சுமை மற்றும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக Sharan Sakthi, சட்டவிரோதமான பொருட்களைக் கடத்துற செயல்கள்ல ஈடுபட ஆரம்பிக்கிறார். அவரோட நண்பரான Bala-வும் எதிர்பாராத விதமா இந்தச் சம்பவங்களுக்குள்ள சிக்கிக்கிறார். இதற்கிடையில் Customs Officials இந்த நடவடிக்கைகளை விசாரிக்க ஆரம்பிக்கும்போது, இதுக்குப் பின்னால இருக்கிற பெரிய Smuggling Network மற்றும் Corruption பற்றிய பல உண்மைகள் வெளியே வருது. இந்த விசாரணை எப்படிப் போகுது, நண்பர்களோட வாழ்க்கை என்ன ஆகுதுங்கிறதுதான் படத்தோட மீதிக்கதை.


இந்தப் படத்துல எனக்குப் பிடிச்ச முக்கியமான விஷயம் இதோட கதைக்களம். பொதுவாக Crime Thriller படங்கள்ல Murder, Gangster, Revenge மாதிரியான விஷயங்களை அதிகம் பார்க்க முடியும். ஆனால், இங்கே Customs Department, Shipping Industry, Cargo Movement, Smuggling Operations-னு கொஞ்சம் வித்தியாசமான ஒரு உலகத்தை நமக்குக் காட்டியிருக்காங்க.


குறிப்பாக, Customs Department-ல ஒரு சந்தேகத்துக்குரிய Cargo வந்தா அதை எப்படி Investigate பண்ணுவாங்க, Smuggling Network எப்படி செயல்படுது, அதுக்குப் பின்னால இருக்கிற மனிதர்களோட தொடர்புகள் என்னங்கிற விஷயங்களை சுவாரஸ்யமா சொல்லியிருக்காங்க. இயக்குநர் T. Samaya Murali முன்னாள் IRS Officer என்பதால், அவருடைய Professional Knowledge இந்தக் காட்சிகளுக்கு ஒரு நம்பகத்தன்மையைக் கொடுக்குது. வெறும் கற்பனையான சம்பவங்களா இல்லாமல், அந்தத் துறையோட செயல்பாடுகளைப் புரிஞ்சுக்கிற மாதிரியான அனுபவமும் கிடைக்குது.


அதே நேரத்துல, இது ஒரு Investigation சார்ந்த படமா மட்டும் இல்லாமல், பணத்தேவை, குடும்பச் சூழ்நிலை, நட்பு, துரோகம், தவறான முடிவுகளால் ஏற்படுற விளைவுகள் எனப் பல விஷயங்களையும் பேசுது. குறிப்பாக, ஒரு சாதாரண மனிதன் தன்னோட சூழ்நிலைகளால் எப்படி ஆபத்தான பாதைக்குள் போகிறான் என்பதைக் கதையோட முக்கியமான அம்சமா வச்சிருக்காங்க.


நடிப்பைப் பொறுத்தவரைக்கும் Sharan Sakthi தன்னோட கதாபாத்திரத்துக்கு நல்ல நியாயம் செய்திருக்கிறார். குடும்பச் சூழ்நிலையால் தவறான முடிவுகளை எடுக்கிற ஒரு மனிதனோட மனநிலையை அவருடைய நடிப்பில் பார்க்க முடிகிறது. Bala Saravanan வழக்கமா நம்ம பார்க்கிற Comedy Image-ஐத் தாண்டி, இந்தப் படத்துல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு படத்துக்கு இன்னொரு பலம்.


Veteran Actors-ஆன Lal, Chakravarthy, Radhika Sarathkumar ஆகியோர் தங்களுடைய அனுபவமான நடிப்பால் படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்காங்க. Harimukhi-யும் தன்னுடைய Expressions மற்றும் நடிப்பின் மூலம் கவனிக்க வைக்கிறார். JD Chakkaravarthy-யின் The Emperor கதாபாத்திரமும் படத்தோட Crime World-க்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுக்குது.


Music மற்றும் Background Score-ஐப் பொறுத்தவரைக்கும் Sam Daniel-ன் இசை, படத்தோட Investigation மற்றும் Suspense காட்சிகளுக்கு நல்ல Support-ஆ இருக்கு. குறிப்பாக, விசாரணை தீவிரமடையும்போது Background Score அந்தச் சூழலுக்கு ஏற்ற பதற்றத்தை உருவாக்குது. Cinematography-யும் கதையோட Realistic Tone-க்கு ஏற்ற மாதிரி அமைந்திருக்கிறது.


மொத்தத்தில், Enemy of the Smuggler ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட Crime Thriller. Smuggling, Customs Investigation, Corruption, நட்பு மற்றும் துரோகம் எனப் பல அம்சங்களை ஒரே கதைக்குள்ள கொண்டு வந்திருக்காங்க. அதிலும் இயக்குநருடைய துறைசார்ந்த அனுபவம் இந்தப் படத்துக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுக்குது.


வழக்கமான Crime Thriller படங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு, Customs Department மற்றும் Smuggling உலகத்தைப் பற்றித் தெரிஞ்சுக்க விரும்புறவங்களுக்கும், Investigation சார்ந்த கதைகளை ரசிக்கிறவங்களுக்கும் இந்தப் படம் ஒரு நல்ல தேர்வா இருக்கும்.


So மக்களே, இதுதான் Enemy of the Smuggler படத்தோட Review. இந்தப் படத்தைப் பார்த்தவங்க உங்களோட கருத்தை Comment-ல சொல்லுங்க. Review பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Channel-ஐ Subscribe பண்ணுங்க. அடுத்த Review-ல சந்திக்கலாம். Bye மக்களே!

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

 *நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!*



நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடலை லாஸ் ஏஞ்சல்ஸில் பார்த்ததன் மூலம், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஏழு வயதாகும் ஐரா மற்றும் இன்று (அக்டோபர் 30) தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடும் யதர்வ் ஆகியோருக்கு ‘ராமாயணா’ திரைப்படம் மறக்க முடியாத ஸ்பெஷல் நினைவாக எப்போதும் இருக்கும். 


இப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. அத்தோடு, ராவணன் கதாபாத்திரத்திலும் யஷ் நடித்துள்ளார். நடிகர் யஷ்ஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லான இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை அவரது குழந்தைகள் பார்த்திருப்பதும் நெகிழ்வான தருணமாக அமைந்துள்ளது. 


இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் ஐரா மற்றும் யதர்வ் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் காரணம்தான்.  ஐரா என்ற பெயர், மகாலட்சுமியின் மற்றொரு பெயரான ஐராவதியிலிருந்தும், யதர்வ் என்ற பெயருக்கு ‘முழுமையானவன்’ என்றும் பொருள். மேலும், யஷ், ராதிகா மற்றும் ஐரா ஆகிய மூவரின் பெயர்களை இணைத்தே யதர்வ் என்ற பெயரைத் தேர்வு செய்ததாகவும் யஷ் மற்றும் ராதிகா தெரிவித்துள்ளனர்.


இப்போது ‘ராமாயணா’ திரைப்படம் அவர்களின் நினைவுகளில் தனியிடம் பிடித்திருப்பதன் மூலம், இந்த இதிகாசத்திற்கும் யஷ் குடும்பத்திற்கும் இடையே அழகான தொடர்பு உருவாகியுள்ளது. 


இன்னும் ஐந்து நாட்களில் அதாவது, நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது ‘ராமாயணா’ திரைப்படம் வெளியாகிறது. இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!

Rocking star Yash’s Children Ayra and Yatharv Have Their First Movie Experience with Ramayana

 *Rocking star Yash’s Children Ayra and Yatharv Have Their First Movie Experience with Ramayana.*



For Rocking Star Yash’s children, Ayra and Yatharv, Namit Malhotra’s Ramayana will always hold a special place, with the epic marking their first movie experience at the LA premiere. 


There is something rather special about the fact that the first film experience for Yash and Radhika Pandit’s children comes with a story as timeless as the Ramayana. We have learnt that seven-year-old Ayra and Yatharv, who turns seven today, October 30, had their first movie experience with Namit Malhotra’s Ramayana at an early premiere of the film.


While details of how the children experienced the film remain private, the connection makes for a heartwarming story. For Yash, who steps into the role of Ravana in the ambitious cinematic adaptation, the project is an important milestone in his career. For his children, it will always be associated with their first experience of watching a film. The film is co-produced by Rocking star Yash and he also plays Ravana in the movie.  


Adding another beautiful layer to the story are the meanings behind their names. Yash and Radhika have previously spoken about the thought that went into naming their children. Ayra’s name draws inspiration from Airavathi, another name for Goddess Lakshmi, while Yatharv means ‘complete’. The couple also revealed that his name brings together elements of their names, including those of Yash, Radhika and Ayra. 


And now, with Ramayana becoming their first movie experience, there is a lovely connection between the family and an epic that has been passed down through generations. As Namit Malhotra brings this timeless story to the big screen, the film is set to become a memorable part of the family’s story, too. For Yash, who is bringing the larger than life character  Ravana to life in Ramayana, this moment must carry an emotion beyond words. Envision children experiencing cinema for the first time through a story that has shaped India’s identity, values, and imagination for generations. And, a story that brings together a father’s cinematic journey and his children’s first steps into the magical world of storytelling.


The film is produced by Namit Malhotra's Prime focus and co-produced by Yash's Monster mind creations. Releasing in just five days on 5th November. Book your tickets now!

Rockstar DSP records with 100 folk rythm players from all over India for Yellamma Title song*

 *Rockstar DSP records with 100 folk rythm players from all over India for Yellamma Title song*





Ever since its announcement and first look, the film has sparked huge excitement. Now, Rockstar Devi Sri Prasad is bringing the raw power of folk music alive, recording the YELLAMMA song with 100 traditional folk rhythm players representing diverse cultures from across India!


With Rockstar DSP making his acting debut and Balagam fame Venu Yeldandi at the helm, this ambitious project, presented by Dil Raju and produced by Shirish, is raising expectations sky-high!


100 Folk Rhythm Players. One Powerful Musical Explosion!


The YELLAMMA song is gearing up to strike a massive chord. Get ready to witness this musical storm… SONG OUT SOON!


YELLAMMA GRAND WORLDWIDE RELEASE ON MARCH 5, 2027, IN TELUGU, TAMIL, HINDI, MALAYALAM & KANNADA!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!*

 *இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!*





*இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்த ராக்ஸ்டார் டிஎஸ்பி!*


‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இயக்கத்தில், தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இந்நிலையில், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.


தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ‘எல்லம்மா’ திரைப்படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!*

 *ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!*



*ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'தங்கப்புள்ள' பாடல்*


*மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அன்பையும் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் பாடல்!*


நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை  மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது. மகனுடன் நேரடியாகத் தனது அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு தந்தையின் ஏக்கத்தையும், மகனின் மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசத்தையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.


மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள், முருகவேலின் குரல் ஆகிய அனைத்தும் இணைந்து பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. தந்தையின் மனதில் புதைந்திருக்கும் அன்பையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் காட்சிகளுடன் இணைத்து வெளிப்படுத்தும் இப்பாடல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.


மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.


‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.


இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடலும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.


https://www.youtube.com/watch?v=Tj8j_2jh-5M

தேவர் ஜெயந்தி கொண்டாடும் நிகழ்வு இல்லை, அவரை நினைத்து கும்பிடும்

*தேவர் ஜெயந்தி கொண்டாடும் நிகழ்வு இல்லை, அவரை நினைத்து கும்பிடும் நிகழ்வு, அவர் சொன்ன கருத்துக்களை பின்பற்ற தான் இது போன்ற குருபூஜை, ஜெயந்தி விழா நடக்கிறது., ரோட்டில் போகும் போதும், காரில் போகும் போதும் பாதுகாப்பா போங்க - இளைஞர்களுக்கு நடிகர் சௌந்தரராஜா அறிவுரை*


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு நடிகரும், தவெக மாநில செய்தி தொடர்பாளருமான சௌந்தரராஜா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,


தொடர்ந்து பேசிய நடிகர் சௌந்தரராஜா.,


சாதி பார்ப்பவன் சண்டாளன் என்று சொன்னவர், எல்லா மக்களும் இன்புற்று, சமமாக இருக்க வேண்டும், எல்லா மக்களையும் மதிக்க வேண்டும் என சொன்னவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.,


அப்பேர்பட்ட தேசிய தலைவரை நாம் அவர்கள் கூறிய கருத்துக்களை இளம் தலைமுறையினர் பின்பற்றி வர வேண்டும், 


நீங்கெல்லாம் சின்ன பசங்க தேவர் ஐயா சொன்ன கருத்துகளை பின்பற்றுங்க follow பன்னுங்க, ரோட்டில் போகும் போதும், காரில் போகும் போதும் பாதுகாப்பா போங்க, இது கொண்டாடும் நிகழ்வு இல்லை, அவரை நினைத்து கும்பிடும் நிகழ்வு, அவர் சொன்ன கருத்துக்களை பின்பற்ற தான் இது போன்ற குருபூஜை நடக்கிறது.,


என் அண்ணன் தம்பி, மாமன் மைத்துனர்கள், அக்கா தங்கச்சி எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள், அவரது வரலாறை மதித்து எல்லா மக்களையும் சமமாக நடத்த வேண்டும், மனிதநேயத்தை போற்ற வேண்டும்.,


இந்த உசிலம்பட்டிக்கு தேவையான தேவைகளை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-யும், உசிலம்பட்டி மண்ணின் மைந்தர் அமைச்சர் நிர்மல்குமார் அவர்களும் முதல்வரின் கவணத்திற்கு கொண்டு போய் கொண்டே தான் இருக்கிறார்கள், கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்வார்கள்.,


கை என்றால் கொடு என்று அர்த்தம், நமக்கு மேல் யாராவது சாதித்து சென்றால் மனதார கை தட்டி பாராட்டுங்கள், நமக்கு அருகில் யாராவது கஷ்டப்பட்டால் கை கொடுத்து தூக்கி விடுங்கள் என பேசினார்.,


பேச்சு : சௌந்தரராஜா ( நடிகர் )

Friday, 30 October 2026

ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு

 *ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு* 



*ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் - விஷால் வெங்கட்  இயக்கத்தில்* 


நாசர்- ரெஜினா கஸாண்ட்ரா- ரமேஷ் திலக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு. 


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும்..... தொடர்ந்து வெற்றி படங்களை தமிழிலும் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.‌


'சில நேரங்களில் சில மனிதர்கள்' 'பாம்- Bomb' படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நாசர்- ரெஜினா கசாண்ட்ரா - ரமேஷ் திலக்- ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு *ஹெஷாம் அப்துல் வஹாப்* இசையமைக்கிறார். கலை இயக்கத்தை கே. மனோஜ் குமார் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்கிறார்.

 

ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ்-  நவீன் யெர்னேனி & ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழு பிரத்யேக காணொளியாக வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌


லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் 'குட் பேட் அக்லி', 'டியூட்', 'மொத ராத்திரி' ஆகிய வெற்றி பெற்ற படங்களை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் புதிய கூட்டணி - இயக்குநர் விஷால் வெங்கட் - நாசர் -  ரெஜினா கசாண்ட்ரா- ரமேஷ் திலக் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால்..... இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் அதிகரித்திருக்கிறது. மேலும் படத்தின் டைட்டில் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Premgi Amaren plays lead role in a new film produced by Lavanya Abirami and directed by C. Ganesh Kumar*

 Premgi Amaren plays lead role in a new film  produced by Lavanya Abirami and directed by C. Ganesh Kumar*







*Bose Venkat, Sastik and Nayana Sai play key characters in this gripping crime thriller*


C. Ganesh Kumar, who has worked as editor on several films, including 'Vallamai' and 'Nari Vettai', is all set to make his directorial debut with a film produced by Lavanya Abirami under the banner of Abirami Productions.


Headlined by Premgi Amaren, the yet-to-be-titled film is an intriguing crime thriller that revolves around the mysterious murder of a young woman. With a series of twists and turns, the film promises to unravel the mystery of who committed the crime and the motive behind it. In addition to playing the lead role, Premgi Amaren is also composing the music for the film.


Bose Venkat, Sastik and Nayana Sai play pivotal roles in the film. The project has been progressing at a brisk pace and has now entered the final phase of shooting. The team plans to wrap up all the remaining work at the same pace and bring the film to audiences soon.


Speaking about the movie, director C. Ganesh Kumar said, “The film is being crafted in a way that will keep audiences on the edge of their seats from beginning to end. Premgi Amaren will be seen in a role he has never portrayed before. Working with experienced actors like Bose Venkat has been a wonderful experience.”


The film’s cinematography is handled by Sirpi Kumar, while director C. Ganesh Kumar is also taking charge of the editing. Stunts: S.R. Hari Murugan. With shooting nearing completion, post-production work is set to begin soon. The makers are planning to announce further details about the film in due course.


***

லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்

லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்*







*போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகிறது*


'வல்லமை', 'நரி வேட்டை' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய சி. கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ் பேனரில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகிறார். 


இளம்பெண் ஒருவரை யார் கொலை செய்தார்கள், எதற்கு செய்தார்கள் என்பதை மர்ம முடிச்சுகளோடு பார்வையாளர்களுக்கு சொல்லும் இந்த கிரைம் திரில்லர் கதையில் பிரேம்ஜி அமரன் முதன்மை வேடத்தில் நடிப்பதோடு இசையும் அமைக்கிறார்.


போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் வேகமாக வளர்ந்து தற்போது படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் உள்ளது. அனைத்து பணிகளையும் இதே வேகத்தில் முடித்து படத்தை விரைவில் வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை குறித்து பேசிய இயக்குநர் சி. கணேஷ் குமார், "தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத வேடத்தில் பிரேம்ஜி அமரன் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு பணிபுரிவது சிறந்த அனுபவமாக உள்ளது," என்றார்.


இந்த திரைப்படத்திற்கு சிற்பி குமார் ஒளிப்பதிவு செய்ய இயக்குனர் சி. கணேஷ் குமாரே படத்தொகுப்பையும் கையாளுகிறார். சண்டைப் பயிற்சி: எஸ். ஆர். ஹரி முருகன். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. 

Cycle Gap’ Is a Beautiful Blend of Nostalgia and Contemporary Romance” – Actress Sherry Agarwal

 *“‘Cycle Gap’ Is a Beautiful Blend of Nostalgia and Contemporary Romance” – Actress Sherry Agarwal*





_*Making her Tamil debut with Tubelight Productions’ musical romance, Sherry Agarwal reflects on her experience working with Nawaz, director M. R. Bharathi and the film’s team.*_


Actress Sherry Agarwal is steadily expanding her presence across the Indian entertainment industry, with projects spanning Telugu, Punjabi, Hindi and Kannada cinema, and now Tamil. Her Tamil debut, Cycle Gap, is an emotional musical romance that seeks to bridge the innocence and nostalgia of 1990s love with the emotions and sensibilities of today’s generation. Blending music, romance and relatable human emotions, the film aims to bring two generations of romantic sensibilities together in a story that evokes the past while speaking to contemporary audiences. Produced by Tubelight Productions and directed by M. R. Bharathi, the film features Sherry alongside producer and lead actor Nawaz.


Sharing her experience on working in ‘Cycle Gap’, Sherry says, “As an actress, I can honestly say that my experience working on Cycle Gap was amazing and memorable. The entire team was extremely supportive, and that positive environment made the shoot a very enjoyable learning experience for me. I am thankful to everyone who contributed their time, effort and talent to this film. I would genuinely love to work with this wonderful team again in the future. I wish Tubelight Productions, Producer and Hero Nawaz, Director M. R. Bharathi Sir, DOP Solomon Sir, Hemanth Selvaraj Sir, Executive Producer Suja Suriya Nila, and the entire team of Cycle Gap the very best. I hope the audience receives the film with the same love and enthusiasm with which all of us have worked on it.” 


Beyond Cycle Gap, Sherry’s screen credits include the Telugu films April 28th Em Jarigindi?, Ram Asur and I Hate You. She is also associated with the upcoming Telugu project Enthavaarugaani, whose teaser has been released, and the Kannada film Akarshita. Her listed projects further include the Hindi titles Kaushiki and IPS Dubey, along with the Telugu project Benaami. Her work extends beyond feature films to the Punjabi web series RANGE, which was released on Chaupal and is also available on YouTube, as well as music videos in Punjabi and Hindi for labels and productions including T-Series, Zee Music and Red Ribbon Musik.


For Sherry Agarwal, Cycle Gap marks an important milestone in her journey as an actress, bringing her to Tamil cinema with a story that celebrates the timeless emotions of love through a nostalgic yet contemporary lens. With its blend of music, romance and the innocence associated with 1990s love, the film seeks to strike an emotional chord with audiences across generations. Grateful for the opportunity to be part of the project, Sherry hopes the film will find a warm response from audiences and that her Tamil debut will mark the beginning of a meaningful journey in the industry.

எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்

 *“எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!*





தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் உணர்வுப்பூர்வமான மியூசிக்கல் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சைக்கிள் கேப்’. 


இசை, காதல் மற்றும் அனைவருக்கும் நெருக்கமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இரண்டு தலைமுறைகளின் காதல் உணர்வுகளையும் ஒரே கதையில் இணைக்க முயல்கிறது. கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டெடுக்கும் அதேவேளையில், இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார்.

 

'சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஷெர்ரி அகர்வால் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு நடிகையாக, ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் பாசிட்டிவாக இருந்ததுடன் படக்குழுவினர் அனைவரும் இனிமையாக பழகினர். பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் மாற்றியது. இவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். 


ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி சார், ஒளிப்பதிவாளர் சாலமன் சார், ஹேமந்த் செல்வராஜ் சார், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா மற்றும் ‘சைக்கிள் கேப்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார். 


தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ ஆகிய திரைப்படங்களிலும் ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். டீசர் வெளியாகியுள்ள ‘எந்தவாருகானி’ என்ற வரவிருக்கும் தெலுங்குப் படத்திலும், ‘ஆகர்ஷிதா’ என்ற கன்னடப் படத்திலும், ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ ஆகிய இந்திப் படங்களிலும், ‘பெனாமி’ என்ற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.


திரைப்படங்கள் மட்டுமல்லாது, சௌபால் தளத்தில் வெளியிடப்பட்டு யூடியூப்பிலும் காணக்கிடைக்கும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர, டி-சீரிஸ், ஜீ மியூசிக் மற்றும் ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளில் உருவான பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் அவர் நடித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் தான் அறிமுகமாகும் ‘சைக்கிள் கேப்’ தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்கிறார் ஷெர்ரி அகர்வால். இசை, காதல் மற்றும் 1990களின் காதலில் நிறைந்திருந்த அப்பாவித்தனம் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், பல தலைமுறை ரசிகர்களின் மனங்களிலும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்

 *‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்!*





















‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் ‘அரிகொம்பன்’ திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டார்.


காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் எடுத்துரைக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.


காட்டுக்குள் இரண்டு கிராமங்களைப் பிரம்மாண்டமாகச் செட் அமைத்து, அந்தக் கிராம மக்களின் வாழ்வியலையும் காட்டு யானையையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இதன் இயக்குநரும் கதாநாயகனுமான மிதுன் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது…