Wednesday, 9 July 2025

யாதும் அறியான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன்

 'யாதும் அறியான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன் !




மிரட்டலாகவும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருக்கிறது - சிவகார்த்திகேயன் பாராட்டால் 'யாதும் அறியான்' படக்குழு உற்சாகம்

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்.கோபி இயக்கும் படம் ‘யாதும் அறியான்’. அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக பிரானா நடித்திருக்கிறார்.  இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


ஒரு காட்டு பங்களாவில் நன்பர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சைக்கோ திரில்லர் ஜானரில் சொல்வதோடு, சைக்கோ திரில்லர் பாணியில் இதுவரை யாரும் கையாளத ஒரு புதிய யுக்தியை இயக்குநர் எம்.கோபி கையாண்டுள்ளார். 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


இதற்கிடையே, யாதும் அறியான் படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வைரலாகி வருவதால் மகிழ்ச்சியடைந்திருக்கும் படக்குழுவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயனின் பாராட்டு அமைந்திருக்கிறது.


நடிப்பு, தயாரிப்பு என்று பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், புதியவர்களின் புதுமையான முயற்சியை அறிந்து, இன்று வெளியான யாதும் அறியான் திரைப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு, படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக, டிரைலர் மிரட்டலாக இருப்பதோடு படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும்படி இருக்கிறது, 

என்று தெரிவித்துள்ளார்.


சிவகார்த்திகேயன் படத்தின் டிரைலரை பாராட்டியதோடு, படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதால் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளனர.


இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் எம்.கோபி, இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், ‘எம்.ஐ3 முருகேசன்’ என்ற யூடியுப் இணையத் தொடரையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘தி பிளைண்ட் டைரக்டர்’ (THE BLIND DIRECTOR) சிறந்த குறும்படத்திற்கான தேசிய அளவிலான விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் புதுமுகம் என்றாலும், இந்த படத்திற்காக சுமார் ஒரு மாதம் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் வெவ்வேறு உணர்வுகளை மட்டும் இன்றி, நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதால், கடுமையான முன் பயிற்சிக்குப் பிறகே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். 


அதன்படி, ஒரு அறையில் வெவ்வேறு எக்ஸ்பிரஷன்கள் மற்றும் உடல்மொழியை வெளிப்படுத்தி நடிக்க கூடிய காட்சியில் தினேஷின் நடிப்பு நிச்சயம் பராட்டு பெறும், என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


படம் முழுவதும் ஐந்து கதபாத்திரங்கள் மட்டுமே இடம் பெற்றாலும், அவர்களை கொண்டு திரைக்கதை மற்றும் காட்சிகளை திரில்லிங்காக மட்டும் இன்றி, சைக்கோ திரில்லர் பாணியில் இதுவரை பார்த்திராத ஒரு பாணியை கையாண்டிருக்கும் இயக்குநர் எம்.கோபி, நிச்சயம் இந்த படம் சைக்கோ திரில்லர் ஜானர் படத்தை விரும்புகிறவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும், என்று தெரிவித்துள்ளார்.


தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு : எல்.டி

இசை : தர்ம பிரகாஷ்

கலை : நெல்லை லெனின்

பாடல்கள் : எஸ்.கே.சித்திக்

பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ்சுகு

No comments:

Post a Comment