Friday, 18 July 2025

Gevi Movie Review

 Gevi Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kevi ன்ற படத்தோட review அ பாக்க போறோம். இந்த படத்தை tamil dhyalan தான் direct பண்ணிருக்காரு. sheela rajkumar , jacquline lydia , aadhavan , charles vinoth , jeeva subramanian , gayathri னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.

Gevi Movie Video Review

https://youtu.be/f9v1VSQDf2c?si=ZB5xTIwMXGW4SG6u

 இந்த படம் 18 th july அன்னிக்கு release ஆக போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். கொடைக்கானல் ல தான் இந்த படத்தோட கதை நடக்குது. அங்க தான் kevi ன்ற ஒரு மலை இருக்கு. 


இது ஒரு மேற்கு தொடர்ச்சி மலை. இந்த எடத்துல மலைவாசி மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க. இந்த மக்கள் அரசாங்கத்துக்கு கிட்ட கேட்குறது ஒரே ஒரு விஷயம் தான் அது என்னனா road போட்டு கொடுக்குறது. இந்த இடத்துக்கு ஒரு mla வோட்டு கேட்டு வராரு. இவருகிட்ட இதை பத்தி சொல்லும்போது இந்த mla கண்டுக்க மாட்டேங்கிறாரு. அது மட்டுமில்லாம அந்த எடத்துல நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர்கிட்ட உயிர் இழந்துருப்பாங்க. இதை பத்தியும் அந்த mla பெருசா எடுத்துக்க மாட்டாரு. இதுக்கு எதுக்குமே ஒழுங்கா பதில் சொல்லாத னால மக்களுக்கும் mla க்கும் நடுவுல சண்டை வருது. இந்த சண்டை தீவிரமா போறதுனால police மக்களை தாக்குறாங்க. அப்போ தான் மக்கள் கூட்டத்துல  aadhavan  ன்ற ஒருத்தர் செருப்பு அ தூக்கி mla மேல வீசிடுறாரு. இதுனால கோவப்பட்ட்ட mla adhavan யும் அவரோட குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் னு  சொல்லிட்டு போய்டுறாரு. இவரோட wife sheela pregnant அ இருப்பாங்க . இவங்கள checkup க்கு கூட்டிட்டு போயிடு adhavan வீட்ல விட்டுட்டு போயிருப்பாரு. இவங்களுக்கு 9 மாசம் அதோட அடுத்த நாள் function வைக்கறதுக்கு எல்லாம் ready பண்ணிட்டு இருப்பாங்க. அப்போ aadhavan town க்கு போயிடு வீட்டுக்கு வர வழில mla ஓட ஆட்கள் இவரை round கட்டி தாக்க ஆரம்பிக்குறாங்க. இதுக்கு நடுவுல sheela க்கு pain வரது. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ரொம்ப எமோஷனல் அ அதே சமயம் நியாயத்துக்கு க்காக போராடுற ரெண்டு பேரோட கதையை தான் இந்த படத்துல சொல்லறாங்க. படத்தோட screenplay super அ இருந்தது. aadhavan ஓட மலையன் character யும் sheela ஓட mandharai character யும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓட குரல் னு சொல்லலாம். அந்தளவுக்கு ஒரு தாக்கம் ஏற்படுத்த கூடியதா இருக்கு. ஊழல் ஒரு பக்கம் அரசாங்கத்தோட அலட்சியம் இன்னொரு பக்கம் னு ஒரு realistic touch ஓட படத்தை எடுத்துருக்காங்க. இந்த படத்தோட visual எல்லாமே ரொம்ப colourful ஆவும் bright ஆவும் இருந்தது. படத்துல நடிச்சிருக்க எல்லா actors யுமே அவங்களோட best அ குடுத்து நடிச்சிருக்காங்க. 


மொத்தத்துல தப்புக்கும் அநீதி க்கும் எதிரா ஒலிக்கற குரல் தான் இந்த kevi. ஒரு நல்ல thought provoking படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட  சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment