Jenma Natchathiram Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஜென்மநட்சத்திரம் ன்ற படத்தோட review அ பாக்க போறோம். இந்த படத்தை manivarman தான் direct பண்ணிருக்காரு. Thaman akash , kaalivenkat , sandhana bharathi, muniskanth, malvi malhotra னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் 18 th july அன்னிக்கு release ஆக போது. ஏற்கனவே இவரோட படமான ஒரு நொடி மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். thaman aakash க்கு director ஆகணும் ன்ற ஆசை இருக்கு. ஒரு chance க்காக தன்னோட கதையை நெறய பேர்கிட்ட சொல்லுறாரு. இவருக்கு கல்யாணம் ஆகி wife யும் இருப்பாங்க. இவங்க தான் malvi malhotra . இவங்க pregnanant அ இருப்பாங்க. இவங்க friends ஓட ஒரு flat தான் தங்கி இருப்பாங்க. இந்த மாதிரி normal அ போயிடு இருக்கற இவங்க life ல தான் ஒரு அமோனிஷ்யமான விஷயம் நடக்குது. அப்படியே இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா kaalivenkat இருக்காரு. இவரு ஒரு நேர்மையான அரசியல்வாதி.
தன்னோட பொண்ணுக்கு நடக்க போற heart surgery க்காக election fund அ வர 57 கோடியும் திருடி, சென்னை க்கு வெளில இருக்கற ஒரு ஒதுக்கப்பட்ட building ல யாருக்கும் தெரியாம மறச்சு வைக்குறாரு. சம்பந்தமே இல்லாத இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் எப்படி connect ஆகுது, இதுல இருந்து எப்படி supernatural horror அ மாறுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
https://youtu.be/7P1K4xhd4_o?si=5MBLw63SGrK6hBWt
1980 ல வெளி வந்த jenma natchiram படம் செம hit ஆச்சு. அதே படத்தோட title அ இந்த படத்துக்கும் வச்சதுனால மக்கள் கிட்ட இருந்து எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது. பழைய படத்துல இருக்கற சில விஷயங்களை இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இந்த படத்துல எடுத்துருக்காரு. பயமுறுத்துற மாதிரி நெறய scenes அ இந்த படத்துல வச்சிருக்காங்க. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரு பயத்தோடே வச்சிருக்காங்க னு தான் சொல்லணும். இப்போ இந்த படத்தோட cast ஓட performance னு பக்கம் போது, thaman akash ஓட performance super அ இருந்தது. sincere அ அதே சமயம் emotional scenes ல எதார்த்தமாவும் நடிச்சிருந்தாரு. malvi malhotra ஓட நடிப்பு ரொம்ப genuine அ emotional ஆவும் நடிச்சிருந்தாங்க. kaali venkat ஓட நடிப்பு எப்பவும் போல natural அ இருந்தது. இருந்தாலும் இவரோட character அ இன்னும் deep அ காமிச்சிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும்.
இந்த படத்தோட technical aspects அ பாக்கும் போது, cinematography அ பத்தி சொல்லியே ஆகணும். இது தான் படத்தோட பக்க பலம் னே சொல்லலாம். ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரு tense ஆனா atmosphere அ கொண்டு வந்திருக்காங்க. அப்புறம் editing, தேவையில்லாத scenes , subplots னு எதுமே கிடையாது. audience ஓட கவனம் சிதறாத மாதிரி கதையை அவ்ளோ tight அ crisp அ edit பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். ஒரு நல்ல cinematic experience அ குடுக்கற படம் தான் இந்த jenma natchiram . இதை must watch movie னு தான் சொல்லுவேன். கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment