Thursday, 3 July 2025

Phoenix Veezhan Movie Review

 Phoenix Veezhan Movie Review: https://www.youtube.com/watch?v=7ckkJip9Un8


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pheonix  படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இது ஒரு sports  action drama . இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது anl arasu . vijay sethupathi ஓட மகனான surya vijay சேதுபதி தான் இந்த படத்துல lead role ல நடிச்சிருக்காரு. இவரோட சேந்து Varalaxmi Sarathkumar , Devadarshini , J. Vignesh , Abi Nakshatra, Varsha , Sampath Raj, Muthukumar, Dileepan, Ajay Ghosh, Harish Uthaman, Munnar Ramesh, Naveen, Rishi, Nandha Saravanan, Aadukalam Murugadoss, , Sreejith Ravi, Aadukalam Naren னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. 

Phoenix Movie Video Review: 

இந்த படம் நாளைக்கு release  ஆக போது. anal arasu ஒரு stunt chereographer . இவரு fight master அ tamil , telugu, malayalam , hindi னு பல படங்கள் ல work பண்ணிருக்காரு. இப்போ இவரு ஒரு director அ இந்த படத்துல அறிமுகம் ஆகுறாரு. அது மட்டுமில்ல surya ஒரு actor அ நடிக்கிற முதல் படமும் இது தான். இந்த படம் நாளைக்கு release  ஆக போது.


சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். இந்த படத்தோட கதை north  சென்னை ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. படத்தோட starting  லேயே MLA  வா இருக்கற sampath  raj  அ கொடூரமான முறைல கொன்னுடுறாங்க. இந்த கொலைக்கு காரணம் surya  vijaysethupathi தான் னு இவரை arrest  பண்ணி juvenile home ல அடைச்சு வைக்கிறாங்க. surya அங்க போன ஒடனே நெறய கஷ்டங்களை சந்திக்குறாரு அது மட்டும் கிடையாது mla ஓட ஆட்களும் surya வை பழி வாங்குறதுக்காக காத்துகிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் தன்னை கொல்லவந்தவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறது இன்னொரு பக்கம் trauma ல இருந்து வெளில வருதுன்னு  ரொம்பவே கஷ்டப்படுறாரு surya. surya எதுக்காக இந்த mla வை கொல்லனும்? இதுக்கான காரணம் என்ன? இவரை சுத்தி நடக்கற பிரச்சனை ல இருந்து surya தப்பிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


surya வா நடிச்சிருக்க surya vijaysethupathi ஒரு raw ஆனா performance அ வெளி படுத்தி இருக்காரு. இவரோட screen presence , body language, dialogue delivery னு எல்லாமே  அட்டகாசமா  இருந்தது. varalakshmi  sarathkumar ஒரு வில்லத்தனமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க. மத்த supporting  actors  ஆனா abhinaya , devadharshini , vignesh எல்லாரோட நடிப்பும் நல்ல இருந்தது. அதுமட்டுமில்லாம ஒரு emotional  ஆனா impact அ இவங்க படத்துக்கு குடுத்திருக்காங்க னே சொல்லலாம். 


anal arasu ஒரு stunt chereographer ண்றதுனால action scenes எல்லாம் அவ்ளோ interesting அ இருக்கிற மாதிரி படத்துல வச்சிருக்காரு. படத்தோட first  half ஏ energetic அ போகுது னு சொல்லலாம். அப்புறம் அப்படியே second half ல வர flashback அப்புறம் நடக்கற action sequences னு எல்லாமே super அ இருந்தது. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ gripping அ கதையை கொண்டு போயிருக்காங்க. என்ன தான் இந்த revenge எடுக்கற theme பழைய கதையை இருந்தாலும் அதா கொண்டு வந்த விதம் ரொம்ப different ஆவும் engaging ஆவும் இருந்தது னு தான் சொல்லணும். படத்தோட technical aspect னு பாக்கும் போது எல்லாமே இந்த படத்துக்கு plus அ தான் அமைச்சிருக்குனு சொல்லணும். editing work ரொம்ப sharp அ clear அ குடுத்திருக்காங்க, தேவையில்லாத scenes னு நம்ம எதுவுமே சொல்ல முடியாது ரொம்ப fast அ கொண்டு போயிருக்காங்க. அப்புறம் cinematography யும் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்குனு சொல்லலாம். அப்புறம் இந்த படத்துல வர bgm  அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. முக்கியமா action sequences க்கு வர bgm எல்லாமே அட்டகாசமா இருந்தது னு தான் சொல்லணும். 


எப்படி pheonix பறவை எதனை தடவை அழிஞ்சு போனாலும் திரும்பவும் உயிரோட வருதோ அதே மாதிரி தான் இந்த படத்துல நடிச்சிருக்க surya எவ்ளோ கஷ்டங்கள் வந்தாலும் ஒரு pheonix பறவையை போல எதிர்த்து நிக்குறாரு.  மொத்தத்துல ஒரு emotional ஆனா, revenge drama தான் இந்த pheonix திரைப்படம். கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and  friends  ஓட சேந்து theatre  ல போய் பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment