Wednesday, 5 November 2025

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம்

 *கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது!*



கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள தோட்டம் - தி டிமேன் ரிவீல்ட் படத்தின் டைட்டில் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மலையாள திரைப்படமான தோட்டம் படத்தின் தலைப்பு இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் விறுவிறுப்பான அறிவிப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ரிஷி சிவகுமார் எழுதி இயக்கும் தோட்டம் திரைப்படம், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆக்சன் நடிகர் ஆண்டனி வர்கீஸ் (Pepe) ஆகியோரின் முதல் பிரம்மாண்டமான ஆன்-ஸ்கிரீன் கூட்டணியை உருவாக்குகிறது. அதிரடி, ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த திரைப்படம், கீர்த்தி சுரேஷை இதுவரை கண்டிராத அவதாரத்தில் காட்டுகிறது, இது மலையாள சினிமாவிற்கு அவரது பிரம்மாண்டமான மறுபிரவேசத்தை குறிக்கிறது.


ஆக்சன் படத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில், The Shadow Strays, The Raid franchise, Headshot, The Night Comes for Us, and The Big 4 போன்ற படங்களில் சிறந்த பணிகளுக்காக பாராட்டப்பட்ட, முகமது இர்ஃபான் தலைமையிலான சர்வதேச அளவில் புகழ்பெற்ற வி ஆக்ஷன் டிசைன் குழுவின் அற்புதமான ஸ்டண்ட் கோரியோகிராஃபியை தோட்டம் படம் கொண்டுள்ளது. இந்த கூட்டணி இந்திய சினிமாவில் ஒரு முதல் மைல்கல் ஆகும்.


இப்படத்திற்கு அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங், மற்றும் அனிமல் போன்ற படங்களில் தனது சிறந்த இசைக்காக அறியப்பட்ட தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். ராஜா ராணி, தெறி, கத்தி மற்றும் சர்தார் 1 & 2 ஆகிய படங்களில் பணியாற்றிய ஜார்ஜ் C வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவை கையாளுகிறார். லோகா: அத்தியாயம் 1 மற்றும் தேசிய விருது பெற்ற 2018 திரைப்படத்தின் எடிட்டரான சாமன் சாக்கோ, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.


தயாரிப்பு வடிவமைப்பை 2018 மற்றும் எம்புரான் படங்களில் பணியாற்றிய தேசிய விருது வென்ற மோகன்தாஸ் வழிநடத்துகிறார். அதே நேரத்தில் காந்தாரா 2, மஞ்சும்மெல் பாய்ஸ் மற்றும் ARM போன்ற பிரமாண்ட படத்தில் பணியாற்றியவரும், பிரம்மயுகம் படத்துக்காக சமீபத்தில் மாநில விருது பெற்ற ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனை துறையை வழிநடத்துகிறார்.


ஆடை வடிவமைப்பை பிரவீன் வர்மா (ARM, குருப்) செய்துள்ளார், மேலும் அனிமல், விக்ரம் மற்றும் கூலி படங்களின் பின்னணியில் உள்ள தேசிய விருது பெற்ற குழுவான சின்க் சினிமா ஒலி வடிவமைப்பை மேற்கொள்கிறது. ஒலி கலவையை மற்றொரு தேசிய விருது வென்ற எம்.ஆர். ராஜகிருஷ்ணன் நிர்வகிக்கிறார், அவர் அனிமல் மற்றும் காந்தாரா 1 & 2 ஆகியவற்றில் தனது பணிகளுக்காக பாராட்டப்பட்டவர்.


எழுத்தாளரும் இயக்குனருமான ரிஷி சிவகுமார், திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தையும் அதிகம் நம்புகிறார். பெரிய திரையில் சிறந்த படம் பார்க்கும் அனுபவத்தை கொடுப்பதில் உறுதியுடன் இருக்கிறார்.


தோட்டம் படத்தை ஃபர்ஸ்ட் பேஜ் எண்டர்டெயின்மெண்ட், AVA புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்கா எண்டர்டெயினர்ஸ் பேனர்களின் கீழ் மோனு பழேதத், AV அனூப், நாவல் விந்தியன் மற்றும் சிம்மி ராஜீவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த கூட்டுத் தயாரிப்பு, இயக்குனரின் லட்சியமிக்க படைப்பு பயணத்திற்கான அவர்களின் பரந்த பார்வையையும், அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது. கலை சிறப்பை வேரூன்றிய ஒரு பார்வையாக, தோட்டம் ஒரு திரைப்படத்தை மட்டுமல்ல, உணர்ச்சி, அதிரடி மற்றும் இந்திய சினிமாவில் கதை சொல்லலின் ஆன்மாவை கொண்டாடும் ஒரு சினிமா கைவினைத்திறனின் காட்சியாகவும் உறுதியளிக்கிறது.

No comments:

Post a Comment