Friday, 14 November 2025

Dawood Movie Review

Dawood Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dawood படத்தோட review அ தான் பாக்க போறோம். Prashanth Raman இயக்கி இருக்கற இந்த படத்துல Linga, Sara Archar, Dilipan, Radha Ravi, Sai Dheena, Sara, Vaiyapuri, Sarath Ravi, Arjay, Abishek னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாக்கலாம். dawood ibrahim ன்ற underground don அ சுத்தி நடக்கற கதை தான் இது. தமிழ்நாட்டுல இவரோட life அ ஆரம்பிச்சாலும் mumbai ல செட்டில் ஆகிற இவரு அங்க இருந்துகிட்டே தமிழ்நாட்டு ல போதல் கடத்தல் business அ பண்ணிட்டு இருக்காரு. இவரோட போதை பொருளை seize பண்ணணும்ன்றதுக்காக arjay ஓட தலைமைல ஒரு police team வேலை பண்ணிட்டு வராங்க. அதே சமயம் dawood க்கு 20 வருஷமா இந்த business அ successful அ நடத்தி தந்த deena வும் இந்த பொருளை safe அ எடுக்கணும் னு try பண்ணுறாரு. அதே மாதிரி dawood க்கு இந்த பொருள் கிடைக்கக்கூடாது னு இவரோட எதிரிகளும் plan பண்ணுறாங்க. எப்பவுமே dawood சொன்ன இடத்துக்கு இந்த சரக்க சேக்கற abhishek யும்  நம்ம இந்த பொருளை எடுத்த மாட்டிப்போம் னு இந்த வேலைக்கு வேற ஒரு ஆழ தேட ஆரம்பிக்குறான். அப்படி தான் வாடகை car அ ஓட்டுற linga வை கண்டுபிடிப்பான. linga க்கு அவசரமா பணம் தேவைப்படும் அதுனால இந்த பொருளை எடுத்துட்டு போறதுக்கு ok சொல்லிடுறேன். இப்போ இந்த பொருளை சரியான எடுத்துள்ள linga சேத்தான இல்ல யார்கிட்டயாது மாட்டிகிட்டண்ணா? dawood இந்த பிரச்சனையா solve பண்ண நேர் ல வருவாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 



படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது linga ரொம்ப different ஆனா character அ இந்த படத்துல பண்ணிருக்காரு. ஒரு innocent ஆனா character ரொம்ப அருமையா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். sara aksar ஓட நடிப்பும் நல்ல  இருந்தது. இவங்க villain gang ல இருக்கற ஒரு முக்கியமான character க்கு girlfriend அ இருப்பாங்க. இவங்களோட character அ இன்னும் strong அ காமிச்சிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். அப்புறம் police officer அ வர arjay வில்லன் கூட்டத்துல இருக்கற திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், வையாபுரி, ராதாரவி னு இவங்களோட நடிப்பும் பிரமாதமா இருந்தது.     


இந்த படத்தோட technical  aspects னு பாக்கும்போது rakesh ambikapathy ஓட music  and bgm ரெண்டுமே இந்த action thriller படத்துக்கு super அ set ஆச்சு. சரத் வளையாபதி அப்புறம்  சுஷாந்த் ஓட cinematography இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். srinath ஓட editing யும் super அ இருந்தது. prashanth ஓட direction யும் அருமையா இருந்தது. அதுவும் இந்த போதை பொருள் யார்கிட்ட கடைசியா போக போது ? dawood யார் ன்ற கேள்வியை படத்தோட starting ல இருந்து ending வரைக்கும் அவளோ interesting அ எடுத்துட்டு போயிருக்காரு. 


ஒரு பக்காவான action thriller தான் இந்த dawood. சோ miss பண்ணாம theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment