Friday, 7 November 2025

Others Movie Review

Others Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம others படத்தோட review அ தான் பாக்க போறோம். Aditya Madhavan, Gouri Kishan, Anju Kurian, ஜெகன் நடிச்சிருக்க இந்த படத்தை இயக்கி இருக்கிறது Abin Hariharan. சோ வாங்க  இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

highway ல plan பண்ண பட்ட ஒரு accident நடக்குது. actual அ இதுல robbery பண்ண பட்டருக்கு ன்றது காமிக்க்ர விதமா தான் இந்த accident அ plan பண்ணிருப்பாங்க. ஆனா எதிர்பாராத விதமா இந்த accident னால ஒரு பெரிய explosion ஆகி அது மூலமா நாலு பேர் இறந்துடுறாங்க அதுல மூணு பொண்ணுங்க தான். இப்படி தான் இந்த படத்தை introduce பண்ணுறாங்க. இப்போ இதை investigate பண்ணுறதுக்காக Assistant Commissioner Madhav அ வராரு Aditya Madhavan . இதை investigate பண்ணுறதுக்காக நெறய இடத்துக்கு போயிடு வராரு. இறந்துபோனவங்களோட postmortem report அ வச்சு இவருக்கு ஒரு சில clues யும் கிடைக்குது. இதெல்லாம் வச்சு மறுபடியும் அவரோட விசாரணையை ஆரம்பிக்குறாரு, கடைசில ஒரு orphanage ஓட connect ஆகுது. அதுக்கு அப்புறும் தான் மர்ம முடிச்ச அவிழுக்குறாரு. இந்த investigation இந்த orphanage ஓட நின்னு போல, பல பாதிக்கப்பட்ட பெண்கள், சட்டவிரோதமா வேலை செய்யற ஆண்கள் னு ரொம்ப disturbing ஆனா விஷயத்தை கண்டுபிடிக்கறாரு. இதெல்லாம் எதுக்காக பண்ணுறாங்க? ஏன் பண்ணுறாங்க ன்ற கேள்விக்கு இந்த படம் பதில் அ இருக்கு. 


ஒரு பக்கம் interesting அ போற investigation இன்னொரு பக்கம் hero ஓட romantic story னு ரொம்ப balanced அ கதையை எடுத்துட்டு போயிருக்காரு director . ரொம்ப விறுவிறுப்பா போற இந்த investigation story ல அங்க அங்க comedy scenes யும் வச்சிருக்காங்க. இருந்தாலும் ஒரு சில comedy scenes அ avoid பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல ஒரு சில action scenes யும் வச்சிருக்காங்க அதுவும் logical ஆவும் super ஆவும்  இருந்தது. investigation ரொம்ப விறுவிறுப்பா போனாலும் அங்க அங்க slow ஆனது இதெல்லாம் கொஞ்சம் avoid பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். உதாரணத்துக்கு villain ஓட right hand அ பிடிச்சிரவங்க  அவனோட phone ல இருக்கற records அ ஒடனே check பண்ணமாட்டாங்க அதா கொஞ்சம் late அ தான் check பண்ணுவாங்க. இந்த மாதிரி ஒரு  சில இடங்கள் ல கொஞ்சம் fast அ action எடுக்கற மாதிரி காமிச்சிருந்த இந்த கதை இன்னும் super அ இருந்திருக்கும். இந்த investigation நடந்துட்டு இருக்கும் போது தான் madhav க்கு இன்னொரு clue கிடைக்குது, அதுவும் இவனோட lover ஆனா madhu வா நடிச்சிருக்க gouri kishan  கிட்ட இருந்து. இவங்க ஒரு ivf specialist அ இருப்பாங்க. இவங்க direct அ இந்த case ல சம்பந்த பட்டிருப்பாங்க. இவங்களோட portions எல்லாமே super அ இருக்கும். 


படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ரொம்ப serious ஆனா tone ல தான்  கதையை கொண்டு போயிருக்காரு director. சாதாரண ஒரு explosion க்கு பின்னாடி இருக்கற network அதோட இதெல்லாம் எப்படி ivf hospital ஓட connect ஆகுது ன்ற விஷயத்தை கண்டுபிடிச்சி அதா climax ல கொண்டு வர விதம் தான் அட்டகாசமா இருந்தது. ஒரு social message ஓட இந்த படத்தை முடிச்சிருக்காங்க. அதோட villain அ காமிக்கிற character அ கொஞ்சம் நல்லவனாவும் காமிச்சிருப்பாங்க. இதே மாதிரி தான் myskkin இயக்குன psycho படத்துல பண்ணிருப்பாரு. இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் detailed அ இந்த படத்துல handle பன்னிருந்த இன்னும் super அ இருந்திருக்கும்.  ஒரு சில இடங்கள் ல scientific  procedures அ பாத்தாலே பயம் வர மாதிரி தான் இருக்கும். உதாரணத்துக்கு ivf treatment . இதெல்லாம் கொஞ்சம் avoid பண்ணிருக்கலாம். 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance எல்லாம் super அ இருந்தது. ghibran ஓட bgm and songs பக்கவா set யிருந்தது. அதுவும் முக்கியமா investigation நடக்கற scenes க்கு வர bgm லாம் வேற level ல இருந்தது னு சொல்லணும். ஒரு அட்டகாசமான திரைப்படம் தான் இந்த others . சோ மிஸ் பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment