Monday, 22 December 2025

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணியின் பிரம்மாண்ட அறிமுகம்

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணியின் பிரம்மாண்ட அறிமுகம்*






*வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபல நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் இணைந்து, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) தொடரின் சென்னை அணியை வாங்கியுள்ளனர். இந்த அணிக்கு “வேல்ஸ் சென்னை கிங்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது*


இந்திய ரசிகர்கள் கொண்டாடும் இருபெரும் துறைகளான சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைக்கும் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) திகழ்கிறது. நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகளுடன், இந்த லீக் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அணியின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர்.


தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருபவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்த இரு துறைகளும் இணையும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் சென்னை அணியை திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் உடன் இணைந்து வாங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 


சென்னையில் இன்று மாலை நடைபெற்ற வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழாவில், நடிகர் சரத்குமார் மென்டர் ஆகவும், நடிகை மீனா பிராண்ட் அம்பாசிடர் ஆகவும், நடிகர் ஆர்யா அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் அணியில் இணைந்துள்ளனர்.


பிரபல கல்வியாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் குழுமத்தை கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் வலுவான இருப்பைக் கொண்ட ஒரு பன்முக நிறுவனமாக வளர்த்துள்ளார். இந்த அணியின் இணை உரிமையாளரான பிரபல நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார், நடிப்பு, திரைப்பட தயாரிப்பு, இயக்கம், சமூகப் பணி மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் பன்முகத் திறமை கொண்டவராக திகழ்கிறார். 


சென்னையில் இன்று நடைபெற்ற வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சியில் , வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கிரிக்கெட் வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி மற்றும் முரளி விஜய், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிறுவனர் விஷ்ணு இந்தூரி, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை மீனா, வேல்ஸ் குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் குஷ்மிதா கணேஷ், ஸ்ரீப்ரியா ராஜ்குமார் – ராஜ்குமார் சேதுபதி தம்பதியின் மகன் நாகார்ஜுனா சேதுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் போஜ்புரி அணியின் கேப்டனுமான மனோஜ் திவாரி, வங்காள அணியின் உரிமையாளர்கள் போனி கபூர் மற்றும் ராஜ் ஷா, பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் புனித் சிங் மற்றும் நவராஜ் ஹன்ஸ், கேரள அணியின் கேப்டன் உன்னி முகுந்தன், தெலுங்கு அணியின் கேப்டன் சச்சின் ஜோஷி மற்றும் தெலுங்கு அணியின் முக்கிய விரரும் இசையமைப்பாளருமான தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


***



No comments:

Post a Comment