Saturday, 31 January 2026

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang )

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல்  பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!*



KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் "பேங் பேங்" படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.


இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் டிரேட்மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான Horror Adventure படமாக "பேங் பேங்" உருவாகி வருகிறது.


இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H C வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார். சவுண்டு டிசைனை 'அனிமல்' படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync சினிமா செய்திருக்கிறார்கள். சவுண்டு மிக்ஸிங்-ஐ தெலுங்கனா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனேன் செய்திருக்கிறார்.


நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


KRG நிறுவனத்தின் 4வது படைப்பாக உருவாகும் "பேங் பேங்" படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் படப்பிடிப்பு இந்தோனேசியாவில் (indonesia) உள்ள மவுண்ட் ப்ரோமோ (mount bromo) என்ற இடத்தில் செயலில் இருக்கும் எரிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் நிலையில் , பேங் பேங் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது



Link : 

https://www.youtube.com/watch?v=Ytatt40eE2o

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை

 தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS  – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை !! 








இசைப் பயணத்தின் புதிய மைல்கல்: ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழக அரசு விருது பெற்ற சாம் CS !!


தமிழக அரசு சார்பில் 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகள் வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு, 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழக அரசு மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான பின்னணி இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த  சாம் CS விருது பெற்றிருப்பது, அவரை நேசிக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து தன் தனித்துவமான பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ‘ஒரு இரவு’, ‘அம்புலி’ போன்ற படங்களின் மூலம் இசைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு, ஆர் டி எக்ஸ், புஷ்பா 2, மஹாவதார் நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் உருவாக்கிய த்ரில்லிங் மற்றும் உணர்வுப்பூர்வமான இசை, ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, ‘புரியாத புதிர்’ படத்தில் கதையின் மனநிலையை நுணுக்கமாக பிரதிபலிக்கும் அவரது இசை, படத்தின் த்ரில்லர் அனுபவத்தை இன்னும் தீவிரமாக்கியதாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில், அந்தப் படத்திற்காக தமிழக அரசு சார்பில் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது, இது அவரது இசைப் பயணத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.


இந்த விருது குறித்து இசையமைப்பாளர் Sam C. S. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்கு தமிழக அரசு மாநில விருது வழங்கியிருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் ஆழ்ந்த மனநிறைவையும் தருகிறது. ஒரு இசையமைப்பாளராக எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன். இது என்னை மேலும் உற்சாகப்படுத்தும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. இத்தருணத்தில் ‘புரியாத புதிர்’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் திரைப் பயணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் ரசிகர்களின் மனதைத் தொடும், அவர்களை மகிழ்விக்கும் தரமான படைப்புகளில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


பாலிவுட் தொடங்கி இந்தியாவின் பல மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் உள்ளிட்ட, பல முக்கியமான படைப்புகளில் சாம் CS இசையமைப்பாளராக  பணியாற்றி வருகிறார். அதில் முக்கியமாக ரவிமோகனின் "கராத்தே பாபு", கார்த்தியின் "சர்தார் 2' உள்ளிட்ட பல பிரபலங்களின் டங்களில் பணியாற்றி வருகிறார். இந்த தமிழக அரசு மாநில விருது, அவரது இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்

 இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்



அபிஷன் ஜீவந்த் நடிக்கும் 'வித் லவ் ( With Love)' படத்தின் டிரெய்லர் வெளியீடு

'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ் ( With Love )' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள்.


அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வித் லவ் ' ( With Love) எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த்,  அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன்,  சரவணன், தேனி முருகன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை K. சுரேஷ்குமார் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.‌  


இதில் கதையின் நாயகனான அபிஷன் ஜீவிந்த் மற்றும் கதாநாயகி அனஸ்வரா ராஜன், தான் பள்ளிப் பருவத்தில் காதலித்தவர்களிடம் சொல்லமுடியாத காதலை சொல்ல இணைந்து பயணிப்பதும் ...அது தொடர்பான காட்சிகள், வசனங்கள் - பின்னணி இசை என அனைத்து அம்சங்களிலும் இருப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.


இப்படத்தின் டைட்டில் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது .  


பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது



Link : https://www.youtube.com/watch?v=je1xB5ColOQ

Friday, 30 January 2026

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து*

2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, ஏழு வருடங்களுக்கான, தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பெற்றுள்ள நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்; 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் விருது பெற்றுள்ள சின்னத்திரை நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினரான பல தயாரிப்பாளர்களின் திரைப்படங்கள் இவ்விருதுகளை பெற்றுள்ளது, நமது சங்கத்திற்கு பெருமையை தந்துள்ளது.


கலைஞர்களை கௌரவித்து, அடையாளமும், அங்கீகாரமும் வழங்கியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தேர்வுக்குழுவினருக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.


பல வருடங்களாக, இந்த விருதுகளுக்காக காத்திருந்த கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த நற்செய்தி மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பிப்ரவரி 13, 2026 அன்று, விருது பெரும் அனைவருக்கும், இவ்விருதுகளை வழங்க உள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நமது சங்கத்தின் நன்றிகள்.



நன்றியுடன்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,

தலைவர் மற்றும் நிர்வாகிகள்.

அமேசான் பிரைமில் "படையாண்ட மாவீரா

 *அமேசான் பிரைமில் "படையாண்ட மாவீரா"*



வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெறும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய "படையாண்ட மாவீரா"   

 

தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது. 


வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் "படையாண்ட மாவீரா" கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.


படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா  

தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடித்திருக்கிறார்.


மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார்,

பின்னணி இசை சாம் சிஎஸ்,  பாடல்கள் "கவிப்பேரரசு" வைரமுத்து.  "ஸ்டண்ட்" சில்வா, நடனம் தினேஷ்,  ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன், வெற்றிவேல் மகேந்திரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் முருகன்.


சாதி, மதம், மொழி, இனம், நாடு கடந்து தன் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் இப்படைப்பு மெய்சிலிப்போடு கொண்டாட வைக்கும் என  உறுதிபட சொல்லும் இயக்குநர் வ.கௌதமன் மேலும் இப்படைப்பினை குடும்பங்களோடு பார்ப்பதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதும் மிக மிக முக்கியமானது என்கிறார்.


பார்க்குமிடம் அமேசான் பிரைம் ஓடிடி ரெண்டல் தளம்.


Check it out now on Prime Video!


https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.a2016b0a-5e0a-4ee2-afc9-175cdc116f92&ref_=atv_dp_share_mv&r=web

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் ‘மரகதமலை

 பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் ‘மரகதமலை’!






அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘மரகதமலை’!


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் ‘மரகதமலை’ படம் பிடிக்கும் - இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை


தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’. 


அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். 


இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.


படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ள இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.லதா, பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேசுகையில், “எனக்கு மேஜிக்கல், ராஜா, ராணி, மிருகங்கள் படங்கள் பிடிக்கும், அப்படிப்பட்ட படம் எடுக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. அதனால் நானே கதை எழுதி, இயக்கி தயாரித்திருக்கிறேன்.


மரகதமலை படத்தின் கதையை 18 ஆம் நூற்றாண்டில் நடப்பது போல் எழுதியிருக்கிறேன். ஜமீனிடம் இருக்கும் புதையலை கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அவர்களிடத்தில் இருந்து புதையலை காப்பாற்றுவதற்கான ஜமீன் தன் மனைவி, பிள்ளையை காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது அனைவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ?, ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா /, என்பதை தான் சாகசங்கள் நிறைந்த மாயாஜால உலகத்தோடு சொல்லியிருக்கிறேன்.


தடா வனப்பகுதியில் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குதிரையை மட்டும் ஒரிஜினலாக பயன்படுத்தி விட்டு, மற்ற விலங்குகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஆனால், அது கிராபிக்ஸ் போல் தெரியாதவாறு காட்சிகள் தரமாக வந்திருக்கிறது. அதேபோல், படத்தில் டிராகனையும் உருவாக்கியிருக்கிறோம், தமிழ் சினிமாவில் டிராகனை இதுவரை யாரும் படத்தில் பயன்படுத்தியதில்லை, நாங்கள் தான் முதல் முறையாக செய்திருக்கிறோம். இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும்.


தடா வனப்பகுதியில் கடந்த 15 வருடங்களாக படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், நாங்கள் சிறுவர்களுக்கான படம் எடுப்பதால் எங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம், இரவு நேரங்களில் அப்பகுதியில் புலிகள் வருவதோடு, பல விஷ பாம்புகளும் வரும் என்று எச்சரித்தார்கள். சிறுவர்களை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியதால் மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்பு அம்சங்களோடு படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.


படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது. ஒரு விநாயகர் பாடலை நான் எழுதியிருக்கிறேன், மிக சிறப்பாக வந்திருக்கிறது. பாடகி சின்மயி இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். பாடல்கள் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். ஒளிப்பதிவாளர் முத்தையாவின் பணி நிச்சயம் பேசப்படும். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரும் பிரபலமானவர்கள். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக நாங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டை படம் தாண்டியது. எனவே படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. 


சில இயக்குநர்களிடம் என் கதையை சொன்ன போது, அவர்கள் பல மாற்றங்கள் செய்ய தொடங்கி விட்டார்கள், ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. என் கதை நான் எழுதியது போலவே எந்தவித மாற்றமும் இன்றி திரைப்படமாக வேண்டும் என்பது தான் என் விருப்பம். எனவே, மற்றவர்களிடம் கொடுத்து இயக்க சொல்வதை விட நாமே இயக்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டேன், அப்படி தான் நான் இயக்குநர் ஆனேன். 


சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அனைத்து அம்சங்கள் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு படமாக மரகதமலை இருக்கும். படத்தை முடித்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாவதோடு, படம் பற்றிய மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை அடுத்தடுத்த சந்திப்புகளில் தெரிவிப்போம்.” என்றார்..


எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கல் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக நா.விஜய் பணியாற்றுகிறார்.

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu



ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற விருதை பெற உள்ளேன். விழா பிப்ரவரி மாதம் 13ம் தேதி கலைவாணர் அரங்கில். விருது வழங்குபவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். இந்த சந்தோஷ நேரத்தில் என்னை அறிமுகப்படுத்திய, தொடர்ந்து வாய்ப்பு அளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

Tks to my producer 

Sundar. C

Thursday, 29 January 2026

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*

 *ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம்,  மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*



இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில்  வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு,  ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமே “சிறை” படத்தின் மையம். அதிகாரம், மனிதநேயம், மனசாட்சியின் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து நகரும் இந்த கதை, ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கிறது. நாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்‌ஷய் குமார் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.


இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.


திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ZEE நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ZEE5 இல் வெளியானதும் “சிறை” திரைப்படம் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் வலுவான விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்ததன் விளைவாக, படம் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


மண் சார்ந்த உண்மைக் கதைகளை தரமான உருவாக்கத்துடன் வழங்கும் ZEE5 தமிழ், தொடர்ந்து இப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளை தமிழ்  பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக கொண்டு வருகிறது. அந்த வரிசையில் “சிறை” திரைப்படம், தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஓடிடி சாதனைகளில் ஒன்றாக தன்னை பதிவு செய்துள்ளது. 


உணர்வுபூர்வமான, தாக்கம் மிக்க ஒரு அனுபவத்தை தேடும் ரசிகர்கள், “சிறை” திரைப்படத்தை ZEE5 தளத்தில் தவறாமல் கண்டுகளிக்கலாம்.

Mellisai Tamil Movie Review

Mellisai Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம   mellisai   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dhirav. இந்த படத்துல G.Kishore Kumar ,Subatra ,MaryanRobert ,George Maryan ,Harish Uthaman ,Dhananya Varshini ,Jaswant Manikandan னு பலர் நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். 


rajan அ நடிச்சிருக்க kishore ஒரு school ல pt teacher அ work பண்ணிட்டு இருக்காரு. இவருக்கு singing ன்றது passion ஒரு பக்கம் teacher அ இருந்தாலும் இவரோட passion யும் follow பண்ணிட்டு இருக்காரு. இவரோட wife தான் vidya வ நடிச்சிருக்க Subatra Robert , இவங்களும் அதே school ல தான் ஒரு teacher அ work பண்ணிட்டு இருப்பாங்க. இவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. இவங்க ஒரு சாதாரண middle  class family தான். ரொம்ப வசதி இல்லனாலும் இருக்கிறதா வச்சுக்கிட்டு சந்தோசமா இருக்கற ஒரு குடும்பம் தான் இவங்க. இப்போ Rajan க்கு அவரோட job எல்லாம் பிரச்சனை ஆயிடுது, அதே சமயம் இவரோட பெரிய பையன்க்கு ஒரு IT கம்பெனி ல வேலை கிடைக்குது. வேலை கிடைச்சு family க்கு support பண்ணுற பையனோட character வேற மாதிரி மாறிடுது. இதுனால இவங்க குடும்பத்துல ஒரு விரிசல் விழுது. இந்த விரிசல் சரி ஆச்சா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு middle class family க்குல  வர பிரச்சனைகள், ego , கோவம், பொறாமை , பசங்க parents கிட்ட திமிர நடந்துக்கறது னு பல விஷயங்களை இந்த படத்துல காமிச்சிருக்காங்க. kishore எப்பவும் போல ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காரு. ஒரு பக்கம் தன்னோட job ல வர பிரச்சனைகளை நினச்சு வர வருத்தம் இன்னொரு பக்கம் அவரோட பெரிய பையன்க்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு நினச்சு வர பெருமை னு ரொம்ப நேர்த்தியா நடிச்சிருக்காரு. subathra ஓட performance யும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட கதையை ஒரு flashback story மாதிரி தான் கொண்டு வந்திருக்காங்க. இதுல வர நெறய விஷயங்கள் real life ல நடக்கிறது தான் அதுனால அதா  பாக்கும்போது audience ஆழ relate பன்னிக்கமுடியும். music, visual எல்லாமே அட்டகாசமா இருந்தது. இந்த படத்தை பாக்கும்போது பசங்க வாழக்கை ல parents ஓட importance எவ்ளோ முக்கியம், emotional அ connect ஆகுறது, life ல நெறய விஷயங்கள் இருந்தாலும் நேரத்துக்கு ஏத்த மாதிரி priority குடுக்க தெரிறது னு நெறய விஷயங்களை இந்த படம் மூலமா சொல்லிருக்காங்க.  


actors ஓட strong ஆனா performance , மனச நெருடரா மாதிரியான கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

Granny Tamil Movie Review

Granny Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம granny படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vijaya Kumaaran . இந்த படத்துல Vadivukkarasi, Dhileepan, SingaPuli, Gaja Raja, Ananthu Nag, Aparna, னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு horror thriller படம்.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.

ஒரு சின்ன கிராமத்துல ஒரு கொழந்தை மர்மமான முறை ல இறந்து போயிடுறேன். இதை பத்தி விசாரிக்கறதுக்காக police இந்த case அ handle பண்ணுறாங்க. அதே சமயம் london ல வந்த ஒரு couple க்கு அவங்களோட பூர்விக சொத்து அ ஒரு வீடு இருக்கும். இங்க தங்க வருவாங்க அப்போ அந்த வீடு முன்னாடி ஒரு வயசான பாட்டி மயங்கின நிலை ல கிடைக்கறாங்க. இவங்களுக்கு இந்த couple உதவி பண்ணுறாங்க. இந்த பாட்டி தான் வடிவுக்கரசி. இந்த வீட்டோட உண்மையான owner ஏ இவங்களோட husband தான். இவங்களோட husband மாந்த்ரீகம் பண்ணி இளமையா மாறுறதுக்கான வழிய கண்டுபிடிச்சிப்பாரு. இப்போ இங்க தான் vadivukarasi யும் இந்த couple யும் இருக்காங்க. இதை பத்தி எதுவுமே தெரியாம இந்த பிரச்சனை ல இவங்க ரெண்டு பேரும் மாட்டிக்கிறாங்க. அது மட்டும் இல்ல இவங்களுக்கு ரெண்டு பசங்களும் இருப்பாங்க. அவங்களும் பெரிய ஆபத்து ல மாட்டிக்கிறாங்க. இந்த பிரச்சனை ல இருந்து இவங்க தப்பிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட மிக பெரிய பலமே கதைக்களம் தான். அவ்ளோ interesting ஆவும் thrilling ஆவும் கதையை director கொண்டு போயிருக்காரு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா tension அ build பண்ணிட்டு போற விதம் எல்லாமே super  அ இருந்தது. vadivukarasi villain character ல நடிச்சாலே மிரட்டலா தான் இருக்கும். இந்த படத்துல இவங்கள பாத்தாலே பயம் தான் வருது. அந்தளவுக்கு இவங்க character அ detailed அ convey பண்ணிருக்காங்க. ஒரு horror படத்துக்கு என்னனா தேவையோ அதெல்லாம் இந்த படத்துல குடுத்திருக்காங்க. இந்த படத்தோட  visuals எல்லாமே பக்காவா இருந்தது. இவங்க ஒரு உண்மையான வீட்ல தான் shooting எடுத்திருக்காங்க அதுனால பாக்குறதுக்கு original அ இருந்தது. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vadivukarasi ஓட performance தான் தனித்துவமா இருக்கு. இவங்களோட screen presence அவ்ளோ strong அ இருந்தது னு தான் சொல்லணும். இவங்களுக்கு makeup போட்டு இருந்த விதமும் அட்டகாசமா இருந்தது.  Ananth Nag, Dhileepan and Singampuli இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. மத்த Supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க.  


 ஒரு பக்காவான thriller  கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

Gandhi Talks Tamil Movie Review

Gandhi Talks Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gandhi talks  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது : Kishor Pandurang. இந்த படத்துல Vijay Sethupathi, Arvind Swami, Aditi Rao Hydari, Siddharth Jadhavனு பலர் நடிச்சிருக்காங்க.  இது ஒரு silent  movie . அதாவுது ஒரு dialogue கூட படத்துல இருக்காது. இந்த மாதிரி ஏற்கனவே ஒரு படம் நம்ம தமிழ் சினிமா ல வந்திருக்கு. prabhudeva நடிப்புல karthik subburaj இயக்குதுல வந்த mercury படம் தான் அது.  கிட்ட தட்ட 23 வருஷமா இந்த மாதிரி ஒரு silent film அ direct பண்ணனும் ஆசை பட்டாரு அண்ட் இந்த படமும் direct பண்ணிட்டாரு.  



இந்த படம் ஏற்கனவே 2023 ல நடந்த international film festival ல premiere பண்ணி இருந்தாங்க அதோட இந்த படத்தை பாத்த பலரும் இதை பாராட்டி இருக்காங்க. இந்த வருஷம் தான் இந்த படம் release ஆகுது. நெறய விஷயங்களை convey பண்ணுறதுக்கு dialogues  இருக்கணும்னு முக்கியம் கிடையாது. body language , facial expressions மூலமா ஆவே தெரியும். ஆனா இந்த படத்துல dialogues இல்லாம characters கஷ்டப்படுறாங்க அப்போ தான் text messages இல்லனா sign language மூலமா சொல்ல வர விஷயத்தை recieve பண்ணி கிறங்க. இருந்தாலும் ஒரு dialogue கூட இல்லாம silent movie எடுக்கறது ஒரு பெரிய difficult ஆனா task தான் இருந்தாலும் ஒரு நல்ல கதைக்களத்தை தான் குடுத்திருக்காரு director . 


mahadev அ நடிச்சிருக்க vijay sethupadhi க்கு எந்த வேலையும் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படுறாரு. எவ்ளோ முயற்சி செஞ்சாலும் இவருக்கு வேலை கிடைக்கல. ஒரு நாள் எதிர்ச்சிய boseman அ நடிச்சிருக்க arvindsamy அ meet பண்ணுறாரு. இவரு ஒரு businessman . என்னதான் இவரு பணக்காரரா இருந்தாலும் எதோ ஒரு காரணத்துக்காக இவரோட business நஷ்டத்தை நோக்கி போக ஆரம்பிக்குது. இப்படி இக்கட்டான சூழ்நிலைல சந்திக்கும்போது தான் mahadev ஓட வாழ்க்கையே தல கீழ மாறுது. இவங்க ரெண்டு பேரோட life ல என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு silent film க்கு music தான் ரொம்ப முக்கியம். இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது AR rahman . ஓவுவுறு scenes க்கும் அவ்ளோ importance குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். characters ஓட emotions அ இவரோட music தான் audience முன்னாடி கொண்டு வருது. இந்த படத்துல நெறய சின்ன சின்ன songs லாம் இருக்கு. இந்த படம் premiere க்கு வரதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி  தான் அஞ்சு songs அ compose பண்ணதா AR ரஹ்மான் இந்த film festival ல பேசி இருக்காரு. 


படம் பாக்குறதுக்கு ரொம்ப interesting ஆவும் engaging ஆவும் இருக்கு.  இந்த படத்தோட title ஏ audience க்கு ஒரு உதாரணம். காந்தியை நம்ம ரூபா நோட்டு ல பாக்குற ஒரு அடையாளமா தான் பாக்குறோமே தவிர அவரு எந்த நோக்கத்துக்காக கஷ்டப்பட்டாரு ன்ற விஷயத்தை நம்மள இந்த society ல follow பண்ண முடியல. நம்ம society ல இருக்கற contradiction அ பத்தி தான் பேசிருக்காங்க. இந்த படத்துல corruption அ பத்தி அதிகமா காமிச்சிருக்காங்க.   என்னதான் ஒற்றுமையை இந்த நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு வரணும் னு பல தலைவர்கள் சொன்னாலும், reality ல அது ரொம்ப கஷ்டம். அதுக்கு ஒரு காரணம் corruption தான். corruption ல மாட்டிக்குற சாதாரண மக்கள் கஷ்டப்படுறாங்க. அவங்களோட எல்லா உழைப்பும் வீண் ஆகுது, உடம்பளவு ளையும் மனதளவு ளையும் வேதனை படுறாங்க. அதுனால தான் ஒரு சிலர் தப்பான வழிக்கும் போயிடுறாங்க.   . ஏழை பணக்காரன் ன்றதையும் தாண்டி ஒரு சின்ன love story யையும் காமிச்சிருக்காங்க. mahadev அப்புறம் gayathri யா நடிச்சிருக்க adithi rao வ love பண்ணுவாரு. இவங்க ரெண்டு பேரோட love story யும் simple ஆவும் genuine ஆவும் தான் move ஆகும். 

இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யும் அவங்களோட best ஆனா performance அ குடுத்திருக்காங்க. படத்தோட cinematography , editing , direction , music னு எல்லா technical aspects யும் பக்க பலமா அமைச்சிருக்கு. 

     

 ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

Wednesday, 28 January 2026

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது murali krish . இவரு இயக்குற முதல் படம் இதுதான். இவரு இதுக்கு முன்னாடி M rajesh ன்ற director க்கு assitant அ வேலை பாத்துட்டு இருந்தாரு.  இந்த படத்தோட trailer அ 26 ஆம் தேதி நடிகர் jeeva வவும் director rajesh யும் reveal பண்ணாங்க.  இந்த படத்துல அட்ட கத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், சரவண சுபையா, கலையரசன் கண்ணுசாமி னு பலர் நடிச்சிருக்காங்க. lubber  pandhu க்கு அப்புறம் மறுபடியும் ஒரு கிராமத்து கதையோட வந்திருக்காரு attakathi  dinesh . இந்த படம் 30 த் அன்னிக்கு தான் release ஆகா போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.



attakathi dinesh chennai ல ஒரு water purifier company அ வச்சு நடத்திட்டு வராரு. இவருக்காக இவரோட parents ஒரு பொண்ண தேடிட்டு இருக்காங்க. இவரோட profile அ matrimony ளையும் upload பண்ணுறாங்க. அப்போ தான் இவருக்கு reshma matrimony மூலமா அறிமுகம் ஆகுறாங்க. ரெண்டு பேருக்கும் ரொம்பவே பிடிச்சி போயிடுது. இப்போ  இவரு reshma கிட்ட தான் ஒரு pulsar bike அ தான் வச்சுருக்கேன் னு சொல்லுறாரு. ஆனா உண்மைல இவருக்கிட்ட xl  தான் இருக்கும். சொன்ன பொய்யா உண்மையாக்க ஒரு பழைய கருப்பு colour  pulsar அ வாங்குறாரு. ஆனா இந்த வண்டியை வாங்குனதுல இருந்து இவருக்கு அமோனிஷ்யாம நெறய பிரச்சனைகளை சந்திக்கறாரு. அதுனால இந்த bike இதுக்கு முன்னாடி யாரு வச்சிருந்த அவங்களுக்கு என்னாச்சு ன்றதா விசாரிக்க ஆரம்பிக்குராறு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது attakathi dinesh எப்பவும் போல ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காரு. reshma ஓட acting யும் நல்ல இருந்தது. இவங்களோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும்  நல்ல இருந்திருக்கும். rahul  ஓட comedy scenes எல்லாமே ரசிக்கிற விதமா இருந்தது. முக்கியமா second half ல ஐவரும் இவரோட wife யும் ஒண்ணா bike ல போற scenes எல்லாம் audience அ சிரிக்க வைக்கிற மாதிரி இருக்கு. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ஒரு நல்ல performance  அ குடுத்திருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது inba ஓட songs அப்புறம் bgm ரெண்டுமே இந்த படத்துக்கு highlight ஆனா ஒரு விஷயம். baskar arumugam ஓட cinematography அப்புறம் sasi dhaksha ஓட editing யும் அருமையா இருந்தது. 


என்னதான் பேய் படங்கள் நம்ம தமிழ் சினிமா ல நெறய பாத்து இருந்தாலும் ஒரு bike அ வச்சு பேய் வர்ரது கொஞ்சம்  புதுசா தான் இருக்கு. ஒரு விதயசமான thriller கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre  ல போய் பக்க miss  பண்ணிடாதீங்க.

LOCKDOWN Movie Review

LOCKDOWN Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lockdown படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது A.R. Jeeva.  lyca production ல வெளி வர போற இந்த படத்துல anupama harlie, Nirosha, Priya Venkat, Livingston, Indhumathi, Rajkumar, Shamji, Lollu Sabha Maran, Vinayaga Raj, Vidhu, Sanjivie, Priya Ganesh, and Asha, னு பலர் நடிச்சிருக்காங்க. 



இந்த படம் 30 த் அன்னிக்கு தான் release ஆகா போது. இது ஒரு psychological drama movie . இந்த படத்தோட trailer வெளி ஆகி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. என்ன தான் covid lockdown அ main background அ காமிச்சாலும் ஒரு பொண்ணோட emotions , அவ மனுசுக்குள்ள நடக்கற போராட்டம், society pressure , குடும்பத்தோட கொவ்ரவத்துக்காக எடுக்கற முடிவு னு full  அ anita வா நடிச்சிருக்க anupama மேல தான் போகுது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.

  

anita வ நடிச்சிருக்க anupama  ஒரு lower  middle class குடும்பத்தை சேந்தவங்க. இவங்க college  படிச்சி முடிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கும் போய் சேந்துடறாங்க. இவங்களுக்கு pradeep னு ஒரு friend இருப்பாரு. இவரு ஒரு HR officer அ வேலை செய்வாரு. இவரு anita வை ஒரு party க்கு கூட்டிட்டு போறாரு. அந்த party ல நல்ல dance ஆடிட்டு இருக்கும்போது திடுருனு anita மயங்கி கீழ விழுந்துடறாங்க. hospital ல போய் check பண்ணும்போது இவங்க pregenant அ இருக்காங்க னு தெரியவருது. இந்த pregnancy  அ கலைக்கணும் னு try பண்ணும்போது தான் covid 19 னால lockdown ஆகிடுது. இப்போ இந்த lockdown காரணமா anita நெறய பிரச்சனைகளை சந்திக்கறாங்க. இவங்களுக்கு abortion பண்ண 30, 000 க்கு ஒரு doctor accept பண்ணி    இருப்பாங்க. ஆனா அவங்க covid  ஆழ பாதிக்கப்படுறாங்க. இப்போ anita  வேற doctor  கிட்ட போறாங்க ஆனா அதுவும் பிரச்சனையா தான் முடியுது. இப்போ இந்த problem  ல  இருந்து இவங்க வெளில வந்தாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


covid  19 ல lockdown ஓட தாக்கத்தை யாருமே மறந்திருக்க மாட்டோம். அந்த period ல வெளில போக முடியாம நெறய பேர் கஷ்டப்பட்டிருப்பாங்க. அந்த மாதிரி ஒரு background தான் இந்த கதைக்கு குடுத்திருக்காங்க. இந்த கதையை ரொம்ப emotional  அ கொண்டு போயிருக்காரு director. முக்க்கியமா படத்தோட second half அ எடுத்துட்டு போனது தான் நல்ல இருந்தது. anita வா நடிச்சிருக்க anupama, natural ஆனா performance அ வெளி படுத்திருக்காங்க. ஒரு பக்கம் society pressure இன்னொரு பக்கம் emotional stress னு எதார்த்தமான நடிப்பை அனுபமா கொண்டு வந்திருக்காங்க. இது வரைக்கும் இவங்க நடிச்ச படங்கள் ல பாக்கும்போது இந்த படத்துல தான் outstanding performance அ குடுத்திருக்காங்க. மத்த actors  ஆனா charlie , nirosha இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. supporting  actors  யும் அவங்க role  அ புரிஞ்சுகிட்டு ஒரு best ஆனா performance  அ வெளி படுத்திருக்காங்க. 


இந்த படத்தோட technical  aspects னு பாக்கும்போது எல்லாமே இந்த படத்துக்கு plus point அ இருக்குனு தான் சொல்லணும். N.R. Ranganathan and Siddharth Vipin ஓட songs அப்புறம் bgm எல்லாம் அட்டகாசமா இருந்தது. முக்கியமா படத்தோட emotional  scenes க்கு bgm கச்சிதமா இருந்தது. Shaktivel' ஓட cinematography characters ஓட emotions , situations எல்லாமே அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. முக்கியமா nightshots  எல்லாமே அட்டகாசமா இருந்தது. Sabu Joseph'ஓட  editing யும் audience ஓட கவனம் எங்கயும் சிதறாத மாதிரி கதையை குடுத்திருக்காரு. 


lyca productions எப்பவுமே பெரிய budget படங்களை தான் பண்ணிருக்கு. இது சின்ன budget படமா இருந்தாலும் ஒரு emotional ஆனா கதைக்களத்தை குடுத்திருக்காங்க. சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara;

 Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara; Presented By Geetha Arts & Swapna Cinema, Produced By Sandeep Gunnam, Ramya Gunnam, Pan-India theatrical release in summer 2026*




The versatile star Dulquer Salmaan, who is currently riding high on consecutive blockbusters and Pan-India stardom, is now gearing up with another promising drama, Aakasamlo Oka Tara. The film is directed by Pavan Sadineni, known for his inventive storytelling and distinct visual style. Presented by the prestigious Geetha Arts and Swapna Cinema, the project is produced by Sandeep Gunnam and Ramya Gunnam. Newcomer Satvika Veeravalli plays the female lead opposite Dulquer. The previously released promos have already heightened anticipation for this engaging drama.


Meanwhile, the makers have sprung a pleasant surprise. Shruti Haasan, who has become highly selective of late, has come on board for a crucial role. Extending birthday wishes, the makers have unveiled her first look. She sports an intense, unvarnished look, with glasses framing a steady, downward gaze that reflects quiet intensity. The cigarette at her lips and the drifting smoke add a gritty layer to her character, hinting at emotional depth and unspoken stories.


Shruti Haasan’s character is going to play a decisive role in the film’s narrative arc, with her entry steering the story into a new phase. Her mere appearance positions her as a force who brings sharp dimension and weight to the drama.


The film promises strong technical quality, with GV Prakash Kumar scoring the music, Sujith Sarang handling cinematography and Shwetha Sabu Cyril overseeing production design.


Currently in its final phase of production, Aakasamlo Oka Tara is slated for a Pan-India release in Telugu, Tamil, Hindi, and Malayalam in summer 2026.


Cast: Dulquer Salmaan, Satvika Veeravalli, Shruti Haasan and others


Technical Team:

Director: Pavan Sadineni

Writer: Gangaraju Gunnam

Producers: Sandeep Gunnam, Ramya Gunnam

Presented by - Geetha Arts, Swapna Cinema

Music: GV Prakash

DOP: Sujith Sarang

Production Designer: Shwetha Sabu Cyril

ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

 *“ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!*

 



துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக்க தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார்.


Geetha Arts & Swapna Cinema வழங்க,  சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது


தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும்  நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக  “ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும்  தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து,  புகழ் பெற்ற பவன் சடினேனி  ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிக்கின்றனர். புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான புரமோக்கள், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்,  இப்படத்தின் மீது  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் கண்ணாடியுடன், கீழ்நோக்கி பதிந்த தீவிரமான பார்வையுடன்,  இயல்பான தோற்றத்தில் இருக்கிறார் —அது அவரின் கதாபாத்திரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. அவரது உதட்டில் இருக்கும் சிகரெட்டும், மேலெழும் புகையும், அந்த கதாபாத்திரத்தில் உள்ள உணர்ச்சி ஆழத்தையும் சொல்லப்படாத கதைகளையும் சுட்டிக்காட்டுகிறது.


இந்த திரைப்படத்தின்  கதையோட்டத்தில் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் ,கதையின் திருப்புமுனையாக முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. அவர் இப்படத்தில் இணைந்துள்ளது, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அவரது தோற்றமே, இந்த டிராமாவுக்கு புதிய பரிமாணத்தையும் கனத்தையும் சேர்க்கும் சக்தியாக அவரை நிலைநிறுத்துகிறது.


இந்த திரைப்படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை சுஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கின்றனர்.


தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.


நடிகர்கள்: துல்கர் சல்மான்,  சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்


தொழில்நுட்ப குழு:

இயக்கம்: பவன் சடினேனி

கதை: கங்கராஜு குன்னம்

தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்

வழங்குபவர்கள்: Geetha Arts, Swapna Cinema

இசை: GV பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: சுஜித் சாரங் (Sujith Sarang)

தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்


ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து

 *“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!*




மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்ட இருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம் கிஷோர் நடிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுப்பூர்வமான மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான பல மகிழ்வான தருணங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை திரவ் எழுதி இயக்கியுள்ளார்.


பட அனுபவம் பற்றி இயக்குநர் திரவ் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பொறுப்பு, சுமைகள், கட்டுப்பாடுகள் காரணமாக இவற்றை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. இசையை உயிராக நேசித்த ஒருவன் குடும்ப பொறுப்பு காரணமாக தனது கனவுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கிறான். ஒருகாலத்தில் நம்பிக்கையுடன் ஒலித்த அவனது குரல், ஆண்டுகள் கடந்த பின்னர் சமரசங்கள், பயம் மற்றும் நிறைவேறாத ஆசைகளின் கீழ் ஒடுங்கி போகிறது. ஆனால், தோல்வியடைந்த சோர்ந்து போன தனது தந்தையை பார்க்க விரும்பாத அவனது எட்டு வயது மகள், உலகம் கொண்டாடும் ஒரு ஹீரோவாக அவனது வாழ்வை மாற்றுகிறாள். தந்தையும் மகளும் இணைந்து உணர்வுப்பூர்வமாக தொடங்கும் இந்த கதை முடியும்போது ரசிகர்களுக்குள் நம்பிக்கையை விதைக்கும்” என்றார். 


படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் எழுதிய கதாபாத்திரத்தை தனது நடிப்பு திறமையால் திரையில் மேலும் மெருகேற்றி இருக்கிறார் நடிகர் கிஷோர். பெரும்பாலும் அவரை கடினமான, வலுவான கதாபாத்திரங்களில்தான் பார்த்திருக்கிறோம். அதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கிஷோராக அவரின் மிருதுவான, அமைதியான பக்கம் இந்த படத்தில் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும். சுபத்ரா, ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி, ரவி எழுமழை உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். மனதை கவரும் பாடல்களையும் பின்னணி இசையையும் சங்கர் ரங்கராஜன் கொடுத்துள்ளார். படம் சிறப்பாக வெளிவர காரணமாக இருந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி” என்றார். 


உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘மெல்லிசை’ திரைப்படம் ஜனவரி 30, 2026 அன்று வெளியாகிறது.

Mellisai is a film that will connect with every man, woman and transgender who carries a hidden talent

 *“Mellisai is a film that will connect with every man, woman and transgender who carries a hidden talent or passion within them” - Director Dhirav*

 




It’s time for a feel-good Slice-of-Life movie as ‘Mellisai’ starring Kishore is all set to arrive in your nearest theaters on Jan 30. The film promising to be an emotional and delightful experience has a lot of moments that audience will rejoice. Writer-Director Dhirav shares his experience of creating this movie, produced by A Hashtag FDFS Productions. 



Director Dhirav says, “Mellisai is a film that will connect with every man, woman and transgender who carries a hidden talent or passion within them, but had to set it aside because of life’s responsibilities, burdens, and commitments. The story follows a man whose boundless love for music once knew no limits, but who has now put that passion on hold as he shoulders the role of a breadwinner.” His voice, once full of promise, has faded into silence, buried under years of compromise, fear, and unfinished hope. Everything changes through the innocent insistence of his eight-year-old daughter, a child who sees not a tired, defeated father, but a hero with a gift the world deserves to hear.  As father and daughter embark on this emotional journey, Mellisai becomes more than a story of talent, it becomes a story of belief.” 



Speaking about the performances, he adds, “Kishore sir has done a remarkable job, and has exceeded the output I envisaged while drafting his characterisation. The softness, he has maintained throughout his role, is going to be a fresh experience for the audiences. We have seen him in rough and tough roles, but this one will be a serene one. The entire star-cast including Subatra, George Mariyan, Harish Utthaman, Jaswant, Dhananya, Proaktiv Prabhakaran, Kannan Bharathi, Ravi ezhumazhai and others have given soul to this film. Shankar Rangarajan’s musical score is the backbone, and has delivered commendable numbers and BGM. I thank my entire team of technicians for a beautiful presentation.” 



Mellisai is all set for the worldwide theatrical release on January 30, 2026.

காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்

 *“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்*



Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்”  திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது.


ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது. காதுகளால் மட்டும் அல்ல, பார்வையாளர்களின் உள்ளுணர்வுகளாலும் கேட்க வைக்கும் ஒரு சினிமா அனுபவமாக  இது அமைந்துள்ளது.


விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகிய முன்னணி  நட்சத்திரங்களின் , நுணுக்கமும் உள்ளார்ந்த நடிப்பும், உணர்வுப்பூர்வமான மோதல்களும் நிறைந்த சுவடுகளை, டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லாததால், முகபாவனைகளும் நடிகர்களின் இருப்புமே கதையின் மையமாக இருக்கின்றது.


படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி .., 

“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மௌனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது.” என்றார். 


படம் குறித்து அரவிந்த்சாமி கூறுகையில்.., 

“சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மௌனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை ‘காந்தி டாக்ஸ்’ நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க  இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது.” என்றார். 


படத்தின் உணர்ச்சிப் பிணைப்பை பற்றி அதிதி ராவ் ஹைதாரி கூறியதாவது.., 

“வார்த்தைகளை விட  உணர்வுகள் தான் இதில்  என்னை அதிகம் நெகிழ வைத்தது. மௌனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது.”


சித்தார்த் ஜாதவ் கூறியதாவது.., 

“உரையாடலின்றி இவ்வளவு வலிமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது உண்மையிலேயே சிறப்பு. வார்த்தைகளைத் தாண்டி பேசும் சினிமாவின் உலகமொழியை இது மீண்டும் நினைவூட்டுகிறது.”


கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.


இசையின் உச்சமான ஏ ஆர் ரஹ்மான் கச்சேரிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, துணிச்சலான மற்றும் மரபு மீறிய ஒரு முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின்  டிரெய்லரை வெளியிட்டு, பாரம்பரிய சினிமா மற்றும் இசையின் சங்கமத்தை  கொண்டாடியுள்ளது படக்குழு. இந்த தனித்துவமான விளம்பர அணுகுமுறை, படத்தின் தத்துவத்தை, ஆழமான, அனுபவபூர்வமான மற்றும் கலை நோக்கத்தை பிரதிபலிக்கிறது.


“காந்தி டாக்ஸ்”  மூலம், Zee Studios  மற்றும் தயாரிப்பாளர்கள் விதிமுறைகளைத் தாண்டி, நுணுக்கமான நடிப்பைக் கொண்டாடும் மற்றும் இந்திய சினிமாவின் எல்லைகளை முன்னுக்கு எடுத்துச் செல்லும் படங்களுக்கான தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். இத்திதிரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்ச்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்


2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்”  திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


🔗 https://youtu.be/rph2F0uX-A0

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் - இயக்குநர் விஷ்ணு மோகன் - மோகன்லால் - இணையும் '#L367'

 *ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் - இயக்குநர் விஷ்ணு மோகன் - மோகன்லால் - இணையும் '#L367'*




*ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் - இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறது*


ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை பற்றி தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  இந்த படத்திற்கு தற்காலிகமாக' #L367' என  பெயரிடப்பட்டுள்ளது. தனது முதல் படமான 'மெப்படியான் ' படத்தின் மூலம் தேசிய விருதை வென்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இப்படத்திற்கு கதை எழுதி, இயக்குகிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் #L367 எனும் திரைப்படம் - ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக அமையவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பைஜு கோபாலன் மற்றும் வி.சி.பிரவீன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். 


மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படக் குழுவினர் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தற்போது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் - சுரேஷ் கோபியின் 'ஒட்டக்கொம்பன்', ஜெயராம் -‌ காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'ஆசைகள் ஆயிரம் ', ஜெயசூர்யாவின் 'கதனார்', நிவின் பாலி- பி.உன்னிகிருஷ்ணன் இணையும் ஒரு படம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் 'கில்லர் ' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் #L367 படமும் இணைவதன் மூலம் மலையாள திரையுலகில் ஒரு சக்தி வாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தன்னுடைய பணியையும், பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தி கொள்கிறது.

Tuesday, 27 January 2026

Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town

 *Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town*



Passion Studios, architects of smart entertainers that masterfully fuse mass appeal with meaningful content, launches Rowdy & Co, starring Siddharth in the lead role, through an industry-first teaser poster campaign tied directly to its premise. Unlike conventional teasers, this innovative rollout: “recruit rowdies, select them, reveal on first look”, progressively unveils lead actors, generating organic buzz through concept-driven reveals.


Passion Studios Sudhan Sundaram, produces this boundary-pushing comedy, with the electrifying title look motion poster released recently following a unique trend of  morning pre-buzz and official announcement.


Karthik G Krish, director of well-celebrated film Kappal, delivers his rawest, most colloquial vision yet.

 

Siddharth plays the lead role in this film, which features Raashi Khanna as the female lead. With comedy heavyweights Yogi Babu, Redin Kinsley, Sunil Reddy, Prankster Rahul, Vetri Mani, Charles Vinodh, and Thani Oruvan villain Vamsi Krishna, the film forms an explosive ensemble.


Aravind Singh's dynamic visuals, Pradeep E Raghav's crisp cuts, Aaruchaamy's immersive production design, Reva's infectious five-song soundtrack, are expected to be the cherry picks of this film. 


Aiming for pan-India release across Tamil, Telugu, Hindi, Kannada, and Malayalam, Rowdy & Co nears post-production finish. With the innovative approach of unveiling the first look,  Passion Studios promises that the film will be a biggest entertainer for universal crowds.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் வழங்கும், நடிகர்கள் சித்தார்த், ராஷி

 *பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் வழங்கும், நடிகர்கள் சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் ’ரெளடி & கோ’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது!*



தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ’ரெளடி & கோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. வழக்கமான முயற்சியாக அல்லாமல், இந்தப் படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட்டை புதிய முறையில் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ‘ரெளடிகளை தேர்ந்தெடு, அவர்களை படத்தின் முதல் பார்வையில் வெளியிடு’ என்பதுதான் அந்த கான்செப்ட். இதன் மூலம் படத்தின் முன்னணி நடிகர்களையும் இந்த போஸ்டர் வெளிப்படுத்துவது ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிக்கும் இந்த வித்தியாசமான காமெடி திரைப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


’கப்பல்’ படம் மூலம் பாராட்டப்பட்ட இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் வித்தியாசமான முயற்சியாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்க, ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்ல்ஸ் வினோத் மற்றும் ’தனி ஒருவன்’ வில்லன் வம்சி கிருஷ்ணா ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் ‘ரெளடி & கோ’ திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நிறைவு செய்து வருகிறது. படத்தின் முதல் பார்வையை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என பேஷன் ஸ்டுடியோஸ் உறுதியளிக்கிறது.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


ஒளிப்பதிவு: அரவிந்த் சிங், 

படத்தொகுப்பு: பிரதீப் இ. ராகவ், 

புரொடக்‌ஷன் டிசைன்: ஆறுச்சாமி, 

இசை: ரேவா.

STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – சிம்புவின் “சிலம்பாட்டம்” பிப்ரவரி 6 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது

 STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – சிம்புவின் “சிலம்பாட்டம்” பிப்ரவரி 6 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது!



சிலம்பாட்டம் திரைப்படம் விரைவில் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன்–மாஸ் படம், சிம்புவின் கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து இரட்டை வேடங்களில் சிம்பு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய இப்படம் விரைவில் மீண்டும் திரைக்குவருகிறது. 


லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன்,  டி.எஸ்.ரங்கராஜன் தாயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர் ஆதரவும் பெற்ற “சிலம்பாட்டம்”, காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி–படத் தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்


சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் “வேட்டையன்” மற்றும் “தாமரை” என்ற இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்தது  ரசிகர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில், சிலம்பக் கலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆக்‌ஷன் காட்சிகள், சிம்புவின் உடல் மொழி, டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனி அடையாளம் கொடுத்தன.


இயக்குநர் S சரவணன் இயக்கத்தில் உருவான “சிலம்பாட்டம்” படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிய பலமாக அமைந்தது. “சிலம்பாட்டம்” டைட்டில் பாடல் முதல் மெலடி, குத்து பாடல்கள் வரை அனைத்தும் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. சிம்புவுடன் இணைந்து சனுஷா, ஸ்நேகா ஆகியோர் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரங்கள், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது.


மாஸ் சிம்பு, ஆக்‌ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு—அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, “சிலம்பாட்டம்” ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும். இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி மீண்டும்

 திரைக்கு வருகிறது.

காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்

 **“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்**

https://youtu.be/rph2F0uX-A0?si=g2_0aIfdr8RBIdzm

Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்”  திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது.


ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது. காதுகளால் மட்டும் அல்ல, பார்வையாளர்களின் உள்ளுணர்வுகளாலும் கேட்க வைக்கும் ஒரு சினிமா அனுபவமாக  இது அமைந்துள்ளது.


விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகிய முன்னணி  நட்சத்திரங்களின் , நுணுக்கமும் உள்ளார்ந்த நடிப்பும், உணர்வுப்பூர்வமான மோதல்களும் நிறைந்த சுவடுகளை, டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லாததால், முகபாவனைகளும் நடிகர்களின் இருப்புமே கதையின் மையமாக இருக்கின்றது.


படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி .., 

“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மௌனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது.” என்றார். 


படம் குறித்து அரவிந்த்சாமி கூறுகையில்.., 

“சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மௌனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை ‘காந்தி டாக்ஸ்’ நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க  இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது.” என்றார். 


படத்தின் உணர்ச்சிப் பிணைப்பை பற்றி அதிதி ராவ் ஹைதாரி கூறியதாவது.., 

“வார்த்தைகளை விட  உணர்வுகள் தான் இதில்  என்னை அதிகம் நெகிழ வைத்தது. மௌனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது.”


சித்தார்த் ஜாதவ் கூறியதாவது.., 

“உரையாடலின்றி இவ்வளவு வலிமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது உண்மையிலேயே சிறப்பு. வார்த்தைகளைத் தாண்டி பேசும் சினிமாவின் உலகமொழியை இது மீண்டும் நினைவூட்டுகிறது.”


கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.


இசையின் உச்சமான ஏ ஆர் ரஹ்மான் கச்சேரிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, துணிச்சலான மற்றும் மரபு மீறிய ஒரு முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின்  டிரெய்லரை வெளியிட்டு, பாரம்பரிய சினிமா மற்றும் இசையின் சங்கமத்தை  கொண்டாடியுள்ளது படக்குழு. இந்த தனித்துவமான விளம்பர அணுகுமுறை, படத்தின் தத்துவத்தை, ஆழமான, அனுபவபூர்வமான மற்றும் கலை நோக்கத்தை பிரதிபலிக்கிறது.


“காந்தி டாக்ஸ்”  மூலம், Zee Studios  மற்றும் தயாரிப்பாளர்கள் விதிமுறைகளைத் தாண்டி, நுணுக்கமான நடிப்பைக் கொண்டாடும் மற்றும் இந்திய சினிமாவின் எல்லைகளை முன்னுக்கு எடுத்துச் செல்லும் படங்களுக்கான தங்கள் ஆதரவை  உறுதிப்படுத்தியுள்ளனர்.


2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்”  திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Gandhi Talks Trailer Unveiled: When Silence Speaks Louder Than Words

 Gandhi Talks Trailer Unveiled: When Silence Speaks Louder Than Words


Zee Studios, in association with Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios and Movie Mill Entertainment, unveils the trailer of Gandhi Talks a film that powerfully reinforces the makers belief in courageous, content-led cinema and storytelling that dares to break convention.

https://youtu.be/rph2F0uX-A0?si=g2_0aIfdr8RBIdzm

In an industry dominated by noise and spectacle, Gandhi Talks arrives with restraint and confidence. The trailer speaks volumes without dialogue, relying on evocative imagery, charged silences, and emotional depth. It is a cinematic statement that trusts its audience to listen not just with their ears, but with their instincts.


Headlined by a stellar ensemble cast featuring Vijay Sethupathi, Arvind Swami, Aditi Rao Hydari and Siddharth Jadhav, the trailer offers glimpses of performances rooted in nuance and internal conflict. With no spoken words to lean on, expressions and presence take centre stage.


Sharing his experience, Vijay Sethupathi says, “Gandhi Talks challenged me to express emotion without words. It’s a rare film where silence becomes the strongest dialogue.”


Echoing this sentiment, Arvind Swamy adds, “In a world drowning in noise, Gandhi Talks reminds us that silence can still shake a conscience.

This is a film where words step aside and truth walks in quietly. Rahman’s genius music becomes its language."


Aditi Rao Hydari reflects on the film’s emotional core, saying, “What moved me most was how emotions are felt rather than spoken. The film allows vulnerability and silence to coexist beautifully.”


For Siddharth Jadhav, the film reaffirmed cinema’s universal language. “Being part of a film that communicates so powerfully without dialogue was truly special. It reminds you why cinema speaks beyond words,” he shares.


Directed by Kishore Pandurang Belekar, Gandhi Talks is further elevated by the evocative music and background score of A R Rahman, where music becomes the emotional voice of the narrative. His compositions breathe life into the silences, while the voices of accomplished singers add depth and resonance to the film’s unspoken moments.


In a bold and unconventional move, the makers released the trailer three days ahead of its musical culmination an A R Rahman concert marking a rare and thoughtful convergence of cinema and live music. This distinctive promotional approach mirrors the film’s own philosophy immersive, experiential, and driven by artistic intent.


With Gandhi Talks, Zee Studios and the producers once again reaffirm their commitment to films that challenge norms, celebrate nuanced performances, and push the boundaries of Indian cinema.


Gandhi Talks releases in theatres on 30th January 2026.

Monday, 26 January 2026

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love

 *தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!*




இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’.


‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும்.


திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அதுபோல், ’VOWELS’ திரைப்படம் ஐந்து தனித்துவமான கதைகள் மூலம் காதலை வெளிப்படுத்தும். ஒவ்வொரு கதையும் ஒரு உயிரெழுத்தை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட உணர்வை பிரதிபலிக்கும். 


A – Attraction (ஈர்ப்பு): முதல் பார்வையிலேயே காதல்- உண்மை, இளமை, கட்டுப்பாடற்ற உணர்வு.

E – Emotion (உணர்ச்சி): ஆழமான பிணைப்பு- தியாகம், ஏக்கம், பிரிவு.

I – Intimacy (நெருக்கம்): உடல் மற்றும் மன நெருக்கம்- ஆசை, பற்றுதல், பலவீனம்.

O – Obsession (பிடிவாதம்): இருண்ட காதல்- குற்றம், தனக்கு மட்டுமே என்ற உணர்வு, த்ரில்லர்.

U – Unconditional (நிபந்தனையற்ற காதல்): கட்டுபாடுகளற்ற தூய காதல்- கற்பனை, ஆன்மீகம், அர்ப்பணிப்பு.


ஒரு வரைபடம் போல இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்துவமான உணர்வுகளை பேசும். நெருக்கம், ஆசை, இழப்பு, அர்ப்பணிப்பு, மாற்றம் என அனைத்து உணர்வுகளும் இணைந்து காதலை அழகான மொழியாக சித்தரிக்கிறது. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர். 


*நடிகர்கள்:* யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து (தெலுங்கு புகழ்), பரத் போபண்ணா, ஷரத் ரவி, விஜயஸ்ரீ, காஜல் சௌத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஸ்ட், பீட்டர் கே, அக்ஷிதா போபையா, பரத் மைலாரி, ஹேமந்த் குமார், தர்ஷினி, பிரியங்கா சந்திரசேகர் மற்றும் அருள் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக் குழு:*

தயாரிப்பாளர்: ராஜு ஷெரேகர்,

ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி,

இசை: சரவண சுப்பிரமணியம், 

படத்தொகுப்பு: ஹரிஷ் கொம்மே,

கலை இயக்கம்: எம். கே. மதி.


ஐந்து உயிரெழுத்துகள்! ஐந்து கதைகள்!! ஒரே காதல் உலகம்!!!

Producer Raju Sheregar presents VOWELS

 *Producer Raju Sheregar presents*


*VOWELS - An Atlas of Love Unveiled Today with Title Look**




_*A never-before five stories of deepest emotions of love all set to enthrall the cinephiles.*_


Love begins with sound. With breath. With a vowel.


VOWELS - An Atlas of Love charts love's wild spectrum: from fantasy to crime, romance to desire, emotion to obsession. This vibrant screen journey explores different domains of love: tender yet dangerous, sacrificial yet murderous, enchanting in its duality. 


The creators have unveiled the film's title look today (January 26, 2026), inviting audiences to enter the terrains of diversified forms of love.


Vowels are the foundation of language: they carry tone, rhythm, and emotion, giving words their shape and life. VOWELS explores love through five distinct stories, each anchored in a vowel, each expressing a different emotional state:


A – Attraction: Love at first sight. Raw, youthful, impulsive.


E – Emotion: Deep bonding. Sacrifice, longing, separation.


I – Intimacy: Physical and emotional closeness. Desire, obsession, vulnerability.


O – Obsession: Dark love. Crime, possessiveness, thriller undertones.


U – Unconditional: Pure love beyond logic. Fantasy, spiritual, eternal devotion.


Structured as an Atlas rather than linear narrative, each story exists as its own emotional territory, complete and self-contained. Together, they form a shared map of love as lived language—intimacy, desire, loss, devotion, becoming. Not to be followed, but navigated. Spare in structure, rich in feeling. These stories are masterfully directed by Dhilip Kumar, Sangeethnath, Hemanth Kumar, Santhosh Ravi, and Jagan Rajendran.


Bringing this terrain alive is an ensemble star-cast including Yugi Sethu, Chinni Jayanth, Samyuktha Vishwanathan, Raj Ayyappa, Deepak Paramesh, Nandu (Telugu fame), Bharath Bopanna, Sharath Ravi, Vijayashree, Kajal Choudhary, Sidhu Kumaresan, Vijyetha Vashist, Peter K, Akshitha Bopaiah, Bharath Mylari, Hemanth Kumar, Dharshini, Priyanka Chandrashekar, and Arul Kumar. 


Produced by Raju Sheregar, the film features Keerthan Poojaary and Sandeep Alluri capturing every nuance through cinematography, Saravana Subramaniam composing the emotional pulse, Harish Komme editing with precision, and M K Madhi crafting atmospheric worlds. 


Five vowels. Five stories. One terrain.

Seven Screen Studio S.S. Lalit Kumar presents “Raawadi” starring Basil Joseph & L.K. Akshay

 Seven Screen Studio S.S. Lalit Kumar presents “Raawadi” starring Basil Joseph & L.K. Akshay Kumar Title, First Look and Character Glimpse unveiled!*



*Rockstar Anirudh Ravichander unveils the Title, First Look and Character Glimpse of Raawadi*


“Raawadi” starring Basil Joseph and L.K. Akshay Kumar in the lead roles, produced by S.S. Lalit Kumar of Seven Screen Studio, is simultaneously made in Tamil and Malayalam with the same title. The production team has announced that the film’s shooting is briskly progressing as planned.


Raawadi, marking the directorial debut of Vignesh Vadivel, features a powerhouse ensemble star-cast including L. K. Akshay Kumar, John Vijay, Sathyan, Jaffer Sadiq, Noble K. James, Arunachaleswaran P.A., Shariq Hassan, and actress Aishwarya Sharma, among others. Adding further star value, leading Malayalam actor Basil Joseph plays a pivotal role in the film.


The cinematography is handled by Leon Britto, and music is composed by Jen Martin. Editing is being done by Barath Vikraman, and art direction is overseen by P. S. Hariharan. Priya serves as the costume designer, with K. Arun and Manikandan as executive producers. L. K. Vishnu Kumar is associated with the project as the co-producer. Raawadi is being made as a full-fledged comedy entertainer.


While the film’s shooting is progressing at a brisk pace, the title,  first look  and character glimpse have been launched by Rockstar Anirudh Ravichander on his social media page and conveyed his wishes to the entire team.


Showcasing the distinctive looks of Basil Joseph, L.K. Akshay Kumar, Jaffer Sadiq, Noble K. James, and Arunachaleswaran, have ignited massive excitement among fans. The film is gearing up for a summer release!



Link : https://youtu.be/XFkH5Z-ZtCk

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில்

 *செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'ராவடி ' படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*



*' ராக் ஸ்டார் 'அனிரூத் வெளியிட்ட 'ராவடி' படத்தின் டைட்டில் - ஃபர்ஸ்ட் லுக் & கேரக்டர் கிளிம்ப்ஸ்*

Link : https://youtu.be/XFkH5Z-ZtCk

நடிகர்கள் பஸில் ஜோசப் - L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ' ராவடி ' எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ' ராவடி' எனும் திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின்  டைட்டில் - ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை இசையமைப்பாளர் 'ராக் ஸ்டார்' அனிருத் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் நடிகர்கள் பஸில் ஜோசப் - L.K. அக்ஷய் குமார்- ஜாபர் - நோபல்- அருணாசலம் -  ஆகியோரின் தோற்றங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இப்படம்-  எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.