Saturday, 24 January 2026

ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - நகுல் நடிக்கும் " காதல் கதை சொல்லவா "

 ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி -  நகுல் நடிக்கும் " காதல் கதை சொல்லவா " பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. 




























































முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் "காதல் கதை சொல்லவா"


பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் " காதல் கதை சொல்லவா " 


பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின்  மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் " காதல் கதை சொல்லவா"


 இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.


ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளார்.


வசனம் - கண்மணி ராஜா

ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

M. ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இருவரும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

கண்மணி ராஜா, முத்தமிழ், கவிதாரவி, K. பார்த்திபன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

C. பிரசன்னா, சுஜித், பிரவின்.G மூவரும் நடனம் அமைத்துள்ளனர்.

எடிட்டிங் - ஜீவன்

கலை இயக்கம் - சிவா யாதவ்

ஸ்டண்ட் - T. ரமேஷ்

தயாரிப்பு நிறுவனம்- பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பாளர் - ஆகாஷ் அமையா  ஜெயின்.


கதை எழுதி திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் - சனில் 


மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.


படம் பற்றி இயக்குனர் பகிர்ந்தவை...


மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் வருகிறார்.


“காதல் கதை சொல்ல வா” – மனித உணர்வுகள், நம்பிக்கை, காதல், தியாகம், மற்றும் மனிதநேயத்தின் வலிமையை சொல்கின்ற  மனதை நெகிழ வைக்கும் படமாக இருக்கும்.


படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாககிறது.

No comments:

Post a Comment