Friday, 6 March 2026

99/66-Movie Review

 99/66-Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம 99/66 படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது MS Murthy. . இந்த படத்துல Rachitha Mahalakshmi, Swetha, Sabari, Rohind, Bhavan Krishna, Singam Puli, Mullai, Kothandam, KR Vijaya, PL Thenappan, MS Murthy னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



ratchitha வும் sabari யும் husband and wife . இவங்க ரெண்டு பேரும் ஒரு apartment ல இருக்கற 66 வது number இருக்கற வீட்டை வாங்கி அதுல  தங்குறாங்க. இதே apartment ல இருக்கற 99 வது number வீட்ல தான் swetha இருப்பாங்க. swetha வும் ratchitha வும்  நல்ல close friends ஆயிடுறாங்க. இதுனால அடிக்கடி ரெண்டு பேரும் சந்திச்சு பேச ஆரம்பிக்குறாங்க. இந்த apartment ஓட தலைவர் பதவி ல இருக்காரு MS murthy. இவரு night நேரத்துல யாருக்கும் தெரியாம apartment அ விட்டு வெளில போக பாக்குறாரு ஆனா ஒரு ஆந்தை இவரை வெளில விடாம தடுக்குது. இந்த மாதிரி தினமும் நடக்குது. 


பணத்துக்காக ratchitha வை கொலை பண்ணனும் sabari நெறய முயற்சி பண்ணுறாரு. ஆனா இந்த எல்லா plan ல இருந்தும் எப்படியோ ratchitha தப்பிச்சிகிட்டே இருக்காங்க. ஒரு நாள் night திடுருனு sabari , swetha வை கொலை பண்ண போறாரு னு புரிஞ்சுகிட்டு இதை எப்படியாது தடுக்கணும் னு முடிவு பண்ணுறாங்க. அதுனால apartment ல இருக்கற மத்த families அ swetha வை காப்பாத்த help க்கு கூப்பிடுறாங்க. அப்போ தான் ratchitha க்கு ஒரு உண்மை தெரிய வருது அது என்னனா swetha ஏற்கனவே இறந்து போயிருப்பாங்க. அது மட்டுமில்ல 99 நம்பர் வீட்ல யாருமே கிடையாது னு தெரியவருது. அப்போ இவளோ நாளா swetha எப்படி ratchitha கண்ணுக்கு தெரிஞ்சாங்க? M S murthy எதுக்காக night நேரத்துல யாருக்கும் தெரியாம apartment அ விட்டு வெளில போகணும் னு நினைக்குறாரு? அவரோட இந்த முயற்சியை எதுக்காக ஆந்தை தடுக்குது? ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் பதிலா இருக்கு. 


பேய் படங்களுக்கு ஏத்த மாதிரி எல்லா thrilling ஆனா moments யும் இந்த படத்துல இருக்கு. ஒரு apartment குள்ள நடக்கற இந்த கதைக்கு நெறய twist and turns குடுத்து interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது ratchitha ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. முக்கியமா இவங்க உடம்புக்குள்ள ஆவி புகுந்து ஆக்ரோஷமா இருக்கற மாதிரி நடிச்ச portions எல்லாம் நல்ல இருந்தது. swetha புத்த மதத்தை follow பண்ணுறவங்களா நடிச்சிருக்காங்க. அதுனால யாருக்கும் எந்த தீங்கும் நடக்க கூடாது, எல்லார்கிட்டயும் அன்பா நடந்துக்கணும் னு நல்ல பொண்ணா நடிச்சிருக்காங்க. sabari அப்புறம் rohith க்கு இது முதல் படமா இருந்தாலும் இவங்களோட acting எதார்த்தமா இருந்தது. என்னதான் வெளில பாக்கும்போது இவங்க நல்லவங்களா தெரிஞ்சாலும் மறைமுகமா வில்லத்தனத்தை காமிச்சு audience யா மிரட்டிருக்காங்க னு தான் சொல்லணும். சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி இவங்களோட comedy scenes யும் ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematographer sevilo raja இந்த முழு படத்தையும் apartment ல வச்சு எடுத்திருக்காரு. என்னதான் ஒரே இடமா இருந்தாலும் camera angle மூலமா difference காமிச்சு கதையை இன்னும் strong பண்ணிருக்காரு. jayamurugan ஓட art direction அப்புறம் meenachi sundharam ஓட editing ரெண்டுமே இந்த  கதைக்கு கச்சிதமா பொருந்தி இருக்கு. கதை, திரைக்கதை, வசனம், songs , music direction , production  னு எல்லா பரிணாமத்துலயும் பக்காவா பண்ணிருக்காரு M S murthy.  apartment க்கு புதுசா குடி வரவங்களுக்கு நடக்குற அம்னோஷியம் தமிழ் சினிமா ல யதார்த்தமானது தான் இருந்தாலும் பெண்களுக்கு எதிரா நடக்கிற குற்றம், அந்த மாதிரி குற்றம் பண்ணுறவங்களுக்கு கிடைக்கவேண்டிய தண்டனை னு ஒரு social message  யும் சொல்லிருக்காரு. 


ஒரு பக்காவான திகில் படம் தான் இது. சோ miss  பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment