Friday, 10 April 2026

LIK Movie Review

LIK Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம LIK படத்தோட review அ தான் பாக்க போறோம். vignesh shivan  இயக்கி இருக்கற இந்த படத்துல pradeep ranganathan , yogibabu , sj surya , krithi shetty னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்தோட கதை 2040 ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. 2040 ல எல்லாமே technology தான். இந்த period ல ஒருத்தர் love பண்ணாங்க ந  அவங்களோட compatibility எப்படி இருக்கு னு ஒரு app மூலமா measure பண்ணுவாங்க, அந்த result அ வச்சு தான் அவங்க ஒன்னு சேருவாங்களா மாட்டாங்களா னு தெரிய வரும். இப்போ தான் vibe vassey வா நடிச்சிருக்க pradeep ranganathan அ அறிமுகம் பண்ணுறாங்க. இவரை organic world னு சொல்ல படுற ஒரு எடத்துல தான் வளந்துருப்பாரு. இந்த எடத்துல mobile phones க்கு தடை விதிக்க பட்டிருக்கும். அது மட்டும் இல்ல யாராவுது digital media வை தப்பா use பண்ணிருந்தாங்க ந அவங்கள இந்த எடத்துல தான் punishment மாதிரி தங்க வைப்பாங்க. இப்போ LIK ன்ற ஒரு app இருக்கும் இதை நடத்திட்டு வர company ஓட owner தான் suriyan அ நடிச்சிருக்க Sj surya. இந்த LIK app என்ன பண்ணனும்னா love பண்ணுறவங்களோட compatibility யா calculate பண்ணும் அதுமட்டும் இல்ல relationship சுமுகமா போக advice யும் குடுக்கும். இந்த app க்கு தான் vibe vassey , voice over குடுத்துருப்பாரு. 


vassey முதல் தடவையா dheema வா நடிச்சிருக்க krithi shetty யா சந்திக்குறாரு. ஆனா இவருக்கு அப்படியே opposite அ இருப்பாங்க dheema , இவங்க ஒரு social media influncer , அதுனால phone எப்பவுமே இவங்க கைல தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா இவங்களுக்குள்ள love வளர ஆரம்பிக்குது. ஆனா lik app இவங்களுக்கு compatibility score கம்மியா இருக்குனு result வந்துடுது. இதுனால dheema break up யும் பண்ணிடுறாங்க. இப்போ இது தான் இங்க பிரச்னையாவே இருக்கு. vassey emotions மேல நம்பிக்கை வைப்பாரு ஆனா dheema ஒரு சாதாரண app மேல நம்பிக்கை  வச்சு decision எடுக்கறாங்க.


கதை போக போக vassey தன்னோட காதலை நிரூபிக்க முயற்சி பண்ணுறாரு, அதே சமயம் love பண்ணுறதுக்கு ஒரு app யா நம்பனும் ன்ற கேள்வியையும் எழுப்புறாரு. ஒரு சில விஷயங்கள் இந்த படத்துல காமிக்கிறது ரொம்பவே பொருந்தும். நம்ம personal space க்கு எவ்ளோ தூரம் technology ஊடு உருவி இருக்கு ன்றதை யோசிக்கவும் வைக்குது. இந்த படத்தோட பெரிய highlight ந அது pradeep யும் sj surya வும் ஒண்ணா சேந்து இருக்கற scenes தான். படத்தோட second half ல தான் இவங்க ரெண்டு பேரும் இருக்கற scenes வரும் அதெல்லாம் நல்ல இருந்தது. இதுல முக்காவாசி scenes comedy அ தான் இருந்தது அதுனால பாக்குற audience க்கு கண்டிப்பா entertaining அ தான் இருக்கும். 


pradeep ranganathan  மறுபடியும் இந்த காலத்து youngsters க்கு ஏத்த மாதிரி ஒரு அருமையான படத்துல நடிச்சிருக்காரு. இவரோட performance அட்டகாசமா இருந்தது. Sj surya எப்பவும் போல mass  அ நடிச்சிருக்காரு. kriti shetty ஓட நடிப்பும் நல்ல இருந்தது. படத்துல supporting actors அ நடிச்சிருக்க Seeman, Yogi Babu, Gouri G Kishan, Sha Ra, Sunil Reddy, Anandraj, and Malavika,னு இவங்களோட acting யும் நல்ல இருந்தது. yogibabu ஓட comedy எல்லாமே ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. ஒரு robotic voice க்கு anirudh குரல் குடுத்திருக்காரு. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது vignesh shivan ஓட direction அப்புறம் writing எல்லாமே perfect அ இருந்தது. ஒரு simple ஆனா romantic story யா futuristic setting ல குடுத்திருக்காரு. அதுனால கதைக்களம் பாக்க புதுசாவும், வித்யாசமாவும் இருந்தது. anirudh ஓட bgm அப்புறம் songs எல்லாமே இந்த கதைக்கு அட்டகாசமா இருந்தது. முக்கியமா anirudh ஓட பழைய album song யும் இந்த படத்துல வச்சிருக்காரு. ravi varman ஓட cinematography அப்புறம் visuals எல்லாம் அட்டகாசமா இருந்தது. இந்த future setting க்கு ஏத்த மாதிரி visuals யும் vfx யும் use பண்ணிருக்காங்க, அதெல்லாம் நல்ல இருந்தது. 


மொத்தத்துல ஒரு engaging ஆனா interesting ஆனா கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம உங்க family ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment