Friday, 10 April 2026

TN 2026 Movie Review

 TN 2026 Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம TN 2026 படத்தோட review அ தான் பாக்க போறோம். Umapathy Ramaiah இயக்கி இருக்கற இந்த படத்துல  Natarajan Subramaniam (Natty) ,  Thambi Ramaiah, M.S. Bhaskar, Ilavarasu, Yashika Aannand, and Redin Kingsley னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



kulkunth kumar அ நடிச்சிருக்க natty north india வை சேந்தவரு. இவரோட ஆசையே நடிகன் ஆகணும்ன்றது தான் அதுனால தமிழ்நாடு க்கு வராரு. ஆனா அவரோட ஆசையா நிறைவேத்த யாரும் இவருக்கு உதவியாவும் இல்ல, அதே சமயம் பல தடைகளை சந்திக்க ஆரம்பிச்சாரு kulkunth kumar . இருந்தாலும் இவரு நடிச்ச முதல் படத்துல, இவரோட நடிப்பு பிடிச்சு போய் தம்பி ramaiah பல உதவிகளை செய்ய ஆரம்பிக்குறாரு. அது மட்டுமில்ல இவரோட வளர்ச்சிக்காக thambi ramaiah அவரோட சொத்தை கூட வித்துடுறாரு. இப்பிடி kulkunth kumar யும் தமிழ்நாட்டு லேயே பெரிய superstar அ மாறிடுறாரு. இவரோட ரசிகர் மன்றத்தை மக்களுக்கு உதவி செய்றதுக்காக மக்கள் மன்றம் னு மாத்தி வைக்குறாரு. இதுனால பலரும் இவரு அரசியல் க்கு வருவாரா மாட்டாரா ன்ற கேள்வி எழும்புது. இவரு அரசியல் க்கு வந்துடப்போறாரு னு பயந்து government யும் இவருக்கு பல பிரச்சனைகளை குடுக்க ஆரம்பிக்குறாங்க. இதுனால கோவமான kulkunth kumar அரசியல் ல இருக்கறதுக்காக ஒரு புது கட்சியை தொடங்கி வைக்குறாரு. அதுமட்டும் இல்ல 2026 ல தமிழ்நாட்டு ல நடக்க போற முதலமைச்சர் தேர்தல் ல கலந்துக்கவும் செய்றாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்தது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு. 


படத்தோட first half ல natty ஓட கதை, அவரு எப்படி cinema குள்ள அறிமுகம் ஆகுறாரு, எப்படி super star அ வளந்து வராரு றத்தை detailed அ காமிச்சிருக்காங்க. படத்தோட second half ல தான் natty ஓட அரசியல் களத்தை காமிக்கறாங்க. இதெல்லாம் பாக்கும்போது இப்போ reality ல நடந்துட்டு இருக்கற ஒரு நபர் அ பத்தி காமிக்க்ர விதமா அமைச்சிருக்கு. 


natty நடிச்சதுலயே இந்த படம் கொஞ்சம் வித்யாசமானதா இருக்கு னே சொல்லலாம். ஒரு நடிகன் ஓட வளர்ச்சி, அதுக்கு அப்புறம் அவரு தேர்ந்து எடுக்குற புது பாதை னு ஒரு  matured ஆனா acting அ வெளி படுத்தி இருக்காரு. salt and pepper look, அசத்தலான dialogue delivery னு audience அ அவரு பக்கம் இழுத்துருக்காரு னு தான் சொல்லணும். thambiramaiah தான் natti க்கு godfather மாதிரி எல்லாத்துக்கும் guide பண்ணுறாரு. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது darbuka shiva ஓட music and bgm super அ இருந்தது. cinematography அப்புறம் editing work பக்கவா குடுத்திருக்காங்க. 


ஒரு விறுவிறுப்பான கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment